SOUNDHARYA LAHARI 96-100 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 96-100- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி மொத்தம் 100 ஸ்லோகங்களையும் படித்து தெளிவாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்றோடு நிறைவேறிவிட்டது. எல்லாம் மஹாபெரியவா அனுக்ரஹம் என்று தான் சொல்வேன். மஹா பெரியவாளுக்கு பிடித்த ஆச்சார்யாளின் ஸ்லோகங்கள். நூறுக்கு மேல் மூன்று ஸ்லோகங்கள் வேறு யாரோ எழுதியது என்று சொல்லப்படுகிறது.

96, कलत्रं वैधात्रं कतिकति भजन्ते न कवयः श्रियो देव्याः को वा न भवति पतिः कैरपि धनैः । महादेवं हित्वा तव सति सतीनामचरमे कुचाभ्यामासङ्गः कुरवकतरोरप्यसुलभः ॥ ९६॥
Kalathram vaidhathram kathi kathi bhajante na kavayah Sriyo devyah ko va na bhavati pathih kairapi dhanaih; Mahadevam hithva thava sathi sathinam acharame Kuchabhyam aasangah kuravaka-tharor apyasulabhah.
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய: ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை: மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96

அம்பாளை பதிவிரதா தெய்வம் என்று போற்றுகிறார் ஆதி சங்கரர். பிரம்மாவினுடைய பத்னி ஸரஸ்வதி தேவியை எத்தனையோ கவிகள் நாடி அடையவில்லையா ? ஏதோ ஒரு வகையான செல்வத்தால் எவனோ ஒருவன் லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக ஆகி விடவி ல்லையா ? பதிவிரதைகளுக்குள் முதன்மையானவளே ! மஹாதேவனை விட்டு உனது நகில்களுடைய ஸம்பந்தமோ மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்தற்கு அரிது.மந்த்ரம், ஜபம், கல்வி இவைகளால் ஸரஸ்வதீ வல்லபன் ஆகலாம். ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கோண்டு லக்ஷ்மீபதி ஆகலாம். கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம்.ஆனாலும் எவருமே, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை வசப்படுத்திக்கொள்ள முடியாது.பூத்துக் காய்க்கும் முன் சில மரங்கள் பெண்களின் தழுவுதலுக்காக ஏங்குகின்றன. குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக்கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.

97 गिरामाहुर्देवीं द्रुहिणगृहिणीमागमविदो हरेः पत्नीं पद्मां हरसहचरीमद्रितनयाम् । तुरीया कापि त्वं दुरधिगमनिःसीममहिमा महामाया विश्वं भ्रमयसि परब्रह्ममहिषि ॥ ९७॥
Giram aahur devim Druhina-gruhinim agaamavidho Hareh pathnim padhmam Hara-sahacharim adhri-thanayam; Thuriya kapi thvam dhuradhigama-niseema-mahima
Maha-maya visvam bhramayasi parabhrahma mahishi.
கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97

97. பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே ! வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். – உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும், சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள். நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – மகாமாயை எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.

98 कदा काले मातः कथय कलितालक्तकरसं पिबेयं विद्यार्थी तव चरणनिर्णेजनजलम् । प्रकृत्या मूकानामपि च कविताकारणतया कदा धत्ते वाणीमुखकमलताम्बूलरसताम् ॥ ९८॥
Kadha kaale mathah kathaya kalith’alakthaka-rasam Pibheyam vidyarthi thava charana-nirnejana-jalam; Prakrithya mukhanam api cha kavitha-karanathaya Kadha dhathe vani-mukha-kamala-thambula-rasatham.
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம் பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம் ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98

98. தாயே ! லாக்ஷாரஸப்பூச்சுடன் கலந்துவரும் உன்னுடைய பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை பிரம்மவித்தையை நாடும் நான் எக்காலத்தில் பருகப் போகிறேன்.?. இயற்கையாகவே ஊமைகளுக்கும் கூட கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது – என்வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது ?கோகர்ண க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள மூகாம்பிகா க்ஷேத்திரத்தில் தனது பாத தீர்த்தத்தால் ஊமையை தேவி மகாவித்வானாகச் செய்த வரலாறு ஒன்று உண்டு.

99 सरस्वत्या लक्ष्म्या विधिहरिसपत्नो विहरते रतेः पातिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा । चिरं जीवन्नेव क्षपितपशुपाशव्यतिकरः परानन्दाभिख्यम् रसयति रसं त्वद्भजनवान् ॥ ९९॥
Saraswathya lakshmya vidhi hari sapathno viharathe Rathe pathivrithyam sidhilayathi ramyena vapusha
Chiram jivannehva kshapathi pasu pasa vyathikara Paranandabhikhyam rasayathi rasam twadjanavaan.
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர: பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

99. உன்னைப் பூஜிப்பவன் பிரம்மாவும் விஷ்ணுவும் கூடப் பொறாமை படக்கூடியவனாக கல்வியுடனும் செல்வத்துடனும் இன்பத்தை எய்துகிறான். மன்மதன் போன்ற உடல் அழகால் ரதி தேவியின் கற்பையும் கலங்கச் செய்கிறான். பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாக பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற இன்பரஸத்தை சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு அநுபவிக்கிறான்.“முதலில் ஸரஸ்வதி என்று இந்த சுலோகம் ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. முன்று தேவிகளும் கல்வி செல்வி வீரம் மூன்றும் கொடுப்பார்கள் என்றால் அந்த மூன்றும் நீ தருபவள். ஏகாந்தபக்தி அம்பிகை இடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு ? பிரம்மா வீட்டில் அது சம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாசகனுக்கு அதைவிட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்” – காஞ்சிப்பெரியவர்

100. प्रदीपज्वालाभिर्दिवसकरनीराजनविधिः सुधासूतेश्चन्द्रोपलजललवैरर्घ्यरचना । स्वकीयैरम्भोभिः सलिलनिधिसौहित्यकरणं त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम् ॥ १००॥
Pradhipa-jvalabhir dhivasa-kara-neerajana-vidhih Sudha-suthes chandropala-jala-lavair arghya-rachana; Svakiyair ambhobhih salila-nidhi-sauhitya karanam Tvadiyabhir vagbhis thava janani vacham stutir iyam.
100 ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம் த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம்

மந்த்ரம், ஜபம், கல்வி இவைகளால் ஸரஸ்வதீ வல்லபன் ஆகலாம். ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கோண்டு லக்ஷ்மீபதி ஆகலாம். கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் எவருமே, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை வசப்படுத்திக்கொள்ள முடியாது. பூத்துக் காய்க்கும் முன் சில மரங்கள் பெண்களின் தழுவுதலுக்காக ஏங்குகின்றன. குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக்கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது. பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே ! வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். – உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும், சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள். நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – மகாமாயை எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.

100. வாக்கிற்கு பிறப்பிடமாகிய தாயே ! கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும், அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும், சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும், உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்.
“ஸ்ரீ ஆசார்யர் எதற்குமேலே நினைக்க முடியாதோ அந்தத் தத்துவத்தைச் சொன்னவர். அவரே இப்படித் தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு சுலோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலன் ஊண்டாகும். எப்படி ? எல்லா வித்தைகளுக்கும் விரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்தச் சுலோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்தச் சுலோகம் சொல்லுவதற்கு இதுவும் ஓர் அடையாளம் போல் இருக்கிறது. – காமகோடி மஹா பெரியவா பரமாசாரியார்.

समानीतः पद्भ्यां मणिमुकुरतामम्बरमणि- र्भयादास्यादन्तःस्तिमितकिरणश्रेणिमसृणः । (variations भयादास्य स्निग्धस्त्मित, भयादास्यस्यान्तःस्त्मित) दधाति त्वद्वक्त्रंप्रतिफलनमश्रान्तविकचं निरातङ्कं चन्द्रान्निजहृदयपङ्केरुहमिव ॥ १०१॥
ஸமானீத: பத்ப்யாம் மணி முகுரதா மம்பரமணிர் பயா தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண: ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம் நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ

தேவியின் பாதாரவிந்தங்களுன் முன் ரத்னக் கண்ணாடிபோல் வைக்கப்பட்ட சூரியன் தன் கிரணங்களால் தேவியின் முகத்திற்குத் துன்பம் ஏற்படாதவண்ணம் தன் ஒளியைச் சுருக்கிக் கொள்கிறான். அந்த நிலையில் தேவியின் திருமுகத் தாமரை சூரியபிம்பத்தில் பிரதிபலிக்கிறது. சாதாரணத் தாமரை சந்திரனை கண்டால் வாடும். ஆனால் என்றும் மலர்ச்சியுடன் இருக்கும் இந்தத் தாமரை சூரியனுடைய இருதயத்தாமரை போல் விளங்குகிறது.

समुद्भूतस्थूलस्तनभरमुरश्चारु हसितं कटाक्षे कन्दर्पः कतिचन कदम्बद्युति वपुः । हरस्य त्वद्भ्रान्तिं मनसि जनयन्ति स्म विमलाः variations जनयामास मदनो, जनयन्तः समतुलां, जनयन्ता सुवदने भवत्या ये भक्ताः परिणतिरमीषामियमुमे ॥ १०२॥
ஸமுத்பூத ஸ்த்தூல ஸ்தனபர முரச் சாருஹஸிதம் கடாக்ஷே கந்தர்ப்பா: கதிசன கதம்பத்யுதி வபு: ஹரஸ்ய த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா பவத்யா யே பக்தா : பரிணதி ரமீஷா மிய முமே

உமாதேவியே ! அழுக்கற்ற உனது பக்தர்கள் பரந்து கனத்த மார்பைக் கொண்டவர்களாகவும், அழகிய புன்சிரிப்பை உடையவர்களாகவும், கடைக்கண் பார்வையில் மன்மதர்களாகவும், கடம்பமரம் போன்ற உடல் படைத்தவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது சிவனுடைய மனத்தில் ‘இவர்களும் தேவியேதானோ ?’ என்ற மயக்கம் ஏற்படுகிறது. (பக்தர்கள் அங்ஙனம் ஸாரூப்ய முக்தியை எய்திவிடுகிறார்கள்.)

निधे नित्यस्मेरे निरवधिगुणे नीतिनिपुणे निराघातज्ञाने नियमपरचित्तैकनिलये । नियत्या निर्मुक्ते निखिलनिगमान्तस्तुतिपदे निरातङ्के नित्ये निगमय ममापि स्तुतिमिमाम् ॥ १०३॥
நிதே நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே நிராகாடஜ்ஞானே நியம பரசித்தைக நிலயே நியத்யா நிர்முக்தே நிகிலநிகமாந்த ஸ்துதபதே நிராதங்கே நித்யே நிகமய மமாபி ஸ்துதிமிமாம்
செல்வமே ! என்றும் மகிழ்ச்சி பொங்கும் முகமுடையவளே ! எல்லையற்ற குணநிதியே ! நீதியில் வல்லவளே ! குறைவில்லாத ஞானம் உள்ளவளே ! சித்தத்தை அடக்கியவர்களிடம் உறைபவளே ! கட்டுப்பாடு அற்றவளே ! உபநிஷதங்கள் எல்லாம் போற்றும் உயர் நிலையே ! பௌஅம் அற்றவளே ! நித்தியம் ஆனவளே ! என்னுடைய இந்த ஸ்துதியையும் ஏற்றருள்வாய் !

ஸௌந்தர்யலஹரீ நூறு சுலோகங்களுடன் இன்னும் மூன்று சுலோகங்கள் சேர்ந்து காணப்படுகின்றன. அவை பகவத்பாதருடையது அன்று, பிறரால் சேர்க்கப்பட்டவை எனக்கருதி அவற்றிற்கு உரையெழுதவில்லை – லக்ஷ்மீதரர் இந்த மூன்று சுலோகங்களும் கைவல்யாசிரமர் எழுதிய ஸௌபாக்யவர்த்தினீ உரையில் காணப்படுகின்றன. இவை பிரயோக நூல்களில் காணப் படவில்லை.

ஸமானீத: பத்ப்யாம் மணி முகுரதா மம்பரமணிர் பயா தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம் நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ

தேவியின் பாதாரவிந்தங்களுன் முன் ரத்னக் கண்ணாடிபோல் வைக்கப்பட்ட சூரியன் தன் கிரணங்களால் தேவியின் முகத்திற்குத் துன்பம் ஏற்படாதவண்ணம் தன் ஒளியைச் சுருக்கிக் கொள்கிறான். அந்த நிலையில் தேவியின் திருமுகத் தாமரை சூரியபிம்பத்தில் பிரதிபலிக்கிறது. சாதாரணத் தாமரை சந்திரனை கண்டால் வாடும். ஆனால் என்றும் மலர்ச்சியுடன் இருக்கும் இந்தத் தாமரை சூரியனுடைய இருதயத்தாமரை போல் விளங்குகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *