CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN

2.1 अनृतं साहसं माया मूर्खत्वमतिलोभिता ।अशौचत्वं निर्दयत्वं स्त्रीणां दोषाः स्वभावजाः ॥ ०२-०१
அன்ருதம் ஸாஹஸம் மாயா மூர்க²த்வமதிலோபி⁴தா ।அஶௌசத்வம் நிர்த³யத்வம் ஸ்த்ரீணாம் தோ³ஷா: ஸ்வபா⁴வஜா: ॥

சரளமாக சாதுர்யமாகப் பொய் சொல்வது, வேகம், அசட்டு தைர்யம், சிரித்து மழுப்புவது, கருணையின்மை, அறியாமை, பொறாமை, பேராசை, கொடுமை படுத்துவது இதெல்லாம் பெண்களின் இயற்கை ஸ்வபாவம் என்கிறான் சாணக்கியன். என்னய்யா சொல்கிறாய் நீ என்று கேட்டால் ” நான் சொன்னது என் காலத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றி. உங்கள் காலத்துப் பெண்களை பற்றியா சொன்னேன், நீ ஏன் சண்டைக்கு வருகிறாய்” என்பார் கௌடில்யர். அவர் சொல்வதும் வாஸ்தவம் தானே.

2.2 भोज्यं भोजनशक्तिश्च रतिशक्तिर्वराङ्गना ।विभवो दानशक्तिश्च नाल्पस्य तपसः फलम् ॥ 2.2
போ⁴ஜ்யம் போ⁴ஜநஶக்திஶ்ச ரதிஶக்திர்வராங்க³நா ।விப⁴வோ தா³நஶக்திஶ்ச நால்பஸ்ய தபஸ: ப²லம் ॥ 02-02
bhojyaṃ bhojanaśaktiśca ratiśaktirvarāṅganā ।vibhavo dānaśaktiśca nālpasya tapasaḥ phalam ॥ 02-02

இலையில் பதினாறு பதினேழு அயிட்டங்கள் வைத்தாலும், ஒன்றையும் விடாமல் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடு பவர்களும் உண்டு. சில கல்யாணங்களில் சாப்பிடும்போது பக்கத்தில் வாரி வளைத்து உண்ணும் ஆசாமிகளை பார்த்து அதிசயித்திருக்கிறேன். நிறைய இலைகளில் பாதிக்கு மேல் உணவு வீணாகத்தான் போகும். என் இடதுகை உயர தூக்கி மறித்து எதுவும் போடாதே வேண்டாம் என்று மோர் சாதம் சாப்பிடும் வரை நீட்டியே இருக்கும். நம்மால் சாப்பிட முடியாதே.

ஆண்மையோடு, கம்பீர உடல் திண்மையோடு , வசதி இருந்தபோது வாரிக் கொடுக்கும் மனஉறுதி இதெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

2.3 यस्य पुत्रो वशीभूतो भार्या छन्दानुगामिनी । विभवे यश्च सन्तुष्टस्तस्य स्वर्ग इहैव हि ॥ 2.3
yasya putro vaśībhūto bhāryā chandānugāminī ।vibhave yaśca santuṣṭastasya svarga ihaiva hi ॥ 02-03
யஸ்ய புத்ரோ வஶீபூ⁴தோ பா⁴ர்யா ச²ந்தா³நுகா³மிநீ । விப⁴வே யஶ்ச ஸந்துஷ்டஸ்தஸ்ய ஸ்வர்க³ இஹைவ ஹி ॥ 02-03

எவன் இந்த உலகத்திலேயே கஷ்டப்படாமல் ஸ்வர்கத்தில் இருப்பதுபோல் சுகமாக இருப்பவன் தெரியுமா? அவன் வேறு யாருமில்லை, எவனுடைய மகன் அவன் சொல்லைத் தட்டாமல் சொன்னபடி கேட்கிறானோ, எவன் மனைவி அவன் மனம் கோணாமல் அவன் விருப்பங்களை நிறைவேற்றுகிறாளோ, எவன் தனது செல்வத்தை இருப்பதே போதும் இனி வேண்டாம் என்று திருப்தியோடு உள்ளவனோ அவன் தான் ஸ்வர்கவாசி. யாரேனும் தெரிந்தால் எனக்கும் காட்டுங்கள்.

2.4 ते पुत्रा ये पितुर्भक्ताः स पिता यस्तु पोषकः ।तन्मित्रं यत्र विश्वासः सा भार्या यत्र निर्वृतिः 2.4
te putrā ye piturbhaktāḥ sa pitā yastu poṣakaḥ ।tanmitraṃ yatra viśvāsaḥ sā bhāryā yatra nirvṛtiḥ ॥ 02-04
தே புத்ரா யே பிதுர்ப⁴க்தா: ஸ பிதா யஸ்து போஷக: । தந்மித்ரம் யத்ர விஶ்வாஸ: ஸா பா⁴ர்யா யத்ர நிர்வ்ரு’தி: ॥ 02-04

அப்பா சொல் தட்டாதவர்கள் தான் பிள்ளைகள். பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குபவன் தான் அப்பா. எவன் நம்பிக்கைக்கு பாத்திரமோ அவன் தான் உண்மை நண்பன், கணவன் மனம் கோணாமல் திருப்த்தியாகவும், அவன் அமைதியோடு வாழவும் உதவுகிறாளோ அவளே நல்ல மனைவி என்கிறான் சாணக்கியன். அந்த காலத்திலும் ஏதேதோ ப்ராப்ளம் இருந்ததால் தான் இந்த சாணக்ய நீதியோ?

2.5 परोक्षे कार्यहन्तारं प्रत्यक्षे प्रियवादिनम् ।वर्जयेत्तादृशं मित्रं विषकुम्भं पयोमुखम् ॥ ०२-०५
parokṣe kāryahantāraṃ pratyakṣe priyavādinam ।varjayettādṛśaṃ mitraṃ viṣakumbhaṃ payomukham ॥ 02-05
பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதி³நம் । வர்ஜயேத்தாத்³ரு’ஶம் மித்ரம் விஷகும்ப⁴ம் பயோமுக²ம் ॥
Avoid him who talks sweetly before you but tries to ruin you behind your back, for he is like a pitcher of poison with milk on top.

ஐயா சாமி, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் முகத்துக்கு எதிரே உங்களை புகழ் பாடி, முகஸ்துதி செய்துவிட்டு கொஞ்சமும் நன்றியில்லாமல் உங்களிடம் நன்றாக வாங்கி தின்றுவிட்டு உங்கள் முதுகுக்கு பின்னால் கூரான கத்தியை செருகுபவனை அடையாளம் புரிந்து கொண்டு அவனை நெருங்கவிடாதீர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, அழகான வெண்ணிற பால் கல்கண்டு குங்குமப்பூ போட்டு உங்கள் எதிரில் இருந்தாலும் கொடிய விஷம் கலந்த பால் போல.

न विश्वसेत्कुमित्रे च मित्रे चापि न विश्वसेत् ।कदाचित्कुपितं मित्रं सर्वं गुह्यं प्रकाशयेत् ॥ 06 ॥
na viśvasetkumitre ca mitre cāpi na viśvaset ।kadācitkupitaṃ mitraṃ sarvaṃ guhyaṃ prakāśayet ॥ 02-06
ந விஶ்வஸேத்குமித்ரே ச மித்ரே சாபி ந விஶ்வஸேத் । கதா³சித்குபிதம் மித்ரம் ஸர்வம் கு³ஹ்யம் ப்ரகாஶயேத் ॥ 02-06
இப்போது நாம் யூ ட்யூபில் பார்ப்பது, வாட்ஸாப்பில் படிப்பது அதிர்ச்சி அடைவது கோடிக்கணக்கில் ஏமாற்றுதல், திருட்டு வேலை,கொள்ளை, எல்லாம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே சாணக்கியன் யூகித்து நடக்கக்கூடியது என்று அறிந்த விஷயம் தான். அவன் சொல்லும் அறிவுறை: கெட்ட சகவாசம் வேண்டாம். அவனை நம்பி நட்டாற்றில் முழுகாதே. நன்றாக தெரியாதவனுடன் நட்பு வேண்டாம். உன் மீது கோபம் வந்தால், அவன் தப்பிக்க உன்னை சந்தியில் இழுத்து விட்டுவிடுவான். அவனுடன் நீ செய்த ரஹஸ்ய காரியங்கள், கண்டும் காணாமல் நடந்தது அத்தனையும் வெளிவந்து உன்னை உள்ளே தள்ளும்.

मनसा चिन्तितं कार्यं वाचा नैव प्रकाशयेत् ।मन्त्रेण रक्षयेद्गूढं कार्ये चापि नियोजयेत् ॥ 07 ॥
manasā cintitaṃ kāryaṃ vācā naiva prakāśayet ।mantreṇa rakṣayedgūḍhaṃ kārye cāpi niyojayet ॥ 02-07
மநஸா சிந்திதம் கார்யம் வாசா நைவ ப்ரகாஶயேத் । மந்த்ரேண ரக்ஷயேத்³கூ³ட⁴ம் கார்யே சாபி நியோஜயேத் ॥ 02-07
சிறந்த அறிவாளிகளோடு கலந்தாலோசித்து, என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதை, அமைதியாக நிதானமாக யோசித்து,காரியத்தை கச்சிதமாக முடி/

कष्टं च खलु मूर्खत्वं कष्टं च खलु यौवनम् ।कष्टात्कष्टतरं चैव परगेहनिवासनम् ॥ 08 ॥
kaṣṭaṃ ca khalu mūrkhatvaṃ kaṣṭaṃ ca khalu yauvanam ।kaṣṭātkaṣṭataraṃ caiva paragehanivāsanam ॥ 02-08
கஷ்டம் ச க²லு மூர்க²த்வம் கஷ்டம் ச க²லு யௌவநம் । கஷ்டாத்கஷ்டதரம் சைவ பரகே³ஹநிவாஸநம் ॥ 02-08
முட்டாளாக இருந்தால் அதற்கேற்ற பரிசை பெற்று தானாகவேண்டும். கஷ்டமாக தான் இருக்கும். இளமை தவறான வழியில் போக வைக்கும். அதைவிட மோசமான ஆபத்தானது மற்றவன் வீட்டில் போய் வசிப்பது .

शैले शैले च माणिक्यं मौक्तिकं न गजे गजे ।साधवो न हि सर्वत्र चन्दनं न वने वने ॥ 09 ॥
śaile śaile ca māṇikyaṃ mauktikaṃ na gaje gaje ।sādhavo na hi sarvatra candanaṃ na vane vane ॥ 02-09
ஶைலே ஶைலே ச மாணிக்யம் மௌக்திகம் ந க³ஜே க³ஜே । ஸாத⁴வோ ந ஹி ஸர்வத்ர சந்த³நம் ந வநே வநே ॥ 02-09
நீ எதிர்பார்ப்பது போல் ஒவ்வொரு மாலையிலும் ஏதோ மாணிக்க குவியல்,புதையல் இருக்காது. எல்லா யானைத் தலையிலும் முத்து விளையாது. பார்க்கும் அத்தனை ஜடாதாரிகளும் உண்மைச் சாமியார்கள் இல்லை. ஒவ்வொரு காட்டிலும் சந்தனமரம் தேடாதே.

पुत्राश्च विविधैः शीलैर्नियोज्याः सततं बुधैः ।नीतिज्ञाः शीलसम्पन्ना भवन्ति कुलपूजिताः ॥ 10 ॥
putrāśca vividhaiḥ śīlairniyojyāḥ satataṃ budhaiḥ ।nītijñāḥ śīlasampannā bhavanti kulapūjitāḥ ॥ 02-10
புத்ராஶ்ச விவிதை:⁴ ஶீலைர்நியோஜ்யா: ஸததம் பு³தை:⁴ । நீதிஜ்ஞா: ஶீலஸம்பந்நா ப⁴வந்தி குலபூஜிதா: ॥ 02-10

கெட்டிக்காரர்கள், குழந்தைகளை நன்றாக யோசித்து வளர்ப்பார்கள். காசுக்கு ஆசைப்பட்டு பிள்ளை பெண்ணை வளர்த்து அமெரிக்காவுக்கு அனுப்பி அவர்கள் அங்கேயே ஜோடி தேடி அப்பா அம்மக்களை தெருவில் விடுவது நாமாக வரவழைத்துக் கொள்வது. இங்கே தானே நம் முன்னோர்கள் சந்தோஷமாக சௌகர்யமாக வாழ்ந்து நம்மையும் அப்படி வாழ வளர்த்தார் கள். குழந்தைகளுக்கு நீதி சாஸ்திரங்களை, நல்வழி, நன்னெறிகளை சிறு வயது முதலே கற்பியுங்கள். அவர்கள் பிற்காலத்தில் குடும்ப நன்மைக்கு தூணாக பயனளிப்பார்கள். .

माता शत्रुः पिता वैरी याभ्यां बाला न पाठिताः ।सभामध्ये न शोभन्ते हंसमध्ये बको यथा ॥ 11 ॥
mātā śatruḥ pitā vairī yābhyāṃ bālā na pāṭhitāḥ ।sabhāmadhye na śobhante haṃsamadhye bako yathā ॥ 02-11
மாதா ஶத்ரு: பிதா வைரீ யாப்⁴யாம் பா³லா ந பாடி²தா: । ஸபா⁴மத்⁴யே ந ஶோப⁴ந்தே ஹம்ஸமத்⁴யே ப³கோ யதா² ॥ 02-11
சரியாக நன்றாக நல்வழியில் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்காத பெற்றோர்கள் அவர்களுடைய எதிரிகள். நல்லோர் கற்றோர் சபை நடுவே உள்ள அறிவற்ற ஞான சூன்ய பிள்ளைகள் ஹம்சங்களுக்கு இடையே நாரை போன்றவர்கள்.

लालनाद्बहवो दोषास्ताडने बहवो गुणाः ।तस्मात्पुत्रं च शिष्यं च ताडयेन्न तु लालयेत् ॥ 12 ॥
lālanādbahavo doṣāstāḍane bahavo guṇāḥ ।tasmātputraṃ ca śiṣyaṃ ca tāḍayenna tu lālayet ॥ 02-12
லாலநாத்³ப³ஹவோ தோ³ஷாஸ்தாட³நே ப³ஹவோ கு³ணா: । தஸ்மாத்புத்ரம் ச ஶிஷ்யம் ச தாட³யேந்ந து லாலயேத் ॥ 02-12
செல்லம் கொடுத்து கெட்டுப்போன பிள்ளைகள் ஏராளம் என்கிறார் கௌடில்யர். கண்டிப்போடு, பெற்றோர் ஆசிரியரிடம் பயத்தோடு, தண்டனைபெற்றாலும் பெற்றோர்கள் அதை அங்கீகரித்தனர். அடியாத மாடு படியாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது எல்லாம் கட்டுப்பாட்டினால் தான். கௌடில்யருக்கு இது தெரிந்திருக்கிறது.

श्लोकेन वा तदर्धेन तदर्धार्धाक्षरेण वा ।अबन्ध्यं दिवसं कुर्याद्दानाध्ययनकर्मभिः ॥ 13 ॥
ślokena vā tadardhena tadardhārdhākṣareṇa vā। abandhyaṃ divasaṃ kuryāddānādhyayanakarmabhiḥ॥ 02-13
ஶ்லோகேந வா தத³ர்தே⁴ந தத³ர்தா⁴ர்தா⁴க்ஷரேண வா । அப³ந்த்⁴யம் தி³வஸம் குர்யாத்³தா³நாத்⁴யயநகர்மபி:⁴ ॥ 02-13

கல்வி கேள்வி இல்லாத மூடனாக இருப்பது துன்பமானது தான். அதுவும் இளைமையில் தறிகெட்டுபோனவன் பின்னர் வருந்துவான். மற்றவன் தயவில் அவன் வீட்டில் வாழ்பவன் நரகத்தில் வாழ்பவன். ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். ஒரு பாட்டோ, ஸ்லோகமோ, அரையோ , காலோ, ஏன் ஒரு வார்த்தையாவது கற்று ஞானம் பெற முயற்சிக்கவேண்டும். முழு முட்டாளாக இருப்பதை விட இது ரொம்ப ஒஸ்தி.

कान्तावियोगः स्वजनापमानं ऋणस्य शेषं कुनृपस्य सेवा ।दारिद्र्यभावाद्विमुखं च मित्रंविनाग्निना पञ्च दहन्ति कायम् ॥ 14 ॥
kāntāviyogaḥ svajanāpamānaṃ ṛṇasya śeṣaṃ kunṛpasya sevā ।dāridryabhāvādvimukhaṃ ca mitraṃ vināgninā pañca dahanti kāyam ॥ 02-14
காந்தாவியோக:³ ஸ்வஜநாபமாநம் ரு’ணஸ்ய ஶேஷம் குந்ரு’பஸ்ய ஸேவா । தா³ரித்³ர்யபா⁴வாத்³விமுக²ம் ச மித்ரம் விநாக்³நிநா பஞ்ச த³ஹந்தி காயம் ॥ 02-14

சாணக்கியன் ஒரு லிஸ்ட் போடுகிறான். ஆறுவிஷயங்கள் உன்னை நெருப்பில்லாமலேயே பற்றி எரியவைக்கும். நெருப்பினும் கொடிய அந்த ஆறு என்ன? மனைவியை விட்டு விலகி இருப்பது, சொந்த உறவுகளாலேயே ஒதுக்கப்படுவது, அவமதிக்கப்படுவது, யுத்தத்தில் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட எதிரி, மோசமான ராஜாவுக்கு சேவை செய்வது, வறுமை, ஒரு முறையோடு, ஒழுக்கத்தோடு அஜெண்டா, ப்ரோக்ராம் இல்லாமல் கூடிய அரங்கம் சபை, ஆகியவை.

नदीतीरे च ये वृक्षाः परगेहेषु कामिनी ।मन्त्रहीनाश्च राजानः शीघ्रं नश्यन्त्यसंशयम् ॥ 15 ॥
nadītīre ca ye vṛkṣāḥ parageheṣu kāminī ।mantrahīnāśca rājānaḥ śīghraṃ naśyantyasaṃśayam ॥ 02-15
நதீ³தீரே ச யே வ்ரு’க்ஷா: பரகே³ஹேஷு காமிநீ । மந்த்ரஹீநாஶ்ச ராஜாந: ஶீக்⁴ரம் நஶ்யந்த்யஸம்ஶயம் ॥ 02-15

எது, யாருக்கு அதி சீக்கிரம் அழிவு என்று ஒரு லிஸ்ட் சொல்கிறார் கௌடில்யர். நதிக்கரையோர விருக்ஷம். எப்போது வேண்டுமானாலும் நதியில் வெள்ளம் வந்து வேரோடு மரம் சாயும். மற்றவன் வீட்டில் வாழும் பெண்மணி, நல்ல மந்திரிகள் இல்லாத அரசாங்கம், ராஜா, இப்போது முதல்வர், இவர்கள் எல்லாம் நிரந்தரமானவர்கள் இல்லை. .

बलं विद्या च विप्राणां राज्ञां सैन्यं बलं तथा ।बलं वित्तं च वैश्यानां शूद्राणां पारिचर्यकम् ॥ 16 ॥
balaṃ vidyā ca viprāṇāṃ rājñāṃ sainyaṃ balaṃ tathā ।balaṃ vittaṃ ca vaiśyānāṃ śūdrāṇāṃ pāricaryakam ॥ 02-16
ப³லம் வித்³யா ச விப்ராணாம் ராஜ்ஞாம் ஸைந்யம் ப³லம் ததா² । ப³லம் வித்தம் ச வைஶ்யாநாம் ஶூத்³ராணாம் பாரிசர்யகம் ॥ 02-16

அந்தணனின் பலம், அவன் பெற்ற கல்வியறிவு. சரஸ்வதி கடாக்ஷம். ராஜாவின் பலம் அவனது திறமையான படை. எந்த பொருளையும் நல்ல பொருளாக நல்ல விலைக்கு விற்று நிறைய லாபம் ஈட்டுவது வைசியனின் பலம். எந்த வேலை கொடுத்தாலும் சிறந்த முறையில் நேர்மையாக, புத்திக்கூர்மையுடன் செய்வது பணி புரிபவனுக்கு பலம்.

र्धनं पुरुषं वेश्या प्रजा भग्नं नृपं त्यजेत् ।खगा वीतफलं वृक्षं भुक्त्वा चाभ्यागतो गृहम् ॥ 17 ॥
nirdhanaṃ puruṣaṃ veśyā prajā bhagnaṃ nṛpaṃ tyajet ।khagā vītaphalaṃ vṛkṣaṃ bhuktvā cābhyāgato gṛham ॥ 02-17
நிர்த⁴நம் புருஷம் வேஶ்யா ப்ரஜா ப⁴க்³நம் ந்ரு’பம் த்யஜேத் । க²கா³ வீதப²லம் வ்ரு’க்ஷம் பு⁴க்த்வா சாப்⁴யாக³தோ க்³ரு’ஹம் ॥ 02-17
பணமில்லாதவனை விலைமாது சீந்த மாட்டாள். தன்னை பாது காக்காத ராஜாவை குடிமகன் விரட்டிவிடுவான். எலெக்ஷன்கள் அப்படி தான் நடக்கவேண்டும். பழமில்லாத, காயில்லாத, விளையாத, நிழலில்லாத மரத்தை பறவைகள் புறக்கணிக்கும், சாப்பிட்ட பிறகு துண்டை உதறி மேலே போட்டுக்கொண்டு வயிறார சாப்பிட்டவன் சத்திரத்தை விட்டு வெளியேறிவிடுவான். காரியமானதும் கம்பி நீட்டுவது இது தான்.

गृहीत्वा दक्षिणां विप्रास्त्यजन्ति यजमानकम् ।प्राप्तविद्या गुरुं शिष्या दग्धारण्यं मृगास्तथा ॥ 18 ॥
gṛhītvā dakṣiṇāṃ viprāstyajanti yajamānakam ।prāptavidyā guruṃ śiṣyā dagdhāraṇyaṃ mṛgāstathā ॥ 02-18
க்³ரு’ஹீத்வா த³க்ஷிணாம் விப்ராஸ்த்யஜந்தி யஜமாநகம் । ப்ராப்தவித்³யா கு³ரும் ஶிஷ்யா த³க்³தா⁴ரண்யம் ம்ரு’கா³ஸ்ததா²

தானம் பெற்றுக்கொண்ட பிராமணன் தர்மவானை வணங்கிவிட்டு சென்றுவிடுவான். முழுவதும் நன்றாக குருவிடம் பாடம் கற்றவன் குருவை விட்டு சென்றுவிடுவான். காட்டில் தீ மூண்டு எரிந்தபின் காட்டை விட்டு விலங்குகள் நீங்கிவிடும். இதெல்லாம் நிலையில்லாத உறவை உணர்த்துகிறது.

दुराचारी दुरादृष्टिर्दुरावासी च दुर्जनः ।यन्मैत्री क्रियते पुम्भिर्नरः शीघ्रं विनश्यति ॥ 19 ॥
durācārī durādṛṣṭirdurāvāsī ca durjanaḥ ।yanmaitrī kriyate puṃbhirnaraḥ śīghraṃ vinaśyati ॥ 02-19
து³ராசாரீ து³ராத்³ரு’ஷ்டிர்து³ராவாஸீ ச து³ர்ஜந: । யந்மைத்ரீ க்ரியதே பும்பி⁴ர்நர: ஶீக்⁴ரம் விநஶ்யதி ॥ 02-19

ஆசாரம் அனுஷ்டானம், ஒழுக்கம் இல்லாதவன், வருவதை உணராத கண்டதே காட்சி என்று வாழ்பவன், கெட்ட எண்ணம், தீய செயல்கள் கொண்டவன், பிறருக்கு துரோகம் செய்வதையே தொழிலாக கொண்டவன் ஆகியோருடன் நட்பு கொண்டவனுக்கு ரொம்ப சீக்கிரம் அழிவு நேரும்.

समाने शोभते प्रीतिः राज्ञि सेवा च शोभते ।वाणिज्यं व्यवहारेषु दिव्या स्त्री शोभते गृहे ॥ 20 ॥
samāne śobhate prītiḥ rājñi sevā ca śobhate ।vāṇijyaṃ vyavahāreṣu divyā strī śobhate gṛhe ॥ 02-20
ஸமாநே ஶோப⁴தே ப்ரீதி: ராஜ்ஞி ஸேவா ச ஶோப⁴தே । வாணிஜ்யம் வ்யவஹாரேஷு தி³வ்யா ஸ்த்ரீ ஶோப⁴தே க்³ரு

சம நிலையில், சம அந்தஸ்தில், சம நோக்கில் உள்ளவர்கள் நட்பு வளரும். மதிப்பும் மரியாதையும் தெரிந்த, ராஜாவுக்கு சேவை செய்வது திருப்தி அளிக்கும். பொது வாழ்வில் எது நியாயமோ, நேர்மையோ எது லாபகரமோ அதில் கிடைக்கும் சுபிக்ஷம் அளிக்கும் . அழகான தனிமையில் உள்ள பெண் தனது வீட்டில் மட்டும் தான் பாதுகாப்போடு கவலையில்லாமல், பயமியின்றி இருக்க முடியும்.

சாணக்கியரின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *