SURI NAGAMMA RECOLLECTS J K SIVAN

சூரி நாகம்மாவின் நினைவலைகள்   –
  நங்கநல்லூர் J K   SIVAN 

”என் கண்ணில்  ஆனந்த கண்ணீர் சுரந்தது. பகவானின்  அருள் பார்வையில்  மட்டற்ற மகிழ்ச்சி.   பகவானுக்கு  நமஸ்காரம் பண்ணிவிட்டு  ஆஸ்ரமத்தில் நுழைந்தேன்.
1945ம் வருஷம்  நவம்பர்  25ம் தேதி..  பகவான்  ஸ்கந் தாஸ்ரமம் நடக்கப்போகிறார் என்று கேள்விப்பட்டேன். உடனே எல்லா பக்தர்களும் கூடவே  போவார்களே.  என்னென்ன  சாமான்கள்  எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று எல்லோரும் வேகமாக  தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மகரிஷி ரமணரோ
எந்த  வித்தியாசமும் இல்லாமல் பேசாமல்  உட்கார்ந் திருந்தார்.  ”சுவாமி நீங்கள் போகவேண்டாம்”   என்றால்  போகாமல் விட்டுவிடுவார்.  தடுக்கவில்லை என்றால் உடனே கிளம்பிவிடுவார். அவருக்கு என்ன சாமான் மூட்டை கட்டிக்கொண்டு செல்லவேண்டும்? கையில் கமண்டலம்.  மூங்கில் கழி ஊன்றி  நடக்க. கோவணம் இடையில்.மேலே  ஒரு பழைய  துண்டு.இது தான் இந்த பிரபஞ்சத்தில் அவருடைய சொத்து. 

மறுநாள்  அதிகாலையில்  சமையல் கூடத்தில் கடா முடா சத்தம்.  வேதபாராயணம்  ஒருபக்கம்  நடந்து கொண்டிருந்தது. சிலர்  சமைக்க, சிலர்  நீர்  கொண்டு தர, சிலர்  பாத்திரங்களை கழுவி துடைத்து வைக்க, சிலர்  காய்கறிகள் நறுக்கிக் கொண்டு, எல்லோரும்  படு பிஸியாக  இருந்தார்கள்.

ஆஸ்ரமத்தில் அத்தனைபேருக்கும் புளியோதரை, தயிர்சாதம்,  பொங்கல் வடை, பூரி  கூட்டு, சிப்ஸ், ஊறுகாய்.. அடேயப்பா கூடை கூடையாக  நிரப்பி விட்டார்கள். இரவெல்லாம் தூங்காமல்  விழித்து வேலை செய்திருக்கிறார்கள். காலையில்  வேதபாராயணம் முடிந்தபின் மகரிஷி எழுந்து போய் ஸ்னானம் பண்ணிவிட்டு காலை உணவை சாப்பிட்டார்.

ஸ்கந்தாஸ்ரமம் செல்ல மலைமேல்  நடையைக் கட்டிவிட்டார்.  மகரிஷியின் சகோதரி அலமேலு அம்மாள் என்னோடு வந்தாள் .  ஸ்கந்தாஸ்ரமம் கட்டிடம் எதிரே பெரிய  மரநிழலில் உட்கார்ந்தார். எல்லோரும் சுற்றி அமர்ந்தார்கள்.  எதிரே  ஒரு மலைப் பாறையின் இடுக்கிலிருந்து கபகபவென்று வெள்ளிக் கம்பிபோல் நீர் வீழ்ச்சி.  குடிக்க குளிர்ந்த ஜலம் . அந்த இடம்  பத்ரிகாஸ்ரமம் போல் இருந்தது.

அங்கே அமர்ந்திருந்தவர்களில் பலர், டாக்டர்கள், இஞ்சனீயர்கள், வக்கீல்கள். கவிஞர்கள், பண்டிதர்கள், வேத சாஸ்திர நிபுணர்கள். பாண்டிச்சேரி, மதராஸ்,  விழுப்புரம் என்று எங்கிருந்தெல்லாமோ வந்தவர்கள்.  எல்லோருமே  பகவானின்பக்தர்கள். ஆண் பெண், வயதானவர்கள் இளைஞர்கள் என்று கலந்து கட்டி.  மெளனமாக  எல்லோர்  மேலும் பகவானின் கூர்மை யான பார்வை. மெளனமாக  இதழ்கள் பிரியாமல் ஒரு அன்பு புன்னகை.சூர்ய வெளிச்சம் அவர் மேல் பட்டு  பொற் சிலையாக  பிரகாசித்தார். வாய் திறந்து பேசி னால் அம்ருதம் தான்.   எல்லோரும் சிலையாக  அமர்ந் திருந்தார்கள். மகரிஷியை நிறைய  பேர் போட்டோ  எடுத்தார்கள்.  காற்று பலமாக வீசியது.  யாரோ ஒரு பக்தர்  ஒரு  ஷால் எடுத்து மகரிஷியை போர்த்தி விட்டார்.  “gurosthu mouna vyakhyanam” என்பார்களே.  குருவின் மௌன ஞான விளக்கம். அது நடந்து  கொண்டிருந்தது. 

பகல்  சாப்பாடு நேரம் நெருங்கியது.  ஒரு  மேஜையை இழுத்து  மஹரிஷி அமர்ந்திருந்த சோபா  எதிரில் போட்டு  ஒரு  பரிமாறினார்கள்.   எல்லோருக்கும்  உணவு பரிமாறி முடிக்கும் வரை  அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பிறகு மகரிஷி தட்டில் கையை வைத்தார்.  சாப்பாடு எல்லாருக்கும் அளித்த பிறகு  சோபாவை  ஆஸ்ரம வெராண்டாவில் கொண்டு போட்டார்கள்.

எதிரே  இரும்பு க்ரில் கேட். அதற்கு அப்புறம் பக்தர்கள் நெருங்கி உட்கார்ந்தார்கள்.   நானும்  அலமேலு மாமியும்  அவர் கால்  அருகே பக்கத்து  சுவர் ஓரம் உட்கார்ந்து அவர் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தோம்.மகரிஷி  தனது  பழைய  ஸ்கந்தாஸ்ரம விஜய அனுபவங்களைச்  சொல்ல ஆரம்பித்தார்.   தண்ணீர் பற்றாக்குறை, மயில்கள் நடனம், குரங்குகள் சாம்ராஜ்யம்.  சாமான்கள் கீழே மலையடிவாரத் திலி ருந்து சிரம்பத்தோடு மேலே கொண்டுவந்தது, சர்ப் பங்கள், சிறுத்தைப்புலி  நடமாட்டம் எல்லாம் வரிசை யாக சொன்னார்.நாகனார்யன் என்ற கவிஞர் புதிதாக வந்தவரைப் பார்த்து  ”எப்போ வந்தே?”என்று கேட்டார். என் பக்கம் பார்வை திரும்பியது.  

”அம்மா  இங்கே தான் முக்தி அடைந்தாள். அவளை  வெளியே உட்கார்த்தி வைத்தோம். முகத்தில் மரண களை  தெரியவில்லை. அசந்து தூங்குபவள் போல் இருந்தாள் . நீ உட்கார்ந்து இருக்கிறாயே அங்கே தான் அவள் இருந்தாள். அவள் முகத்தைச் சுற்றி பளிச்சென்று ஒரு கண்ணைக்கூசும் ஒளி க்ஷண காலம் தோன்றியது.”  என்றார்.
அம்மாவுக்கு தனது கடமையை செய்து முடித்தார்.  அங்கே  ஒரு  சமாதி உருவாகியது.  பின்னர் மாத்ரு பூதேஸ்வரர்  ஆலயம் எழும்பியது. மகரிஷி யின்
அம்மா  அழகம்மா வருவதற்கு முன்  ஆஸ்ரமத்தில் சமையல்  செய்வது கிடையாது.  அம்மா வந்த நாள் முதல் எல்லோருக்கும் நல்ல ருசியான உணவு கிடைத்தது.   அஸ்தமனத்துக்கு முன், இருள் சேர்வதற்கு முன்  எல்லோரும்  ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து  புறப்பட் டார்கள்.  சூரியன் மேற்கில் மறைந்தான்.  அடிவாரத்தில்  வேதபாராயணம் நடந்தது வழக்கம்போல.

மகரிஷி எதிலும் விருப்போ வெறுப்போ ஏன் காட்ட வில்லை  . எப்படி எப்போதும் ஆனந்தத்திலேயே  மூழ்கி இருக்கிறார்?. எங்களுக்கு திருப்தியாக  வயிறார உணவளித்தவர்  ஏதோ சில  பழைய சம்பவங்களை மட்டும் சொல்லி விட்டு  ஏன் எங்களை அனுப்புகிறார்.  ஓஹோ  அவரைப் போலவே  நாங்களும்  எங்களுக்குள் சிந்திக்க வேண்டும், முயன்று தோற்று மீண்டும் முயன்று வெற்றிகாணும் வரை முயன்று கொண்டே  இருக்க வேண்டும். ஆத்மஞானானந்தம் பெற வேண்டும் என்பதை  உதாரண புருஷராக  காட்டு கிறாரோ?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *