AADITHYA HRIDHAYAM SLOKAS 13-18 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்

ஸ்லோகங்கள் 13-18

13. व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥

vyomanadha sthamobhedi rig yajur sama paraga ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama

வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ | கனாவ்றுஷ்டி ரபாம் மித்ரோ வின்த்யவீதீ ப்லவங்கமஃ ||

சூர்யா, வானவெளி மன்னவனே, இருள் நீக்கியே, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் உன் உஷ்ணத்தால் நீர் நிலைகளை ஆவியாக்கி, மா மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, விந்திய மலை போன்ற எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே, உன்னால் அல்லவோ ஒளியும் உயிர் ஆதாரமும் பெறுகிறோம், ப்ரம்மாவைப் போல் நீயும் ஸ்ரிஷ்டி கர்த்தா, ப்ரஜாபதி தானே. நீ என்ன எதிர்பார்த்து இதெல்லாம் தினமும் நேரம் தவறாமல் அருள்கிறாய்?. நேரம் நாள் தவறாதவனே , நேரமே உன்னால் அல்லவோ நாங்கள் அறிகிறோம். காலபுருஷனே, உனக்கு நமஸ்காரம்.

14. आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः । कविर्विश्वो महातेजा रक्तः सर्वभवोद्भवः ॥ 14 ॥

aathapee mandali mruthyu pingala sarva thapana kavir viswo maha thejaa raktha sarvodbhava

ஆதபீ மம்டலீ ம்றுத்யுஃ பிங்களஃ ஸர்வதாபனஃ | கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்தஃ ஸர்வபவோத்பவஃ || 14 ||

”சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் உன் உஷ்ணத்தால் மழை பொழிய காரணமாகி, அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் மறு உருவே, ஹிரண்மயன் எனும் பொன்னனே , உயிர் வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன், ஞான பானு, என்று வாழ்த்துகிறோம், பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே. நீ தானே சூர்யா, உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

15. नक्षत्र ग्रह ताराणाम् अधिपो विश्वभावनः । तेजसामपि तेजस्वी द्वादशात्मन्-नमो‌உस्तु ते ॥ 15 ॥

nakshtra gruha tharanam adhipo viswa bhaavana thejasam aphi thejaswi dwadasathman namosththe

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விஶ்வபாவனஃ | தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மன்-நமோ‌உஸ்து தே || 15 ||

நமஸ்காரம் நமஸ்காரம் சூர்ய நாராயணா, நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதி, சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே, நவகிரஹங்களுக்கும் தலைவா, இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கின்றவனே . ஒரு நாள் நீ இன்றி இருள் அகலுமா? பன்னிரெண்டு (தத, அர்யமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஸுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக நிலைத்திருப்பவனே . ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். நமஸ்காரம், நமஸ்காரம்.

16. नम: पूर्वाय गिरये पश्चिमायाद्रये नम: । ज्योतिर्गणानां पतये दिनाधिपतये नम: ॥16॥
nama poorvaya giraye, paschimayadraye nama jyothirgananam pathaye dhinadhipathaye nama

நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: | ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||

ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் சூர்யா நீயே அதிபதி. நீ உதித்தால் வியாதிகள் அஸ்தமிக்கும்.
சூரிய பகவானே, கிழ்வானம் சிவக்க ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உதயமாகின்றவனே, அன்றைய பிரயாணம் முடித்து மேலைவானில் செக்கர்வானமாக மறைபவனே, எதையும் பொன்னிறமாக்குபவனே, தினமும் நாம் வழிபடும் தினகரனே ஆதித்யா உனக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः। नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः॥
jayaya jaya bhadraya haryaswaya namo nama namo nama sahasramso adithyaya namo nama
ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நமஃ | நமோ நமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நமஃ || 17 ||

”சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயாயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா, அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. உழைப்புக்கும் நீ தேவை, ஓய்வெடுத்து உறங்கவும் நீ தேவை. பூமியில் பாதிநேரம் இரவும் பகலும் உன் ஒளியை கட்டுப்படுத்தி பூமி தந்து சுற்றலால், பப்பாதியாக தருகிறது. உன் ஒளியை வாங்கித்தான் சந்திரன் இரவில் இதமான குளிர்ச்சி, ஒளி ரெண்டையும் தந்து ரக்ஷிக்கிறான். எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.

नम उग्राय वीराय सारंगाय नमो नम: । नम: पद्मप्रबोधाय प्रचण्डाय नमोऽस्तु ते ॥18॥
nama ugraya veeraya sarangaya namo nama nama padma prabhodaya, marthandaya namoS THUTHE

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நமஃ | நமஃ பத்மப்ரபோதாய ப்ரசண்டாய நமோஸ்துதே || 18 ||

சூர்யநாராயணா, நீ நிர்குண பிரம்மம். பாபம் செய்தவர் அஞ்சும் பரிசுத்தனே, ரட்சிக்கும் நாயகனே, வேகத்தில் ஈடற்றவனே, காலத்தை நடத்திச் செல்பவனே, காத்திருக்கும் தாமரை மொட்டுக்களை மொட்டவிழச் செய்பவனே, உயிர்கொடுப்பவனே, உயிர் காப்பவனே, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *