CHANDHOKYA UPANISHAD. J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 1.2.1.- 1.2.14.
ராஜா ஸ்வேதகேதுவிடம் கேட்ட ஐந்து கேள்விகளும் பார்வைக்கு சாதாரணமானவையாக இருந்தாலும் அர்த்த புஷ்டி உள்ள தத்துவங்கள். உத்தாலகர் ராஜாவை அதன் அர்த்தங்களை சொல்ல வேண்டும் என்று கேட்டதால் ராஜா விளக்குகிறான். ராஜா சொன்ன விஷயம் வித்யை எனப்படுவது. மிகவும் உயர்ந்த ஞானத்தை அடிப்படையாக கொண்டது.
देवासुरा ह वै यत्र संयेतिरे उभये प्राजापत्यास्तद्ध देवा उद्गीथमाजह्रुरनेनैनानभिभविष्याम इति ॥ १.२.१ ॥
devāsurā ha vai yatra saṃyetire ubhaye prājāpatyāstaddha devā udgīthamājahruranenainānabhibhaviṣyāma iti || 1.2.1 ||
பிரஜாபதி தான் சிருஷ்டி கர்த்தா . அவரிடமிருந்து தோன்றியவர்கள் தான் தேவர்கள், ரிஷிகள், ஆன பெண் தேவதைகள் தவிர அசுரர்களும் கூட. எல்லோரும் உத்கீதமான பிரணவத்தை வாழ்த்துவார்கள். அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் எப்போதுமே ஒத்துப்போவதில்லை, யுத்தம் தான்.
अथ ह वाचमुद्गीथमुपासांचक्रिरे तां हासुराः पाप्मना विविधुस्तस्मात्तयोभयं वदति सत्यं चानृतं च पाप्मना ह्येषा विद्धा ॥ १.२.३ ॥
atha ha vācamudgīthamupāsāṃcakrire tāṃ hāsurāḥ pāpmanā vividhustasmāttayobhayaṃ vadati satyaṃ cānṛtaṃ ca pāpmanā hyeṣā viddhā || 1.2.3 ||
3. ப்ரணவமந்த்ரமான ஓம் என்பதன் சக்தி அறிந்தவர்கள். அசுரர்கள் அதை தவறாக பிரயோகித்தவர்கள். அறியாமை தான் காரணம்.
अथ ह चक्षुरुद्गीथमुपासांचक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं पश्यति दर्शनीयं चादर्शनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ १.२.४ ॥
atha ha cakṣurudgīthamupāsāṃcakrire taddhāsurāḥ pāpmanā vividhustasmāttenobhayaṃ paśyati darśanīyaṃ cādarśanīyaṃ ca pāpmanā hyetadviddham || 1.2.4 ||
4. உயிரினங்களுக்கு முக்கியமான அங்கம் கண். தேவர்களும் னால ஜீவன்களும் அதை ப்ரணவ ஸ்வரூ பத்தை தரிசிக்க பயன்படுத்தினாலும் அசுரர்கள் நல்லதை பார்க்கவில்லை. தீயவை மட்டுமே அவர்களுக்கு காட்சி பொருள். அதுவும் அறியாமையால் தான்.
अथ ह श्रोत्रमुद्गीथमुपासांचक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयं शृणोति श्रवणीयं चाश्रवणीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ १.२.५ ॥
atha ha śrotramudgīthamupāsāṃcakrire taddhāsurāḥ pāpmanā vividhustasmāttenobhayaṃ śṛṇoti śravaṇīyaṃ cāśravaṇīyaṃ ca pāpmanā hyetadviddham || 1.2.5 ||
கண்ணுக்கு அடுத்தபடி காது. அதால் கேட்பதை தான் ஸ்ரவணம் என்பது. .பிரணவத்தை கேட்பதற்காகத்தான் காது என்று நல்லவர்கள் கருதினார்கள். அசுரர்களுக்கு ஏனோ அது தோன்றவில்லை. அதுவும் அறியாமையால் தான்.
अथ ह मन उद्गीथमुपासांचक्रिरे तद्धासुराः पाप्मना विविधुस्तस्मात्तेनोभयंसंकल्पते संकल्पनीयंच चासंकल्पनीयं च पाप्मना ह्येतद्विद्धम् ॥ १.२.६ ॥
atha ha mana udgīthamupāsāṃcakrire taddhāsurāḥ pāpmanā vividhustasmāttenobhayaṃsaṃkalpate saṃkalpanīyaṃca cāsaṃkalpanīyaṃ ca pāpmanā hyetadviddham || 1.2.6 ||
எதுத்து அவர்கள் வணங்கியது மனசு. அதால் தான் பிரணவ மந்த்ரத்தை உச்சாடனம் பண்ண முடியு மல்லவா? நல்ல ஜீவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள, அசுரர்களுக்கு அது தோன்றவில்லை. மனதை தீய வழியில் செலுத்தினார்கள். அதுவும் அறியாமையால் தான்.
अथ ह य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासांचक्रिरे तंहासुरा ऋत्वा विदध्वंसुर्यथाश्मानमाखणमृत्वा विध्वंसेतैवम् ॥ १.२.७ ॥
atha ha ya evāyaṃ mukhyaḥ prāṇastamudgīthamupāsāṃcakrire taṃhāsurā ṛtvā vidadhvaṃsuryathāśmānamākhaṇamṛtvā vidhvaṃsetaivam || 1.2.7 ||
எல்லாவற்றிற்கும் மேலானது பிராணன். அத்தியா வசியமானது. பஞ்ச பிராணனை வாயுவாக வணங்கினார்கள். ஸ்தோத்ரம் செய்தார்கள். அந்த ப்ராணனால் உயிரிழப்பதை மட்டுமே அசுரர்கள் கண்டார்கள். அதுவும் அறியாமையால் தான்.
यथाश्मानमाखणमृत्वा विध्वंसत एवं हैव स विध्वंसते य एवंविदि पापं कामयते यश्चैनमभिदासति स एषोऽश्माखणः ॥ १.२.८ ॥
yathāśmānamākhaṇamṛtvā vidhvaṃsata evaṃ haiva sa vidhvaṃsate ya evaṃvidi pāpaṃ kāmayate yaścainamabhidāsati sa eṣo’śmākhaṇaḥ || 1.2.8 ||
ப்ரணவ சக்தியின் மஹிமை அறியாமல் அதன் பலத்தை உணராமல் அசுரர்கள் அழிந்தார்கள். பாறையோடு மோதின களிமண் பானை கதையாகி விட்டது.
नैवैतेन सुरभि न दुर्गन्धि विजानात्यपहतपाप्मा ह्येष तेन यदश्नाति यत्पिबति तेनेतरान्प्राणानवति एतमु एवान्ततोऽवित्त्वोत्क्रमति व्याददात्येवान्तत इति ॥ १.२.९ ॥
naivaitena surabhi na durgandhi vijānātyapahatapāpmā hyeṣa tena yadaśnāti yatpibati tenetarānprāṇānavati etamu evāntato’vittvotkramati vyādadātyevāntata iti || 1.2.9 ||
9. பிராணன் புனிதமானது. அப்பழுக்கற்றது. மற்ற புலன்களின் இயக்கத்துக்கு உதவ பிராணன் ஆகாரம் உட்கொள்ளும். பிராணன் போய்விட்டால் உடல் இயங்குவதில்லை. சரீரம் மரக்கட்டை. உயிர்வாழ பிராணன் வேண்டும். அது உள்ளே வரவேண்டும் என்று உடல் வாயை திறந்து பிராணனை த் தேடி பிராணன் திரும்பி வராததால் உடல் பிணமாகிறது.பிணம் வாய் திறந்திருப்பதற்கு இதைக் காரணமாக சொல்வார்கள்.
तं हाङ्गिरा उद्गीथमुपासांचक्र एतमु एवाङ्गिरसं मन्यन्तेऽङ्गानां यद्रसः ॥ १.२.१० ॥
taṃ hāṅgirā udgīthamupāsāṃcakra etamu evāṅgirasaṃ manyante’ṅgānāṃ yadrasaḥ || 1.2.10 ||
ரிஷி ஆங்கிரஸ் மஹா பிராணனை வழிபட்டார். ப்ரணவ மந்திரத்தை விடாமல் உச்சரித்தார். மஹா பிராணனனுக்கு அதனால் ஒரு பெயர் ஆங்கிரஸ்.
तेन तं ह बृहस्पतिरुद्गीथमुपासांचक्र एतमु एव बृहस्पतिं मन्यन्ते वाग्घि बृहती तस्या एष पतिः ॥ १.२.११ ॥
tena taṃ ha bṛhaspatirudgīthamupāsāṃcakra etamu eva bṛhaspatiṃ manyante vāgghi bṛhatī tasyā eṣa patiḥ || 1.2.11 ||
பிரஹஸ்பதி ப்ராணனான பிரம்மத்தை உபாசித்தவர். ப்ராணனுக்கு இன்னொரு பெயர் ப்ரஹஸ்பதி . பிராணன் இருந்தால் தான் வாக்கு இயங்கும்.
तेन तं हायास्य उद्गीथमुपासांचक्र एतमु एवायास्यं मन्यन्त आस्याद्यदयते ॥ १.२.१२
tena taṃ hāyāsya udgīthamupāsāṃcakra etamu evāyāsyaṃ manyanta āsyādyadayate || 1.2.12 ||
12. ஹாயாஸ்ய உபாசனை என்று இதற்கு பெயர். பிராணனை உத்கீதமாக ப்ரம்மமாக வழிபடுவது. ஆயாஸ்ய என்றால் வாய் திறந்து, வாய்வழியாக என்று ஒரு அர்த்தம். .
तेन तंह बको दाल्भ्यो विदांचकार । स ह नैमिशीयानामुद्गाता बभूव स ह स्मैभ्यः कामानागायति ॥ 1.2.13 ॥
tena taṃha bako dālbhyo vidāṃcakāra | sa ha naimiśīyānāmudgātā babhūva sa ha smaibhyaḥ kāmānāgāyati || 1.2.13 ||
13. தால்பா என்கிற ரிஷியின் குமாரர் பகர் என்கிற ரிஷி. அவர் பிராணனை உத்கீதமாக உச்சரித்தவர். நைமிசாரண்ய ரிஷிகள் அவரை அழைத்து உத்கீதம் உச்சகரிக்க சொல்லி மகிழ்வார்கள்.
आगाता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्त इत्यध्यात्मम् ॥ १.२.१४ ॥॥ इति द्वितीयः खण्डः ॥
āgātā ha vai kāmānāṃ bhavati ya etadevaṃ vidvānakṣaramudgīthamupāsta ityadhyātmam || 1.2.14 ||
|| iti dvitīyaḥ khaṇḍaḥ ||
ப்ராணன் எனும் பிரணவ ஸ்வரூபத்தை எவர் உண்மையான அர்த்ததோடு புரிந்து கொண்டு உத்கீத அக்ஷர ப்ரம்மமாக அதன் பயனாக அவர்களே அக்ஷரப்ரம்ம ஸ்வரூபத்தை அடைவார்கள். ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக பெற்று சகல சௌபாக்யங்க
ளோடு வாழ்வார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *