SOUNDHARYA LAHARI 49/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 49/103 நங்கநல்லூர் J K SIVAN

49. விழியே கதை எழுது.

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैःकृपाधाराधारा किमपि मधुराभोगवतिका ।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥ ४९॥

Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih Kripa-dhara-dhara kimapi madhur’a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate

விசாலா கல்யாணீ ஸ்புட-ருசி-ரயோத்யா குவலயை: க்ருபாதாராதாரா கிமபி மதுரா ஆபோகவதிகா I
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகர-விஸ்தார-விஜயா த்ருவம் தத்தந்நாம-வ்யவகரண-யோக்யா விஜயதே II

அம்பிகே, உன் விசாலமான கண்கள் மங்களகரமாகவும் மலர்ந்தும் பிரகாசிப்பதாலும் இணையற்ற கருணை நிறைந்தவை. வர்ணிக்க முடியாத இனிமையும் அழகும் கொண்டவை. ஆழங்காண முடியாதஅன்பும் கருணையும் கொண்டவை. ரக்ஷிப்பவை. பல நகரங்கள் உன் கண்களின் தன்மையை பிரதிபலிப்பவை. இதோ சில பழைய ராஜ்ய தலை நகரங்கள்:

வைசாலி நகரம்: உன் மலர்ந்த விசாலமான பார்வையை குறிப்பது.
கல்யாணீ நகரம்: உன் கண்களில் தோன்றும் ஆச்சரியத்தைக் காட்டுவது
அயோத்யா: உன் கண்களின் உள்ள பாசத்தை, காமத்தை உண்டாக்குவது
தாரா: என்பது உன் ஆலஸ்யத்தைக் காட்டுவது
மதுரா: உன் கண்களில் தோன்றும் ஸஞ்சலமானது
போகவதீ: உன் கண்களில் தோன்றும் பிரியத்தை குறிப்பது.
அவந்தீ: உன் கண்களில் காணும் மயக்கம்.
விஜயா : உன் மூடிய பாதி விழிகள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *