SOUNDARYA LAHARI 23/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 23/103 நங்கநல்லூர் J K SIVAN

23. சிவனே சக்தி, சக்தியே சிவன்.

त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसा शरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत् ।
यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं कुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम् ॥ २३॥

tvayā hṛtvā vāmaṃ vapuraparitṛptēna manasā śarīrārdhaṃ śambhōraparamapi śaṅkē hṛtamabhūt ।
yadētattvadrūpaṃ sakalamaruṇābhaṃ trinayanaṃ kuchābhyāmānamraṃ kuṭilaśaśichūḍālamakuṭam ॥ 23 ॥

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா ஶரீரார்த்தம் ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல மருணாபம் த்ரினயனம் குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம்’ 23

பரமேஸ்வரன் தனது தேகத்தில் இடது பாகத்தை அம்பாளுக்கு தந்துவிட்டான். ஏனம்மா பார்வதி, அதில் உனக்கு திருப்தி இல்லையோ? ஒரு வேளை சிவன் தந்த அந்த அரை உடம்பு போதவில்லையே என்ற அரை மனசால் தான் நீ சிவனின் முழு உடம்பையும் எடுத்துக் கொண்டு விட்டாயோ,அதனால் தான் உனக்கு மூன்று கண்களோ, சிரத்தில் பிறைச் சந்திரனோ, தன்னையே உனக்கு முழுதாக தந்து விட்டதால் தான் சிவனுக்குத் தனியாக சக்தி இல்லையோ, சக்தி சிவனாகி விட்டாளோ , சிவனுக்கு என்று தனி உருவமோ, ஒளியோ இல்லையோ. எல்லாம் சிவை தானோ. அதனால் தான் அம்பாளுக்கு சிவந்த வர்ணமோ?, சிவனுக்கு நிறமே இல்லாததால், ஸ்படிகமாக உன் வண்ணத்தை தானாக பிரதிபலிக் கிறானோ?
அம்பாளை லலிதா ஸஹஸ்ரநாமம் ”சிவசக்த்யைக்யரூபிணி” என்கிறது. சிவனும் சக்தியும் ஐக்கியமான ரூபம். ஆகவே சிவனோ சக்தியோ வேறான இரண்டல்ல. ரெண்டுமே ஒன்றான உருவம். இதற்கு மேல் என்ன விவரிக்க வேண்டும்.! ஆதி சங்கரருக்கு சிவன் தெரியவில்லை, சக்தியே சிவனாக தோன்றுகிறாள்.
‘உத்தரகௌலம்’ என்ற மதத்தில் தனியாகச் சிவபூஜை இல்லை. சக்தியிலேயே சிவன் ஐக்கியம்; அவனுக்குத் தனிவடிவமும் இல்லை, தொழிலும் இல்லை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *