RASA AASWAATHA THARANGINI — J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி.

ஸ்லோகம் 16 – 22

அவ்வளவு பெரிய ராஜ சபையில் அனைவருமே ஆச்சர்யோத்ததோடு விஸ்வாமித்ர மகரிஷி ஸ்ரீ ராமனின் அருமை பெருமையை நூறு உதாரணங்களோடு தசரதனுக்கு உணர்த்துகிறார். தசரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரி பிரதானிகள் அனைவரும் கேட்கிறார்கள். எங்கும் அமைதி நிலவுகிறது.

16. अयं धर्माराधक इति त्वम्; अयं धर्माराध्य इत्यहम् ।
அயம் தர்மாராதக இதித்வம்; அயம் தர்மாராத்ய இத்யஹம்

ராமன் தர்ம வழியில் நடப்பவன் என்கிறாயே, உனக்கு தெரியுமா தசரதா,அவனா தர்மத்தை பின் பற்றி நடப்பவன்.இல்லை, தர்ம தேவதையே அவனைப் தொழுது பின் செல்கிறது என்று? நான் இதை நிச்சயம் அறிந்தவன்.

17. अयं कोसलपतिरिति त्वम् अयं सर्वलोक पतिरित्यहम्।
அயம் கோசலபதிரிதி த்வம் அயம் சர்வலோக பதிரித்யஹம்

உன் ராமன் வெறும் கோசல மன்னனா? அயோத்திக்கு அதிபதியா? அது ஒரு சின்ன எல்லைக்குட்பட்டது. உனக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். ராமன் ஈரேழு பதினாலு லோகங்களுக்கும் அதிபதி அப்பா! நான் இதை நன்றாக அறிவேன்.

18.अयं नवीनपुरुष इति त्वम् अयं पुराणपुरुष इत्यहम् ।
அயம் நவீனபுருஷ இதித்வம். அயம் புராணபுருஷ இத்யஹம்

என் குழந்தை ராமன் பிறந்து பன்னிரண்டு வயசு கூட பூர்த்தி அடையவில்லையே. இந்த முனிவர் சொல்கிறாரே என்று இந்த பச்சிளம் பாலகனை எப்படி காட்டுக்கு அனுப்புவது,அதுவும் ராக்ஷஸர்களோடு யுத்தம் புரிய? என்று ஆதங்கப்படுகிற தசரதா, உனக்கு ராமனைத் தெரியாது. நான் சொல்கிறேன் கேள்.நான் அவனை நன்றாக அறிவேன். ராமன் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன் என்று நான் அறிவேன். அவன் சர்வசக்தி கொண்டவன். வயது என்ற ஒன்றே இல்லாத பழையவன். என்றும் புதியவன். .

19. अयं वित्तवश्य इति त्वम्; अयं भक्तवश्य इत्यहम् ।
அயம் வித்தவஸ்ய இதித்வம்.; அயம் பக்தவஸ்ய இத்யஹம்

உன்னை பொறுத்தவரை,தசரதா, மற்ற அரசர்கள் போல ராமனும் செல்வத்திற்கு அடி பணிபவன் என்பது தான் உன் எண்ணம். இல்லவே இல்லை. உண்மை எதுவென்றால் ராமனை ஜெயிப்பது, வெற்றிகொள்வது அவனது பக்தர்கள் அவனிடம் செலுத்தும் பக்தி ஒன்றே. அவன் கருனைச் செல்வன். பக்திக்கு அடிமையானவன் . பக்தர்களை நேசிப்பவன். பக்தவத்சலன் .

20. अयमश्नन् वृद्धिमुपगत इति त्वम्, ‘अनश्नन् अन्यो अभिचाकशीति’ इति श्रुतिप्रतिपादित इत्यहम् ।
யமஸ்ரன் வ்ருத்திமுபகத் இதித்வம்; அனஸ்ரன் அந்யோ அபிசாகாஸீதி இதை ஸ்ருதிப்ரதி பாதித இத்யஹம்

பாவம் நீ தசரதா , ராமனை அவன் செய்யும் நல்வினை தீவினை கட்டுப்படுத்தும் என்று குழந்தை போல் நம்புகிறாய். உலகத்தில் உள்ள எல்லோரையும் போல அவனை நினைத்துவிட்டாய். என்னைப்போல் நீயும் புரிந்துகொள் அவனிடம் இவை எதுவுமே நெருங்கமுடியாது . நல்வினை, தீவினை எல்லாவற்றைற்கும் அப்பால்பட்டவன் ராமன்.

21. अयं कर्मपरतन्त्र इति त्वम्; अयं स्वतन्त्र इत्यहम् ।
அயம் கர்மா பரதந்த்ர இதித்வம்; அயம் ஸ்வதந்த்ர இத்யஹம் 0

ராமன் மற்றவர்களை போல் கர்ம வினைகளின் பயனை துய்ப்பவன் அல்ல தசரதா, அவனை கர்மா நெருங்காது. அதற்கெல்லாம் அப்பாற் பட்டவன். அகர்மன். இதை நான் அறிவேன், நீ அறியமாட்டாய்.

22. अयं प्राकृतशरीर इति त्वम्, ‘न भूतसङ्घ संस्थानो देहोऽस्य परमात्मनः’ ‘न तस्य प्राकृता मूर्तिः मांसमेदोऽस्थिसम्भवा’ इति वचनेनाप्राकृतशरीर इत्यहम् ।।
அயம் ப்ராக்ருத சரீர இதித்வம்.; ந பூத சங்க்ய ஸம்ஸ்தானோ தேஹோஅஸ்ய பரமாத்மன்; ந தஸ்ய பிராக்ருதா மூர்த்தி. மாம் சமேதோஸ்தி சம்பவா இதை வசனே நா ப்ராக்ருத சரீர இத்யஹம் .

ராமனின் தேஹம் நம்மைப்போல் பஞ்சபூதங்களால் உருவானதா? இல்லை தசரதா இல்லை. அவன் உடலில் நமக்கு இருப்பது போல் எலும்பு, சதை தோலா? நல்ல வேடிக்கை இது. பஞ்ச பூதங்களின் சிருஷ்டி காரணன் அவன். அவன் அது வாகுமா? அவை தான் அவனாகும். அருவம் உருவம் இரண்டும் அவனே.இது எனக்குத் தெரியும், உனக்குத் தெரியாத ஒன்று.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *