SOUNDHARYA LAHARI 35/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 35/103 – நங்கநல்லூர் J K SIVAN .

ஸ்ரீ சக்ர நாயகி

मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथिरसि त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां न हि परम् ।
त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा चिदानन्दाकारं शिवयुवति भावेन

Manas tvam vyoma tvam marud asi marut saarathir asi Tvam aastvam bhoomis tvayi parinathayam na hi param;
Tvam eva svatmanam parinamayithum visva-vapusha Chidanand’aakaram Shiva-yuvati-bhaavena bibhrushe.

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத் ஸாரதி ரஸி த்வ மாபஸ் த்வம் பூமிஸ் த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வ வபுஷா சிதானந்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்ருஷே 35

ஆதி பராசக்தி தேவி, நீஆஞ்ஞா சக்ரத்தில் மனம். விசுத்தியில் ஆகாசம், அனாஹதத்தில் வாயு, ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி, ஜலமும் நீ, பூமி எனும் மண், ப்ருத்வி தத்துவம் நீ.இதெல்லாம் ஒன்று சேர்ந்த ப்ரபஞ்சமாகவும் பரிணமிக்கிறாய். வேறு எது, யார் உனக்கீடு? உன் பெருமையே நீ பரமேஸ்வரன் பத்னி என்ற புகழ் ஒன்றே போதுமே. அந்த நினைவே ஆனந்த வடிவான சித்ரூபத்தை உனக்களித்து பிரகாசிக்கிறாய்” என்கிறார் ஆதி சங்கரர் இந்த அற்புத ஸ்லோகத்தில்.

பஞ்ச பூத சிருஷ்டி காரணமும் அம்பாள், அதாகவேயும் காட்சி தருகிராள். மாறும் பிரபஞ்சத்தில் மாறாத ஒன்றாக பரிணமிக்கிறாள். அம்பாளை பூரணமாக யார் அறியமுடியும்? சித் ஆனந்தம் ரெண்டும் ஒன்று சேர்ந்த கலவை அல்லவா அவள்! சித்: சிவன், ஆனந்தம்: சக்தி தேவி.

பரமேஸ்வரன் நிர்குண ப்ரம்மம் என்றால் அம்பாளும் அதில் சேர்த்து தான். சர்வ ப்ரபஞ்ச சிருஷ்டி காரணன்- காரணி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *