SRIMAD BAGAVATHAM 12TH CANTO KALIYUG – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN
12வது காண்டம். ஸ்லோகங்கள் 2.21-2.44

கலியுகம்

अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागातिपुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21
atha tesam bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv akhila-dasyusu

எல்லா ராஜ்யங்களிலும் மோசமான நிர்வாகிகள், அதிகாரிகள், உயர் பதவியில் இருக்கும் தீயவர்களை எல்லாம் அழித்தபின் அந்த ராஜ்ஜியங்கள் ஊழல் பேர்வழிகள் இல்லாமல் கமகமவென மணக்கும். ஜனங்கள் சந்தோஷம் அடைவார்கள். எங்கும் இனிய தென்றல் வீசும்.

तेषां प्रजाविसर्गश्च स्थविष्ठ: सम्भविष्यति । वासुदेवे भगवति सत्त्वमूर्तौ हृदि स्थिते ॥ २२ ॥ SB 12.2.22
tesam praja-visargas casthavisthah sambhavisyati vasudeve bhagavati sattva-murtau hrdi sthite

மக்கள் சுபிக்ஷத்தோடு வாழ்வார்கள். எல்லாம் அந்த வாசுதேவன் கருணை. எழுதவே படிக்கவே ஆனந்தமாக இருக்கிறதே.

यदावतीर्णो भगवान् कल्किर्धर्मपतिर्हरि: ।कृतं भविष्यति तदा प्रजासूतिश्च सात्त्विकी ॥ २३ ॥ SB 12.2.23
yadavatirno bhagavan kalkir dharma-patir harih krtam bhavisyati tada praja-sutis ca sattviki

கலியுகம் முடிவுற்ற பின் மீண்டும் சத்ய யுகம் உதயமாகும். நல்ல ஜீவர்கள் அநேகர் தோன்றுவார்கள். நிச்சயம் இப்போதைக்கு அல்ல, நம் வாழ்நாளில் பார்க்கவோ அனுபவிக்கவோ வாய்ப்பில்லை. நிச்சசயயம் எத்தனையோ பல லக்ஷ வருஷம் ஆகலாம்.

यदा चन्द्रश्च सूर्यश्च तथा तिष्यबृहस्पती । येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: ।
ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥एकराशौ समेष्यन्ति भविष्यति तदा कृतम् ॥ २४ ॥ SB 12.2.24
yada candras ca suryas ca tatha tisya-brhaspati eka-rasau samesyanti bhavisyati tada krtam

கடக ராசியில் சந்திரன், சூரியன் குரு மூவரும் இணைந்து பூச நக்ஷத்திரம் கூடிய வேளையில் சத்ய யுகம் தோன்றும். அதன் இன்னொரு பெயர் க்ருத யுகம். இவ்வளவு தெளிவாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ளதே நடைமுறையில் நடக்கும்போது பாகவதம் சொல்வது அப்படியே நிறைவேறாதா? புயல்கள், தீ விபத்து, பேய்மாழை எல்லாம் பஞ்சாங்கம் சொல்வது போல் நடக்கிறதே என்று எண்ணற்றவர்கள் நமக்கு அவ்வப்போது யூ ட்யூப், டிவி டிவி யில் சொல்கிறார்களே, அப்படி இருக்க மஹான்கள் ரிஷிகளின் தீர்க்க தரிசனத்தால் உண்டானவை இந்த கிரந்தங்கள்.அது அப்படியே பலிக்காமலா போகும்?

येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: । ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥SB 12.2.25
ye ’tita vartamana ye bhavisyanti ca parthivah te ta uddesatah prokta vamsiyah soma-suryayoh

சூர்ய சந்திர வம்ச ராஜாக்கள் தோன்றுவார்கள்.

आरभ्य भवतो जन्म यावन्नन्दाभिषेचनम् । एतद् वर्षसहस्रं तु शतं पञ्चदशोत्तरम् ॥ २६ ॥ SB 12.2.26
arabhya bhavato janma yavan nandabhisecanam etad varsa-sahasram tu satam pancadasottaram

சுகப்பிரம்ம ரிஷி ஆயிரத்து நூற்றைம்பது வருஷங்கள் ஆளும் ராஜ பரம்பரை லிஸ்ட் சொல்கிறார். அவர் சொன்ன வரிசையில் சில ராஜாக்கள் பெயர் முன்னுக்கும் பின்னுக்குமாக இருக்கலாம்.

सप्तर्षीणां तु यौ पूर्वौ द‍ृश्येते उदितौ दिवि । तयोस्तु मध्ये नक्षत्रं द‍ृश्यते यत् समं निशि ॥ २७ ॥ तेनैव ऋषयो युक्तास्तिष्ठन्त्यब्दशतं नृणाम् ।
ते त्वदीये द्विजा: काल अधुना चाश्रिता मघा: ॥ २८ ॥ SB 12.2.27-28
saptarsinam tu yau purvau drsyete uditau divi tayos tu madhye naksatram drsyate yat samam nisi
tenaiva rsayo yuktas tisthanty abda-satam nrnam te tvadiye dvijah kala adhuna casrita maghah

ஏழு ரிஷிகள் சப்த ரிஷி மண்டலமாக விண்ணிலே ஒளிபடைத்தார்கள். அவர்களில் முதல் ரெண்டு ரிஷிகள் புலஹர் , க்ரது என்பவர்கள் முதலில் இருட்டில் ஒளி வீசுபவர்கள். வடக்கு தெற்காக ஒரு கோடு போட்டு இணைத்தால் எந்த மண்டலத்தில் நடு மத்தியில் இணைக்கிறதோ அங்கே ரிஷிகள் கூடி இருப்பார்கள். அவர்கள் இருக்கும் காலம் அங்கே நூறு வருஷம். மக நக்ஷத்திரத்தில் அவர்கள் கூடி இருப்பது விசேஷம். மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன். நமது வருஷ கணக்கும் தேவர்கள், ரிஷிகளின் காலக் கணக்கும் வேறே வேறே.

विष्णोर्भगवतो भानु: कृष्णाख्योऽसौ दिवं गत: । तदाविशत् कलिर्लोकं पापे यद् रमते जन: ॥ २९ ॥ SB 12.2.29
visnor bhagavato bhanuh krsnakhyo ’sau divam gatah tadavisat kalir lokam pape yad ramate janah

எல்லோருக்கும் தெரிந்தது விஷ்ணு தான் கிருஷ்ணன் என்பது. துவாபர யுகம் முடிந்து கிருஷ்ணன் பூலோகத்திலிருந்து வைகுண்டம் ஏகியபோது கலி புருஷன் பூலோகத்தை ஆக்கிரமித்தான். கலியுகம் தொடங்கியது.

यावत् स पादपद्माभ्यां स्पृशनास्ते रमापति: ।तावत् कलिर्वै पृथिवीं पराक्रन्तुं न चाशकत् ॥ ३० ॥SB 12.2.30
yavat sa pada-padmabhyam sprsan aste rama-patih tavat kalir vai prthivim parakrantum na casakat

மஹா லட்சுமி பதி யான , ஸ்ரீயப்பதி மஹா விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணனாக காலடி பதித்தலிருந்து அவர் வைகுண்டம் திரும்பும் வரை கலீயின் சக்தி எடுபடவில்லை.

यदा देवर्षय: सप्त मघासु विचरन्ति हि ।तदा प्रवृत्तस्तु कलिर्द्वादशाब्दशतात्मक: ॥ ३१ ॥ SB 12.2.31
yada devarsayah sapta maghasu vicaranti hi tada pravrttas tu kalir dvadasabda-satatmakah

கலி சப்த ரிஷிகள் சந்திரமண்டலத்தில் மக நக்ஷத்ரத்தில் கூடும்போது கலியுகம் பிறந்தது. தேவர்கள் ஆண்டு கணக்கில் 1200 வருஷம் இருக்கும். நம் கணக்கில் பல லக்ஷ வருஷங்கள்.

यदा मघाभ्यो यास्यन्ति पूर्वाषाढां महर्षय: । तदा नन्दात् प्रभृत्येष कलिर्वृद्धिं गमिष्यति ॥ ३२ ॥ SB 12.2.32
yada maghabhyo yasyanti purvasadham maharsayah tada nandat prabhrty esa kalir vrddhim gamisyati

சுருக்கமாக சொல்லப்போனால், சப்தரிஷிகள் மகநக்ஷத்திலிருந்து பூராடம் நகரும்போது கலி புருஷன் தனது முழு சக்தியை காட்ட ஆரம்பித்தான். அப்போது பூமியில் நந்த ராஜா வம்சம் ஆண்டுகொண்டிருந்தது.

यस्मिन् कृष्णो दिवं यातस्तस्मिन्नेव तदाहनि । प्रतिपन्नं कलियुगमिति प्राहु: पुराविद: ॥ ३३ ॥ SB 12.2.33
yasmin krsno divam yatas tasminn eva tadahani pratipannam kali-yugam iti prahuh pura-vidah

ஸயன்ஸ் காரர்கள் போடும் கணக்குப்படி பார்த்தால் கிருஷ்ணன் என்று மறைந்தாரோ அன்று தான் பூமியில் கலியின் முழு சக்தியும் வெளிப்பட ஆரம்பித்தது.

दिव्याब्दानां सहस्रान्ते चतुर्थे तु पुन: कृतम् ।भविष्यति तदा नृणां मन आत्मप्रकाशकम् ॥ ३४ ॥SB 12.2.34
divyabdanam sahasrante caturthe tu punah krtam bhavisyati tada nrnam mana atma-prakasakam

இப்போது நாம் கலியின் ஆளுமையில் இருப்பதால் தான் சகிக்க முடியாத சம்பவங்களை, நிகழ்ச்சிகளை, நடை முறைகளை சகித்துக் கொண்டு அனுபவிக்கிறோம். சத்ய யுகம் வரும்வரை நாம் இருக்கப்போவதில்லை. அது எத்தனையோ ஆயிரம் லக்ஷம் வருஷங்களுக்கு அப்புறம் நிகழப்போவது. அப்போது நாமும் இருந்தால் என்ன பிறவி எடுத்து இருப்போம் என்று சொல்ல வழியில்லை. அவரவர் கர்மாவை புண்ய பாபங்களைப் பொறுத்த சமாச்சாரம் அது. சத்ய யுகத்தில் மக்கள் மனம் தெளிவாக இருக்கும், ஆத்ம ஒளி எல்லா முகங்களிலும் வீசும்.

देवापि: शान्तनोर्भ्राता मरुश्चेक्ष्वाकुवंशज: ।कलापग्राम आसाते महायोगबलान्वितौ ॥ ३७ ॥SB 12.2.37
devapih santanor bhrata marus ceksvaku-vamsa-jah kalapa-grama asate maha-yoga-balanvitau

ஸ்ரீமத் பாகவதம் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. மஹாராஜா சந்தனுவின் சகோதரன் தேவாபி யும் , மாரு எனும் , இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவனும் மஹா பலசாலிகள். கலபா என்கிற ஊரில் வசிக்கிறார்களாம் .

ताविहैत्य कलेरन्ते वासुदेवानुशिक्षितौ । वर्णाश्रमयुतं धर्मं पूर्ववत् प्रथयिष्यत: ॥ ३८ ॥ SB 12.2.38
tav ihaitya kaler ante vasudevanusiksitau varnasrama-yutam dharmam purva-vat prathayisyatah

கிருஷ்ணன் கட்டளைப்படி, மேலே சொன்ன தேவாபி, மாரு எனும் ரெண்டு ராஜாக்களும் பூமிக்கு மனிதர்களாக வந்து சமூகத்தை சீர்திருத்துவார்களாம். கலியுகம் முடியும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள். அதுவரை மஹா விஷ்ணுவை தியானித்துக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.

कृतं त्रेता द्वापरं च कलिश्चेति चतुर्युगम् ।अनेन क्रमयोगेन भुवि प्राणिषु वर्तते ॥ ३९ ॥ SB 12.2.39
krtam treta dvaparam ca kalis ceti catur-yugam anena krama-yogena bhuvi pranisu vartate

இந்த சதுர் யுகங்கள், சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் இந்த நான்குமே அந்தந்த கால கட்டத்தில் அப்போதைய மனிதர்களின் குணாதிசயங்களோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

राजन्नेते मया प्रोक्ता नरदेवास्तथापरे । भूमौ ममत्वं कृत्वान्ते हित्वेमां निधनं गता: ॥ ४० ॥SB 12.2.40
rajann ete maya prokta nara-devas tathapare bhumau mamatvam krtvante hitvemam nidhanam gatah

சுகப்பிரம்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவுக்கு கிருஷ்ணன் பெருமைகளை மஹிமைகளை சொல்லிக்கொண்டு வரும்போது இதெல்லாம் சொல்கிறார். ”பரீக்ஷித், நான் சொன்ன ராஜாக்கள் உரிய காலத்தில் வந்து ஆண்டு, முடிந்து போவார்கள்” என்கிறார்.

कृमिविड्भस्मसंज्ञान्ते राजनाम्नोऽपि यस्य च । भूतध्रुक् तत्कृते स्वार्थं किं वेद निरयो यत: ॥ ४१ ॥SB 12.2.41
krmi-vid-bhasma-samjnante raja-namno ’pi yasya ca bhuta-dhruk tat-krte svartham kim veda nirayo yatah

பரீக்ஷித், நான் சொல்வதை புரிந்துகொள். என்னதான் ராஜா என்று நான் அடைமொழி கொடுத்த்து உனக்கு அறிமுகப்படுத்தினாலும் , ராஜா என்ற பட்டம் பதவி பெயர் கொண்டவன் கடைசியில் ஒரு புழு, சாம்பல். அவன் பெயர் நிலைக்க அவன் செயல் ஒன்று தான் மிச்சம். தந்து உடலை பாதுக்காக்க மற்ற உடல்களைக் கொள்பவனை என்ன வென்று சொல்வது? நரகத்துக்கு போவதற்கு பெயர் எதற்கு? உடல் இருக்கும்போது பொறாமை, ஹிம்சை, சுயநல செயகைகளை தவிர்க்க வேண்டும். பகவானை மற்ற உயிரினங்களிலும் காண வேண்டும்.

तेजोऽबन्नमयं कायं गृहीत्वात्मतयाबुधा: । महीं ममतया चोभौ हित्वान्तेऽदर्शनं गता: ॥ ४३ ॥ SB 12.2.43
tejo-’b-anna-mayam kayam grhitvatmatayabudhah mahim mamataya cobhau hitvante ’darsanam gatah

பரீக்ஷித், இந்த பஞ்ச பூதங்களால் ஆன தேகத்தை நிஜம் சாஸ்வதம் என நம்பி, அது தான் ”நான்” என கனவு காண்பது தவறு. எல்லாம் மறைந்து போகும். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறான். இருந்தா லும் அந்த ஜீவனின் உலக வாழ்க்கை பெயர் காற்றோடு கலந்து மறைந்து போகிறது. எண்ணற்ற வர்கள் நமக்கு முன் வாழ்ந்தவர்களை யார் அறிவார்கள்?

ये ये भूपतयो राजन् भुञ्जते भुवमोजसा ।कालेन ते कृता: सर्वे कथामात्रा: कथासु च ॥ ४४ ॥ SB 12.2.44
ye ye bhu-patayo rajan bhunjate bhuvam ojasa kalena te krtah sarve katha-matrah kathasu ca

பரீக்ஷித், இதுவரை உலகத்தில் அதிக சக்தி, பலம் அதிகாரம் கொண்டு வாழ்ந்த ராஜாக்கள் எங்கே? சரித்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு எழுத்தில் பெயர்களோடு சரி. அது கூட ஒரு சில காரியங்களால் தம்மை பிரபலப் படுத்திக் கொண்ட வர்கள் பேர்கள் தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *