OUR GREAT NATION. J K SIVAN

ஜெய்  ஹிந்த்   –  நங்கநல்லூர்  J K  SIVAN

சின்ன சின்ன கொசு விஷயங்கள் கூட  சில சமயம் நமக்கு  ஆச்சர்யம் தருகிறது.  நமது தேசத்தைப் பற்றி எத்தனையோ எவ்வளவோ சொல்லலாம்.  அதில் அநேகம் ஏற்கனவே உங்களுக்கு  தெரிந்திருக்கலாம்.  இருந்தாலும்  மறந்து போனதை ஞாபகப் படுத்தும்போது  உற்சாகமாக இருக்குமே.  அப்படித்தான் சில  கொசு விஷயங்கள்  இப்போது சொல்கிறேன்.
கிறிஸ்துவர்கள் வழிபடும் புனித ஸ்தலம்  வாடிகன் நகரம்,  இஸ்லாமியர்கள் வழிபடும் மெக்கா . இந்த ரெண்டு இடத்துக்கும்  சேர்த்து  மொத்தமாக   செல்பவர்களை விட  அதிக எண்ணிக்கையாக   நமது  திருப்பதி வெங்கடேசன் கோவிலுக்கும்,  காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கும்  பக்தர்கள் செல்கிறார்கள். இதை யாரோ  சிரமப்பட்டு  விவரம் தேடி சொன்னதை படித்தேன்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை மாமாங்கம் என்று சொல்வோமே அந்த மஹா மஹ வைபவம் வடக்கே  கும்ப மேளா என்று நடக்கிறது. அதில் ஒவ்வொரு முறையும் சேர்கின்ற பக்தர்கள் கூட்டம் அடேயப்பா  உலகிலேயே  அதிகம் பேர் கூடுகிற விழா. கும்ப மேளா  கும்பலை  மேலே  ஆகாயத்தில் இருந்து கூட விண்வெளி கருவிகள்  SATELLITE   துல்லியமாக பூமியில்  காட்டுகிறதாம்.
நமது பாரத தேசத்தில்  மட்டுமே  மூன்று லக்ஷத்துக்கும் அதிகமான  இஸ்லாமியர்கள் தொழும்  மசூதிகள் இருக்கின்றனவாம். வேறெந்த தேசத்திலும் இத்தனை கிடையாது.
உத்தர பிரதேசத்தில் லக்னோவில் உள்ள ஒரு  பள்ளிக்கூடத்தில் City Montessori  ஸ்கூலில்  45000 த்துக்கு மேல்  மாணவ மணிகள் படிக்கிறார்களாம் , அப்படியா?  உலகிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளி இது தானாம்.
இன்னொரு விஷயம் தெரியுமா?  இந்தியாவில் ஒவ்வொரு வருஷமும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை,  ஒட்டு மொத்தமாக  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜனத்தொகையை விட,  ஏன்,  மற்ற பல தேசங்களில்  வசிக்கும் மக்களை விட  அதிகம்.  ப்ரம்ம தேவா, உன் வேலை பலே  பலே .

இந்தியாவில் தான் உலகிலேயே  அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். நான் தமிழில் ஏதாவது கேட்டால் இங்கிலீஷில் பதில் சொல்பவர்களை தினமும் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
நமது மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள  லொனார் ஏரி, Lonar Lake, உப்பு  கரிக்கும் நீர் கொண்ட ஏரி. கடல் மாதிரி.  இது எப்படி உண்டானது தெரியுமா?  பிரபஞ்சத்தில்  அவ்வப்போது  தோன்றும்  எரிகற்களில்  ஒன்று தீப்பிழம்பாக  பெரிதாக  பூமியை நோக்கி வந்து இந்த இடத்தில் டபார் என்று மோதிபதில்  பூமி  பள்ளமாகி நீர் சேர்ந்து ஏரி யாகிவிட்டது. இது மாதிரி நிகழ்ச்சி இது ஒன்று தான்..
சட்டையில் பட்டன் போட்டுக்கொள்கிறோமே, அதை முதலில் கண்டுபிடித்தது நமது முன்னோர்கள் தான். உலகில் வேறெங்கும் இல்லை.   தலைக்கு  எண்ணெய் சிக்கு, அழுக்கு  போக  உபயோகிக்கிறோமே  ஷாம்பு  அதுவும் இங்கே தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.   நமது முன்னோர்கள்  சீயக்காய் எனும் சிகைக்காய்  ஸ்நான  பொடி  உபயோகித்தது நினைவிருக்கட்டும். கண்ணில் பார்வை மறைத்து  புறை  என்கிறோமே  cataract .  அதை முதலில்  ஆபரேஷன்  பண்ணியது நமது பாரத தேசத்தில் தான். ஸுஸ்ருதர்  என்கிற ரிஷி டாக்டர் பிரபலமானவர்.   பிளாஸ்டிக்  surgery என்பது கூட  இங்கே தான் முதலில்.

கண்ணில் ஜலம்  வழிவது ஒரு புறம் இருக்கட்டும். சந்திரனில்  தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்துக்கு சொன்னதே  நமது பாரத தேசம் தான்.
உலகத்திலேயே  அதிகமாக பால்  உற்பத்தி பண்ணுவது நமது பாரத தேசம் தான்.

பயப்படாமல் கேளுங்கள் ஒரு குசுகுசு சொல்கிறேன்.   உலகத்திலேயே  அதிக கொலைகள் நடப்பது இங்கே தான்.

உலகத்தில் அதிகமாக  உயர் ரக  கணினி,  கம்பியூட்டர்கள் தயாரிக்கும்  3 தேசங்களில் நமது பாரத தேசம் ஒன்று.மற்ற ரெண்டும் அமெரிக்கா,  ஜப்பான்.

நமது தேசிய பானம்  டீ . தேநீர்.

ஆயுத பயிற்சி, வீர கலைகள் Martial Arts  என்பதை உலகத்துக்கே அறிமுகப் படுத்தியது நமது பாரத தேசம் தான்.
7000 வருஷம் முன்பே இங்கே ரிஷிகள் யோகிகள் இருந்தது ராமாயணத்திலேயே தெரிகிறது. யோகம் உலகத்துக்கு தெரிந்தது இங்கிருந்து தான் .
பிரபல  தத்வ மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein. என்ன சொல்கிறார் தெரியுமா ?”We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile  scientific discovery could have been made”. உலகத்தில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள், வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்தியர்கள் தான் முதலில் கணிதம், எப்படி எண்ணுவது என்று   நம்பர்களை,  பூஜ்யத்தை, கண்டுபிடித்ததால் தான். அதற்கு இந்த விஞ்ஞான உலகம் இந்தியர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இப்போவாவது தினமும் ஒரு முறையாவது ”ஜெய்  ஹிந்த் ”சொல்வீர்களா? இதை எல்லோருக்கும்  சொல்லுங்கள்,அனுப்புங்கள், தெரிந்து கொள்ளட்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *