SRIMAD BHAGAVATHAM CANTO 12. CHAP 2. 3 J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN

பூமி கீதை – ஸ்லோகங்கள் 12.3. 1 – 5

இந்த அத்தியாயத்தின் ஸ்லோகங்கள் நமக்கு கலி காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறது. இல்லை அது சொல்ல வில்லை. சுக ப்ரம்மரிஷி பரிக்ஷித் ராஜாவுக்கு அவன் ஏழு நாளில் சாவதற்கு முன் எதிர்காலத்தில், கலியுகத்தில் என்னென் னவெல்லாம் நடக்கும் என்று கேட்டதற்கு பதிலாக சொல்கிறார். அவருக்கு தான் ஞான திருஷ்டி உண்டே. நமக்கு எந்த கண் டாக்டரும் இவ்வளவு POWERFUL சக்தி பார்வை கொண்ட கண்ணாடி தர முடி யாத தால் நம்மால் எதிர்காலத்தை, ஏன் அடுத்தநிமிஷம் நடக்கப்போவதைக் கூட பார்க்க முடியாது. பிறந்த எதுவும் மரணத்தின் கைப்பிடியில் தான் இருக்கிறது. எப்போது எப்படி என்பது தான் ப்ரம்ம ரஹஸ்யம்.

மனிதனின் முதல் எதிரி அவனது ஐம்புலன்களும் மனமும் தான். நமக்கு நேரும் அனைத்து துன்பங்கள்,துயரங்கள் இதனால் தான்.
1. श्री शुक उवाच: द‍ृष्ट्वात्मनि जये व्यग्रान् नृपान् हसति भूरियम् । अहो मा विजिगीषन्ति मृत्यो: क्रीडनका नृपा: ॥ १ ॥
śrī-śuka uvāca dṛṣṭvātmani jaye vyagrān nṛpān hasati bhūr iyam aho mā vijigīṣanti mṛtyoḥ krīḍanakā nṛpāḥ

பூமாதேவிக்கு சிரிப்பு வந்தது. ”இந்த ராஜாக்களை பாரேன், எவ்வளவு பேராசை, என்னை முழுதும் வெல்ல வேண்டுமாம். ஆளவேண்டும். மரணத்தின் கையில் விளையாட்டு பொம்மை அவர்கள் என்ற எண்ணமே மறந்து விடுகிறது.

2. काम एष नरेन्द्राणां मोघ: स्याद् विदुषामपि । येन फेनोपमे पिण्डे येऽतिविश्रम्भिता नृपा: ॥ २ ॥
kāma eṣa narendrāṇāṁ moghaḥ syād viduṣām api yena phenopame piṇḍe ye ’ti-viśrambhitā nṛpāḥ

“எவ்வளவு பெரிய ராஜாக்கள், நன்றாக கற்றவர்கள், இந்த மண்ணாசையால் மதி இழந்து, புத்தி கெட்டு தடுமாறி, போரிட்டு உயிரை இழக்கிறார்கள். நீர் மேல் குமிழி போல் இந்த யாக்கை என்பதே எல்லாருக்கும் மறந்து விடுகிறதே.

3&4 पूर्वं निर्जित्य षड्‌वर्गं जेष्यामो राजमन्त्रिण: । तत: सचिवपौराप्तकरीन्द्रानस्य कण्टकान् ॥ ३ ॥
एवं क्रमेण जेष्याम: पृथ्वीं सागरमेखलाम् । इत्याशाबद्धहृदया न पश्यन्त्यन्तिकेऽन्तकम् ॥ ४ ॥

pūrvaṁ nirjitya ṣaḍ-vargaṁ jeṣyāmo rāja-mantriṇaḥ tataḥ saciva-paurāpta- karīndrān asya kaṇṭakān
evaṁ krameṇa jeṣyāmaḥ pṛthvīṁ sāgara-mekhalām ity āśā-baddha-hṛdayā na paśyanty antike ’ntakam

“பரீக்ஷித், நீ ஒரு ராஜா. உனக்குத்தெரியும். ராஜாக்களும் ராயாதிகாரிகளும் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா, எனக்கு அடங்கி இருக்கும் இந்த மந்திரி, சேனாதிபதி, தலைவர்களை விட நான் தேக பலத்திலும், புத்தி பலத்திலும், வாக் சாதுர்யத்திலும் ரொம்ப கெட்டிக்காரனாக இருக்கவேண்டும். அப்போது தான் இந்த உலகத்தையே ஜெயிக்கமுடியும். மரணம் என்ற ஒன்று எப்போதும் நமக்கு அருகிலேயே கண் இமைக்காமல் காத்து நிற்கிறது. நமது அனைத்து கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அது விழுங்கி ஏப்பம் விடும் என்பது மறந்தே போகிறது.

5. समुद्रावरणां जित्वा मां विशन्त्यब्धिमोजसा । कियदात्मजयस्यैतन्मुक्तिरात्मजये फलम् ॥ ५ ॥
samudrāvaraṇāṁ jitvā māṁ viśanty abdhim ojasā kiyad ātma-jayasyaitan muktir ātma-jaye phalam

பரீக்ஷித், ராஜாக்களின் இன்னொரு பேராசையை நினைத்து பார்த்தாயா? பூமியில் எல்லா இடத்தையும், ஒரு அங்குலம் விடாமல் வென்று அதற்கெல்லாம் சக்ரவர்த்தியானால் கூட பேராசை போகாது. தாகம் தீராது. நிலத்தை சுற்றி இருக்கும் கடல்களில் சென்று அந்த கடலை ஒட்டிய பிரதேசங்களையும் வென்று ராஜாவாக வேண்டும்… சுகர் சொல்வதை தான் பின்னால் தாயுமானவரும் சொன்னார்:

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி ளினுங் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற பரிபூர ணானந்தமே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *