CHANDOGYOPANISHAD – J K SIVAN

சாண்டோக்கிய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN

சாந்தோக்கிய உபநிஷத் – பேர் மட்டும் தெரியும். அது என்ன சொல்கிறது என்று இதுவரை தெரிந்துகொள்ள விருப்பமே எழ வில்லை. எதனால்?

ஒன்று இதெல்லாம் கிழம் கட்டைகளுக்கு. நாமும் அறுபது எழுபதுக்கு மேல் அக்கடா என்று ஓய்வாக ஒருவேலையும் இன்றி இருக்கும்போது படித்து தெரிந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள். அதற்கு அச்சரமாக ஒரு சிலர் புத்தகம் மலிவாக கிடைத்தால், ஓசியில் கிடைத்தால், வாங்கி அட்டை போட்டு அலமாரியில் வைப்பவர்கள். ஆனால் அறுபது எழுபது நெருங்கும்போது அக்கடா என்ற ஒய்வு கிட்டுவதில்லை, நோய் பிடித்துக் கொள்கிறது.கண் காது மார்பு, முதுகு, நுரையீரல், சிறுநீரகம் ஏதாவது ஒரு பிடுங்கல் படிக்க விடுவதில்லை. மரண பயம் முழுதும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது. டாக்டர்கள் அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்று தடுக்கிறார்கள். வீட்டில் அதனால் நாக்குக்கு ருசியாக எதுவும் கிடைக்கலே என்று நண்பர்கள் சொல்கிறார்கள். அட்டை போட்ட புத்தகம் பல வருஷங்கள் தன்னை தொடுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து பழைய பேப்பர் கடைக்காரனை சரணடைகிறது. சிலர் வாழ்வு முடிந்தும் விடுகிறது.

இன்னொரு காரணம். இதெல்லாம் நமக்கு புரியாது என்று நினைப்பது. படிக்காமலேயே எப்படி முடிவெடுக் கலாம்? சிலர் சொல்கிறார்கள் என்று நம்பும்போது வேறு சிலர் இது புரியும், அவசியம் இதை படித்து தெரிந்து கொண்டு அதன் படி நடந்தாலும் வாழ்க்கை செம்மையாகும் என்றும் உபதேசிக்கிறார்களே, அது ஏன் காதில் விழவில்லை.

நான் சாண்டோக்கிய உபநிஷதத்தை படித்தேன்.ஓரளவு புரிந்தது.அதை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேனே . ஐந்தாயிரம் பேருக்கு மேல் எனக்கு நண்பர்கள் என்று முகநூல் சொன்னபோதிலும் அதில் ஒரு பத்து பேராவது இதை படிக்கமாட்டார்களா, என் போல் கொஞ்சம் புரிந்து கொள்ளமாட்டார்களா? என்ற நம்பிக்கை எழுத தூண்டுகிறது. சுருக்கமாகத்தான் அளிப்பேன் பயப்படவேண்டாம். சில சமயங்கள் நூலின் சொற்களை விட விளக்கங்கள் ரொம்ப மைல் கணக்காக நீளும். வால்மீகி, வியாசர், காளிதாசன் கம்பர் என்று வேறு சில இன்னும் புரியாத சொற்களை விளக்கங்களாக கொடுத்து உடனே புத்தகத்தை மூட வைக்கிறார்கள். நான் அப்படி செய்யமாட்டேன் என்று நீங்கள் அறிவீர்கள். எத்தனை உபநிஷதங்களை, இதிகாச, ஆதிசங்கர அத்வைத, ராமானுஜ விஸிஷ்டாத் வைத, மத்வரின் த்வைத, வேதாந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

++
சாந்தோக்கிய உபநிஷத் 1.1.1 – 1.1.10

ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत । ओमिति ह्युद्गायति तस्योपव्याख्यानम् ॥ १.१.१ ॥
omityetadakṣaramudgīthamupāsīta | omiti hyudgāyati tasyopavyākhyānam || 1.1.1 ||
ஓமித்யேதத³க்ஷரமுத்³கீ³த²முபாஸீத । ஓமிதி ஹ்யுத்³கா³யதி தஸ்யோபவ்யாக்²யாநம் ॥ 1.1.1॥

1.பிரம்மத்தை அறிந்துகொள்ள தேவையான சாவி முதலில் ” ஓம்” எனும் பிரணவ சப்தம் தான். முடிந்தவரை ‘ஓம்” என்று நாபியிலிருந்து தனியாக மனதை உள்ளே செலுத்தி உச்சரிக்க பழகுவோம்.

2. एषां भूतानां पृथिवी रसः पृथिव्या अपो रसः । अपामोषधयो रस ओषधीनां पुरुषो रसः पुरुषस्य वाग्रसो वाच ऋग्रस ऋचः साम रसः साम्न उद्गीथो रसः ॥ १.१.२ ॥

eṣāṃ bhūtānāṃ pṛthivī rasaḥ pṛthivyā apo rasaḥ | apāmoṣadhayo rasa oṣadhīnāṃ puruṣo rasaḥ puruṣasya vāgraso vāca ṛgrasa ṛcaḥ sāma rasaḥ sāmna udgītho rasaḥ || 1.1.2 ||

ஏஷாம் பூ⁴தாநாம் ப்ரு’தி²வீ ரஸ: ப்ரு’தி²வ்யா அபோ ரஸ: । அபாமோஷத⁴யோ ரஸ ஓஷதீ⁴நாம் புருஷோ ரஸ: புருஷஸ்ய வாக்³ரஸோ வாச ரு’க்³ரஸ ரு’ச: ஸாம ரஸ: ஸாம்ந உத்³கீ³தோ² ரஸ: ॥ 1.1.2

2. ஒரே வார்த்தையில் வள்ளுவர் சொல்லிவிட்டார். பஞ்ச பூதங்களுக்கும் தலைவன் பூமி, பூமிக்கு அவசியம் நீர், நீரின்றியமையாது உலகம். ஒரு நாள் கூட ஒரு சொட்டு தண்ணி இல்லாம நம்மால் வாழ முடியாது. சகல உயிர்களுக்கும் ஜலம் அவசியம். நீரினால் உயிர் பெறும் ஜீவன்களில் மனிதன் உயர்ந்தவன், அப்படிப்பட்ட நமக்கு கொடுக்கப்பட்ட விசேஷ வரம் தான் பேச்சு. ரிக் வேதம் தான் பேச்சில் சிறந்தது. அதன் சாறு தான் சாம வேதம். உத் கீதம் எனப்படும் ஓம் சப்தம் தான் சாமவேதத்தின் உயிர்நாடி.

3. स एष रसानांरसतमः परमः परार्ध्योऽष्टमो यदुद्गीथः ॥ १.१.३ ॥
sa eṣa rasānāṃrasatamaḥ paramaḥ parārdhyo’ṣṭamo yadudgīthaḥ || 1.1.3 ||
ஸ ஏஷ ரஸாநாꣳரஸதம: பரம: பரார்த்⁴யோऽஷ்டமோ யது³த்³கீ³த:² ॥ 1.1.3
இப்படிப்பட்ட சர்வ சக்தி வாய்ந்த ”ஓம்” எல்லாவற்றிலும் சிறந்தது. மிக உன்னதமான பிரணவ மந்திரம்.

4,कतमा कतमर्क्कतमत्कतमत्साम कतमः कतम उद्गीथ इति विमृष्टं भवति ॥ १.१.४ ॥
katamā katamarkkatamatkatamatsāma katamaḥ katama udgītha iti vimṛṣṭaṃ bhavati || 1.1.4 ||
கதமா கதமர்க்கதமத்கதமத்ஸாம கதம: கதம உத்³கீ³த² இதி விம்ரு’ஷ்டம் ப⁴வதி ॥ 1.1.4
இனி கொஞ்சம் ஆராய்வோம். ரிக் என்பது என்ன? சாமம் என்பது என்ன? உத்கீதம் எனப்படும் ஓம் என்றால் என்ன?

5.वागेवर्क्प्राणः सामोमित्येतदक्षरमुद्गीथः । तद्वा एतन्मिथुनं यद्वाक्च प्राणश्चर्क्च साम च ॥ १.१.५ ॥
vāgevarkprāṇaḥ sāmomityetadakṣaramudgīthaḥ | tadvā etanmithunaṃ yadvākca prāṇaścarkca sāma ca || 1.1.5 ||
வாகே³வர்க்ப்ராண: ஸாமோமித்யேதத³க்ஷரமுத்³கீ³த:² । தத்³வா ஏதந்மிது²நம் யத்³வாக்ச ப்ராணஶ்சர்க்ச ஸாம ச ॥ 1.1.5॥

5. வாக்கு தான் ரிக், சாமம் என்பது மூச்சு, ஓம் என்பது ஜீவ நாதம். இவை மூன்றுமே பிரிக்க முடியாத ஜோடிகள். மூசசையும் பேச்சையும் பிரிக்கமுடியுமா, அவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கான்” என்கிறோமே. உத்கீதம் எனும் ப்ரம்மம் தான் ஓம். ரிக் சாமம் எல்லாமே ஜோடியாக இருந்தாலும் பிரணவ மந்த்ர ஓம் என்பதே.

6,देतन्मिथुनमोमित्येतस्मिन्नक्षरे संसृज्यते यदा वै मिथुनौ समागच्छत आपयतो वै तावन्योन्यस्य कामम् ॥ १.१.६ ॥
tadetanmithunamomityetasminnakṣare saṃsṛjyate yadā vai mithunau samāgacchata āpayato vai tāvanyonyasya kāmam || 1.1.6 ||
ததே³தந்மிது²நமோமித்யேதஸ்மிந்நக்ஷரே ஸꣳஸ்ரு’ஜ்யதே 1 சா²ந்தோ³க்³யோபநிஷத் யதா³ வை மிது²நௌ ஸமாக³ச்ச²த ஆபயதோ வை தாவந்யோந்யஸ்ய காமம் ॥ 1.1.6
வாழ்வும் பேச்சும் கலந்தது ஓம். ஆண் பெண் போல இணை பிரியா ஜோடி. ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றில்லை.

7.आपयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ १.१.७ ॥
āpayitā ha vai kāmānāṃ bhavati ya etadevaṃ vidvānakṣaramudgīthamupāste || 1.1.7 ||
ஆபயிதா ஹ வை காமாநாம் ப⁴வதி ய ஏததே³வம் வித்³வாநக்ஷரமுத்³கீ³த²முபாஸ்தே ॥ 1.1.7॥
எவன் ஒருவன் பிரம்மத்தை உபாசிக்கிறானோ, அது தான் ஓம் எனும் பிரணவ மந்திரம் என்று உணர்கிறானோ, அவனுக்கு வேண்டியதெல்லாம் வந்தடையும்.

8, तद्वा एतदनुज्ञाक्षरं यद्धि किंचानुजानात्योमित्येव तदाहैषो एव समृद्धिर्यदनुज्ञा समर्धयिता ह वै कामानां भवति य एतदेवं विद्वानक्षरमुद्गीथमुपास्ते ॥ १.१.८ ॥
tadvā etadanujñākṣaraṃ yaddhi kiṃcānujānātyomityeva tadāhaiṣo eva samṛddhiryadanujñā samardhayitā ha vai kāmānāṃ bhavati ya etadevaṃ vidvānakṣaramudgīthamupāste || 1.1.8 ||
தத்³வா ஏதத³நுஜ்ஞாக்ஷரம் யத்³தி⁴ கிஞ்சாநுஜாநாத்யோமித்யேவ ததா³ஹைஷோ ஏவ ஸம்ரு’த்³தி⁴ர்யத³நுஜ்ஞா ஸமர்த⁴யிதா ஹ வை காமாநாம் ப⁴வதி ய ஏததே³வம் வித்³வாநக்ஷரமுத்³கீ³த²முபாஸ்தே ॥ 1.1.8॥

ஸ்ரீ லங்கா யாழ்ப்பாண தமிழ் நண்பர்கள் என்னோடு பேசும்போது ஆம் என்பதற்கு ஓம் என்று சொல்வதை கண்டு வியந்து இருக்கிறேன். ஓம் தான் உண்மையில் ஆம். முன்னேற்றத்துக்கு வழிகாட்டி ஓம். ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருபவம் பிரம்மா ஞானி. சகலமும் அவனை வந்தடையும்.

9.तेनेयं त्रयीविद्या वर्तते ओमित्याश्रावयत्योमिति शंसत्योमित्युद्गायत्येतस्यैवाक्षरस्यापचित्यै महिम्ना रसेन ॥ १.१.९ ॥
teneyaṃ trayīvidyā vartate omityāśrāvayatyomiti śaṃsatyomityudgāyatyetasyaivākṣarasyāpacityai mahimnā rasena || 1.1.9 ||
தேநேயம் த்ரயீவித்³யா வர்ததே ஓமித்யாஶ்ராவயத்யோமிதி ஶꣳஸத்யோமித்யுத்³கா³யத்யேதஸ்யைவாக்ஷரஸ்யாபசித்யை மஹிம்நா ரஸேந ॥ 1.1.9॥

ஓம் என்று ஆரம்பிக்காத மந்திரமே கிடையாது, யாகம் ஹோமம் கிடையாது. நான்கு வேதங்களுக்கும் மூலாதாரம் ஓம் தான். அன்னம் நீர் ஆகாரம் எதுவுமே ஓம் என்ற பிரணவம் இன்றி இல்லை.

10. तेनोभौ कुरुतो यश्चैतदेवं वेद यश्च न वेद । नाना तु विद्या चाविद्या च यदेव विद्यया करोति श्रद्धयोपनिषदा तदेव वीर्यवत्तरं भवतीति खल्वेतस्यैवाक्षरस्योपव्याख्यानं भवति ॥ १.१.१० ॥ ॥ इति प्रथमः खण्डः ॥
tenobhau kuruto yaścaitadevaṃ veda yaśca na veda | nānā tu vidyā cāvidyā ca yadeva vidyayā karoti śraddhayopaniṣadā tadeva vīryavattaraṃ bhavatīti khalvetasyaivākṣarasyopavyākhyānaṃ bhavati || 1.1.10 || || iti prathamaḥ khaṇḍaḥ ||
தேநோபௌ⁴ குருதோ யஶ்சைததே³வம் வேத³ யஶ்ச ந வேத³ । நாநா து வித்³யா சாவித்³யா ச யதே³வ வித்³யயா கரோதி ஶ்ரத்³த⁴யோபநிஷதா³ ததே³வ வீர்யவத்தரம் ப⁴வதீதி க²ல்வேதஸ்யைவாக்ஷரஸ்யோபவ்யாக்²யாநம் ப⁴வதி ॥ 1.1.10॥

நாம் மந்திரம் என்ன என்றே தெரியாமல் மந்த்ரங்களை உச்சரிக்கிறோம், வாத்யார் ஒன்று சொன்னால் நாம் ஒன்று சொல்கிறோம். எல்லாமே ஓம் என்பதிலிருந்தே சொல்லப்படுகிறது என்றாவது புரிந்தால் சரி. ஓம் என்பதை அறிந்தவன்,உணர்ந்தவன் வேதங்களின் சாரத்தை தெரிந்தவன் . listen to attached OM CHANTING AND PRACTICE https://youtu.be/J11VChbAboA

next ten will follow

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *