SOUNDHARYA LAHARI 56/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 56/103 – நங்கநல்லூர் J K SIVAN

56 மீனைப்போல கண்ணாளே

तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिता निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः ।
इयं च श्रीर्बद्धच्छदपुटकवाटं कुवलयम् जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥ ५६॥

Tav’aparne karne-japa-nayana-paisunya-chakita Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.

தவாபர்ணே கர்ணே ஜபநயன-பைசுன்ய-சகிதா நிலீயந்தே தோயே நியத-மனிமேஷா: சபரிகா: I
இயம் ச ஸ்ரீர்-பத்தச்சத-புடகவாடம் குவலயம் ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி II

அம்பாள் லலிதை வாரி வழங்கும் வள்ளல். அவள் யாரிடமாவது கடன் படுவாளா? அதனால் அவளுக்கு ‘யாருக்கும் கடன் படாதவள்’ என்ற பொருள் கொண்ட ‘அபருணா’ எனப் பெயர். மீன்கள் கண்ணை மூடுவதில்லை. அம்பாளின் கண்கள் காது வரை நீண்டு இருப்பதால் கண்கள் காதில் ரஹஸ்யம் பேசுவது போல் தோற்றம் அளிக்கிறது. கண்கள் மீன்கள் போல் உள்ளதால் மற்ற மீன்கள் ‘ ஓஹோ நம்மைப் பற்றி ஏதோ இந்த கரு நிற மீன்கள் கோள் சொல்லுகிறதோ?” என்று பயப்பட்டு கண்களை மூடாமல் நீரில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு நீந்துகின்றன என்று அற்புதமாக ஆதி சங்கரர் கற்பனை செயது அம்பாளின் அழகிய கயல்விழிகளை வர்ணிக்கிறார். வெகு அழகான ஸ்லோகம் இது.

இன்னொரு விஷயமும் சங்கரர் சொல்கிறாரே. சூரியன் அஸ்தமித்ததும் கரு நெய்தல் மலர்கள் இதழ்களை மூடி கூம்புகின்றன. அப்போது அம்பாளின் விழிகள் மூடுவது போல் தோன்றி மறுநாள் காலை சூரியன் உதயத்தின் போது அந்த மலர்கள் மொட்டு அவிழும்போது அம்பாளின் கண்கள் திறந்துகொள்வது போல் உள்ளது என்கிறார். மதுரையில் அம்பாளின் பெயர் மீனைப் போன்ற கண்ணாள் , மீனாக்ஷி என்று பெயர்.
உங்களுக்குத் தெரியுமா? மதுரையில் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் கிடையாது, அதில் வாழ்வதில்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *