GOTHRAS /RISHIS J K SIVAN

கோத்திரங்கள் – ப்ரவர ரிஷிகள் – நங்கநல்லூர் J K SIVAN

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்தது. நிறைய முகநூல் வாசகர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லையே தவிர படிக்கிறார்கள்.எத்தனையோ விஷயங்களை சிந்திக்கிறார்கள். சிலர் மட்டும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.

எங்கள் கோத்ரம் ஹரித கோத்ரம். அதைப் பற்றி சில விஷயங்கள் எழுதியதற்கு இத்தனை நண்பர்கள் என் ஸ கோத்ரர்களா, ஸ கோத்ரிகளா என்று வியக்க வைத்தார்கள். அவர்கள் அத்தனைபேரும் குடும்பத்தோடு நீடூழி வாழ பகவான் கிருஷ்ணனையே வேண்டுகிறேன்.

கோத்ரம் என்பது அப்பா வழி, அப்பா, அப்பாவுக்கு அப்பா, அவருடைய அப்பா என்று வம்சாவளி. பாரம்பரியம்.அப்படி அப்பா வழியில் முதலில் ரிஷிகளாக இருந்ததிலிருந்து துவங்கும். அந்த முதல் ரிஷியே கோத்ர ரிஷி.ஒவ்வொரு கோத்ரத்துக்கு ஒரு ரிஷி ஆரம்பம்..முதல் ஏழு ரிஷிகள் சப்த ரிஷிகள். ஆரஸ், அத்ரி, கௌதமர், காஷ்யபர், பிருகு ,வசிஷ்டர், ,பாரத்வாஜர்.

விஸ்வாமித்ரர் ஆரம்பத்தில் க்ஷத்ரியனாக இருந்து கோத்ர ரிஷியானவர். முக்கிய ரிஷிகளின் குழு பின்னர் பல்வேறு பிரிவுகளாக வளர்ந்தது. பிரிவுகளுக்கு ”கணங்கள்” என்று பெயர். அதுவே குடும்பங்களாகியது. பார்கவரிலிருந்து உண்டானவை சதுர்வேதி,அக்னிஹோத்ரி பிரிவுகள். இப்படியாக கோத்திரங்கள் வளர்ந்தன. முதல் ரிஷி பரம்பரையிலிருந்து பிரிந்து பல ரிஷிகளின் பெயர்களில் புது கோத்திரங்கள் அதை பின்பற்றும் குடும்பங்கள் அநேகம் தோன்றின.ரிஷிகள் அதிகரிக்க அதன் விளைவாக கோத்திரங்கள் அதிகமாயின. பின்பற்றும் குடும்பங்கள் வேறு வேறாயின.

ஒவ்வொரு பிராமண குடும்பத்திலேயும் கோத்ரம், ப்ரவரம், அதாவது முதல் வம்ச ரிஷி, எந்த சூத்ரம் பின்பற்றுகிறோம், எந்த வேதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லும் அபிவாதனை தான் அவன் அடையாளம்.

முக்கிய ரிஷிகள் அகஸ்தியர், ஆங்கிரஸ், அத்ரி, ப்ருகு, காஸ்யபர், வசிஷ்டர், விசுவாமித்திரர். ரிக்வேதம் பிருகு வம்சத்திலிருந்து ஜமதக்னி வந்ததை சொல்கிறது. ஆங்கிரஸ் ரிஷி வம்சத்தில் கௌதமர் பாரத்வாஜர் தோன்றினார் என்கிறது. எல்லோருமே சர்வேஸ்வரனின் தோற்றங்கள். ஆகவே சிவ கோத்ரம். ருத்ரஜ பிராமணர்கள். ப்ரவரம் என்பது அவனுக்கும் மூன்று ,சில சமயம் ஐந்து ரிஷிகளோடு உண்டான சம்பந்தத்தை அடையாளம் காட்டும். உதாரணம்:; காஸ்யப கோத்ரம் கஸ்யபர், தைவளர் ,ஆவத்சாரர் மூவரோடு உண்டான சம்பந்தத்தை காட்டும்.
சில கோத்திரங்கள் / ப்ரவர ரிஷிகள் பற்றி ஒரு அட்டவணை கொடுக்கிறேன்.
Suryadhwaja: Lakhi (Mehrishi), Soral, Binju
Bharadwaja: Angirasa, Bruhaspatya (i.e. bruhaspati), Bharadwaja, Upreti
Rathitara: Baaryhaspatya, Angirasa, Rathitara
Vatula/Vadula: Bhargava,Vaitahavya,Saavedasa
Srivatsa/Vatsasya: Bhargava,Chyaavana,Aapnavaana,Aurva,Jaamadaghneya
Salankayana: Viswaamitra, Aghamarshana, Devarata
Shatamarshana: Angirasa, Powrukutsa,Traasatasya
Atreyasa: Atreyasa,Aarchanaasa,Syaavatsyasa
Kowsika: Vishwamitra,Aghavarshana,Kowsika
Kalabodhana/Kalabhavasa(3 variations)
Kalabodhana: Viswaamitra,AAgamarshana,Kalabodhana
Kalaboudha:Viswaamitra,AAgamarshana,Kalaboudha
Kalabhavasa:Viswaamitra,AAgamarshana,Kalabhavasa
Viswamitra: Viswamitra,Devarata, Owtala
Kaundinyasa (Kaundinya): Vasista,Maitraavaruna, Kaundinya
Haritasa: Angirasa, Ambarisha,Yuvanasva
Gautamasa: Angirasa,Aayasyasa, Gautama
gautamasa 7 rishis ;gautama,ayasya,ousishya,oushaja,kankshvadana,bhriguridhdha,vaamadava:krishna yajurveda tiettereeya saakha
Mowdgalya(3 Variations)
Angirasa,Bharmyasva,Mowdgalya
Tarkshya,Bharmyasva,Mowdgalya
Angirasa, Dhavya, Mowdgalya
Sandilya (4 Variations)
Kasyapasa,Aavatsaara,Daivala
Kasyapasa,Aavatsaara,Sandilya
Kasyapasa, Daivala, Asitha
Kasyapa, Aavatsaara, Dev , Naidruva(Naitruva), Rebha, Raibha , Sandila, Saandilya
Naitruvakaasyapa: Kasyapa,Aavatsara,Naitruva
Kutsa: Angirasa,Maandhatra,Kowtsa
Kanva (2 Variations)
Angirasa,Ajameeda,Kaanva
Angirasa,Kowra, Kaanva
Parashara: Vasista, Saaktya, Parashara
Agastyasa: Agastya,Tardhachyuta,Sowmavaha
Gargya/Garga (2 Variations)
Angirasa,Bharhaspatya,Bharadwaja,upadhyay
Angirasa, Sainya, Gaargya
Bhadarayana: Angirasa,Paarshadaswa, Raatitara
Kasyapa (3 Variations)
Kasyapa, Aavatsaara, Daivala, Marichi,
Kasyapa, Aavatsaara, Naidruva(Naitruva), Marichi
Kasyapa, Aavatsaara, Naidruva(Naitruva), Rebha, Raibha , Sandila, Saandilya
Sunkriti (2 Variations)
Angirasa,Kowravidha,Saankritya
Sadhya,Kowravidha,Saankritya
Angirasa, Pourukutsya, Thraasadasya
Gautamasa: Aangeerasa, ayasya, gowtama
AgniVaiwaswatha: Angirasa, Brahaspthayasa, Bharadwaja, Srukva, Agnivaiwaswathasa
Sankhyayana:Vishwamitra,Aghamarshana,Devaratha
Vishwamitra, Shraumita, Kaamakayana, Devatarasa, Devaraata, Panchashraya
Kapi: Angirasa,Amahaiya,Orukshaya,
Kapila: Angirasa,Amahaiya,Orukshaya,
Vartantu
Kutsasa: Angirasa,Mandhatha,Kutsa,
Kutchasa: Hatita, Ambarisha, Yuvanaswa, Mahandatha, Dharbapingala
Rauksaayana:Angiras, Mandhana, Madhuvachasa
Viswamitra:Viswamitra,AAgamarshana,lohitasya
Jamadagni: Bhargava, Chyavana, Aapnavaana, Aurava, Jaamadagneya
Bhargava:Bhargava ,Tvashta,Vishvarupa
Lohitasa:Lohitasa,Ashtaka,Ambareesha
Vatsa: Orva,Bhardwaj,Bhargava, Chyavana, Aapnavan
Kapinjala:Vasista,Aindrapramada,Abharadwasavya
Aupamanavya:Vasista,Aindrapramada,Abharadwasavya
இன்னும் நிறைய விஷயங்கள் அப்பப்போ தெரிந்து கொள்வோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *