MIND IS A MONKEY – J K SIVAN

மனதின்  லீலை  –  நங்கநல்லூர்  J K  SIVAN

கடல்  என்ற வார்த்தையை நாம் உபயோகிக்கிறோமே  அப்போது மனதில் தோன்றுவது ஏதோ ஆழமான  அகலமான, நீளமான ஒன்று, எல்லையில்லாதது போல் தெரிவது என்று தானே. அப்படி தான் பக்தியை, அறிவை, ஞானத்தை, மனதில் அன்பை,  கடல் என்கிறோம்.  சமுத்திரத்தை இப்போது அளந்து ஆழம் நீளம், அகலம்  எல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால்  ஞானம் அறிவு இதற்கெல்லாம்  அளவே  இல்லை.
பகவத்  கீதை ஆழம்  காண முடியாத  ஒரு  ஞானக்கடல்.அதில் வரும்  ஒவ்வொரு வார்த் தைக்கும்  ஒவ்வொரு நிமிஷமும்  புதுப்புது  அர்த்தம்  தோன்றும்.  அனுபவம் தான்  அதை விளக்கும்.  அதன்  ஒவ்வொரு  கருத்தும் புதிது புதிதாக  தோன்றிக்கொண்டே வரும். அது தான்  அதன் ரகசியம். புனிதமானது.”
 கங்கை தான்  புனிதம்.  அதில்  தான் ஒரு தரமாவது குளிக்கவேண்டும் என்று சொல்கிறோம்.  அதில் குளிப்பவனுக்கு புண்யம்.  முக்தி.  ஆனால்  கீதையை  கொஞ்சம்  புரிந்து கொண்டாலும்  கீதை  என்கிற  கங்கையில்  குளிக்கின்றவன்  தான்  மட்டுமல்ல  அதை அடுத்தவனுக்கும் சொல்லி  அவனையும்  கரையேற்ற முடியும். ஆகவே  கங்கையைவிட கீதை புனிதமானது.’
”கீதையை  படிச்சாலே  ஞானம்  வந்துவிடுமா?  மேலே  பறக்கும் மனிதனால்  கீழே  அழகிய அருவிகள், மலைச் சிகரங்கள், நதிகள்,   பள்ளத்தாக்குகள்  இயற்கை  வளம்,  ஆக்ரா  தாஜ் மஹால்,  சிதம்பரம் கோவில்,  தஞ்சாவூர்  கோவில்  எல்லாம்  பார்த்து  மகிழமுடிகிறது. ஆனால் உயரே பறக்கும்  கழுகு  எங்கே  செத்த  எலி,  நாய், பெருச்சாளி  இருக்கிறது  என்று  தான்  தேடுகிறது. அதன் கண்ணில் வேறேதும் படாது.   எனவே  எல்லாமே  யார்  எதை  தேடுகிறார்கள்  என்பதைப்  பொறுத்து அமைகிறது.  ஒரு நாளைக்கு  பத்து ஸ்லோகம்  படிக்கணும்  என்று  கணக்கு  பண்ணி  படிக் கிறவன்  ஸ்லோகத்தின்  எழுத்துகளை மட்டும்  தான்  பார்க்கிறான். ஒரு  ஸ்லோகத்தை மட்டும்  எடுத்துக் கொண்டு  யோசித்து  அதன்  ஒவ்வொரு வார்த்தையையும்  அனுபவிப்பவன் கோடி  கோடி  அர்த்தங்களை  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு விதமாக  அனுபவிக்கிறான். அதால்  தான்  கீதை  தன்னுடைய  தனித் தன்மையை  என்றும்  தாங்கிக்கொண்டு  வருகிறது. புரிகிறதா?
கீதையை   படிக்கிறபோது  வேகமாக  படிக்காமல் மெதுவாக  படிக்க வேண்டுமா? என்று கேட்கலாம்.
கடலில்  நீந்துவதும்  மூழ்குவதற்கும்  என்ன வித்யாசம் என்று நமக்கு தெரியுமல்லவா?  நீரில்  நீந்துகிறவன்  கொஞ்ச நேரம்  கை காலை அசைத்து  நீந்திவிட்டு  நீரிலிருந்து கரைக்கு வெளிவருகிறான்.  நீரில் மூழ்குவனுக்கு  மட்டும் தானே தான் முத்து கிடைக்கும்.  அப்படி குளிப்பதை தானே  முத்துக்குளிப்பது  என்கிறோம்.   கீதையை மேலோட்டமாக  படிப் பதற்கும்  அதை  ஆழ்ந்து ரசித்து புரிந்து  படிப்பதற்கும்  இது தான்  வித்யாசம்.”  

கடவுள்  என்கிறோமே அது  நாம் எதை கொண்டாடுகிறோமோ  அந்த  சாமி தானே, நம்ம வீட்டு பிள்ளையார்  தானே என்று கேட்கலாம்.

எல்லாமே  கொஞ்சம் நிதானமாக யோசித்தால் நன்றாக புரியும்.  யோசிக்க  ஆரம்பிப்பதே ஞானம் உதயமாவதற்கு, பெறுவதற்கு ஆதாரம். அப்போது புரிதல்  சுலபமாகும்.
கடவுள் ஒரு  உருவமற்ற  அருவம்.  காலம் நேரம், ஆரம்பம், முடிவு, ஆண்  பெண் என்றெல்லாம்  பிரிக்கமுடியாத  ஒரு சக்தி.  அது  எல்லாவற்றிலும்  எல்லோரிலும்  நிறைந்து இருக்கிறது.  ஞானிகள்  அதை  பிரம்மம்  என்கிறார்கள்.  சர்வம்  பிரம்ம மயம்  என்றால்  எங்கும் எதிலும் பிரம்மம் தான் காணப்படுகிறது என்று  பொருள்.  கல்லாக  உறைந்திருக்கும் பனிப்பாறையும் நீர்  தான்,   அது உருகி  ஓடும்  நீண்ட நதியும் நீர் தான். அது உஷ்ணமடைந்து ஆவியானாலும்  நீர் தான். ஒன்றே  பலவாக  பலவித  பேர்களில்  காட்சி தருவது போல் தான் கடவுளின் பல அவதாரங்கள், அவற்றின்  பெயர்கள்.
பள்ளி வகுப்பில்  40  குழந்தைகளுக்கும்  ஒரே  கலரில் ஒரே மாதிரியான சட்டை கொடுத்து அதை எல்லாம் எப்படி ஒவ்வொன்றும் யாருடையது என்று  பிரித்துக் கொள்வது. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு அடையாளம் நமக்கு தெரிந்தது இருக்கவேண்டும் அல்லவா.
லாண்டிரியில்  சலவை செய்ய கொடுத்த வெள்ளை சட்டைகளில் நமது எது?  நமது
பெயர் முதல் எழுத்து, ஒரு  அடையாளம்  வைத்து  இது  எனது இது  உனது  என்று  பிரிக்கி றோம் .  அது போல்,  அருவமான பிரமத்துக்கு  நமக்கு பிடித்த  ஒரு  உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து  அதற்கு  பூஜை  வழிபாடு  எல்லாம்  செய்கிறோம்.  எல்லாரிலும்  இருக்கும் பிரம்மம்  நம்  ஒவ்வொருவரிலும் இருக்கிறது. அதை  ஞாபகப் படுத்தத்தான்  ஒரு  சிறு வாக்கியம் அமைத்திருக்கிறார்கள்  நமது முன்னோர்கள். மஹா வாக்கியம் என்று பெயர் அதற்கு. அதில் ஒன்று  ”தத்  த்வம் அஸி”.
 ஆணோ பெண்ணோ   இல்லாத அந்த  பரமம் நீயாக  இருக்கிறது. அதை  உணர்ந்தவன்  ‘அஹம்  பிரம்மாஸ்மி”   நான் அந்த  பிரம்மமானவன்  என்று  உணர்ந்து மற்றவனையும் அவ்வாறே  மதித்து  அவனுக்கு உண்டான  கவுரவம், மரியாதை,  மதிப்பு  எல்லாம் தரவேண்டும் அந்த  பிரமத்துக்குரிய  அன்பை  செலுத்தவேண்டும். ”  என்பது மஹா வாக்ய அர்த்தம்.
இதெல்லாம்  மனசு  சம்பந்த பட்டது தானே.  மனசு  நம்  எல்லோருக்குள்ளும்  இருந்து  நம்மை ஆட்டி வைக்கிறது.  அதை  நல்ல  சிந்தனைகளில்  ஈடுபட  செய்வதால்  அதை  தவறான எண்ணங்களில்   செல்லாமல் ( திருட்டு, பொய், கபடம், ஹிம்சை,   தடுமாற்றம்,  கோபம், ஆத்திரம்,  பொறாமை,  தீய  சகவாசம்)  வேறு படுத்தி  நல்லவழியில் செலுத்து கிறோம். அமைதி கிடைக்கிறது.அப்படியென்றால்  பூஜை  எல்லாம்  பண்ணவேண்டாமா.  வெறுமே உட்கார்ந்து  சிந்தனை பண்ணால்  போதுமா?
பூஜை  செய்யும்போது  நாம்  நம்மை   மீறி ஒரு  உயர்ந்த  சக்தி இருப்பதை உணர்கிறோம். அது  தான்  நம்மை  வழி நடத்துகிறது  என்று  நம்புகிறோம். கண்ணால் காண  முடியாத  அதை, கண்ணெதிரே  பார்க்கும்  ஒரு  பொருளாக,  உருவமாக   நமக்கு பிடித்தமாதிரி அலங்கரித்து  அதற்கு   வேண்டிய மரியாதைகளைச் செய்து, நன்றியோடு  திருப்தி படுத்துகிறோம்  என்று  மனம்  சந்தோஷப்படுகிறது.  அது தான்  பூஜை.  ஆச்சு  மணி  எட்டு  சீக்கிரம்  பூஜை  பண்ணி விட்டு  பஸ்   ரயில் ஆட்டோ  பிடித்து ஆபிஸ்   போகவேண்டும் என்று  ஆபிஸ் அசவுண்டண்ட்டை மனதில் நினைத்துக்கொண்டு  வீட்டில்  அதிகாரம் பண்ணி  பாதி  மொபைல்  டெலிபோன் ஸ்டாக்  மார்க்கெட்   பேச்சோடு  செய்வது  கடவுள் வழிபாடு இல்லை.  காலத்தை  வீணாக்குவது.வெறும் வீணான விளையாட்டு.
பட்டினத்தார்  ரொம்ப அழகாக ஒரு பாடல் இயற்றி இருக்கிறார்: படியுங்கள் அனுபவியுங்கள்:

”கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே”

அடேய்  பரமேஸ்வரா,  என் கை  சம்பந்தமில்லாமல் ஏதோ மணி அடிக்கிறது, பார்வை வாசலில் யார் போகிறார்கள் என்று தேடுகிறது, மனதில் ஏதோ எவனைப்பற்றியோ நினைப்பு.  நாக்கு  மனைவியை எதற்கு திட்டுகிறது. மூக்கு ஏதோ மசாலா வாசனை அடுத்த பிளாட்டிலிருந்து வருவதை ருசிக்கிறது, காது டிவியில் ஒரு அரசியல் வியாதி இன்னொரு மலத்தை திட்டுவதை கேட்கிறது.  நானோ உனக்கு பூஜை வழக்கம் போல் பண்ணுகிறேன் இதை நீ எப்படி ஏற்றுக்கொள்வாய்? என்று கேட்கிறார்.
மனசு  ஒன்றி  ஈடுபடும்போது  வேறு எதுவும் இருக்க இடமில்லை. அதை தான்  இரண்டறக்
கலப்பது என்கிறோம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

2 Comments

    • Namaskaram mama,
      Bhagavan Gita is Eternal.

      Very good song about Control of the mind by Pattinathar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *