VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 66 -80 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
லோகோ பின்ன ருசி: உலகத்தில் ஒவ்வொருவரின் விருப்பமும் எதிர்பார்ப்பு வெவ்வேறு மாதிரியானது. எல்லோரையும் ஒரே சமயத்தில் திருப்தி படுத்துவது நாய்வாலை நிமிர்த்தும் காரியம். என்ன செய்யலாம்? எல்லோருக்கும் பிடித்தமாதிரி சில விஷயங்களை அறிமுகப்படுத்துவோம்? கலர் கலர் மாத்திரைகளை விழுங்குவது போல அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்கள் பலவற்றை தினமும் மாற்றி மாற்றி அருள்வோம். நாமும் அவர்களோடு சேர்ந்து கும்பலோடு கும்பலாக பயன் பெறுவோம் என்பது என் எண்ணம். இந்த முயற்சி கொஞ்சம் கஷ்டம் தான்.சிலது விட்டுப்போய்விடும். சிலது மறந்து போகும். இதோ உதாரணமாக: அடாடா, சிலநாட்களாக ஆதி சங்கரரை மறந்து விட்டோமே. அவரது ‘விவேக சூடாமணி” அத்வைத நூலை 65க்கு அப்புறம் கொடுக்கவில்லையே. 580 இருக்கிறதே. இதோ இன்று ஒரு 15 அற்புத வாக்குகளை அளிப்போம் என்று உடனே ஆரம்பித்துவிட்டேன்.
66. तस्मात्सर्वप्रयत्नेन भवबन्धविमुक्तये। स्वैरेव यत्नः कर्तव्यो रोगादाविव पण्डितैः ॥
tasmātsarvaprayatnēna bhavabandhavimuktayē ।svairēva yatnaḥ kartavyō rōgādāviva paṇḍitaiḥ ॥ 66॥
தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந ப⁴வப³ந்த⁴விமுக்தயே । ஸ்வைரேவ யத்ந: கர்தவ்யோ ரோகா³தா³விவ பண்டி³தை: ॥ 66॥
66. எப்படி நாம் வியாதி, நோய்கள் வந்தால் அவற்றை விரட்டி அடிக்க டாக்டரிடம் ஓடி காசைக்கொடுத்தது நோயைத் தொலைக்கிறோமோ அப்படி தான் கெட்டிக்காரத்தனத்தோடு, ஒவ்வொருவரும் முயற்சி செய்துஎப்படியாவது இந்த ஜனன மரண சுழலில் இருந்து மீள வேண்டும். இதற்கு கை கண்ட டாக்டர்கள் ஆதி சங்கரர், மஹா பெரியவா போன்ற ஞானிகள்.
அவர்கள் உபதேசங்களை விடாமல் திரும்ப திரும்ப படித்து அதை உள்வாங்கிக்கொண்டு பின் பற்றவேண்டும்.
67. रोगादेरिव यस्त्वयाद्य कृतः प्रश्नो वरीयाञ्छास्त्रविन्मतः । सम्मतः सूत्रप्रायो निगूढार्थो ज्ञातव्यश्च मुमुक्षुभिः ॥ ६७॥
(pāṭhabhēdaḥ – rōgādēriva) yastvayādya kṛtaḥ praśnō varīyāñChāstravinmataḥ । (pāṭhabhēdaḥ – sammataḥ)sūtraprāyō nigūḍhārthō jñātavyaścha mumukṣubhiḥ ॥ 67॥
ரோகா³தே³ரிவ யஸ்த்வயாத்³ய க்ரு’த: ப்ரஶ்நோ வரீயாஞ்சா²ஸ்த்ரவிந்மத: । ஸம்மத: ஸூத்ரப்ராயோ நிகூ³டா⁴ர்தோ² ஜ்ஞாதவ்யஶ்ச முமுக்ஷுபி:⁴ ॥ 67॥
சிஷ்யா, இன்று நீ கேட்ட கேள்வி இருக்கிறதே, பிரமாதம், இதை வேதங்கள், நூல்கள், சாஸ்திரங்கள் அறிந்த ஞானிகள் மஹான்கள் அழகாக விளக்குவார்கள், அர்த்தமுள்ளவை அவை. மோக்ஷம் பெற வழி வகுப்பவை.
68. शृणुष्वावहितो विद्वन्यन्मया समुदीर्यते। तदेतच्छ्रवणात्सद्यो भवबन्धाद्विमोक्ष्यसे ॥ 68॥
śaṛṇuṣvāvahitō vidvanyanmayā samudīryatē ।tadētachChravaṇātsadyō bhavabandhādvimōkṣyasē ॥ 68॥
ஶ்ரு’ணுஷ்வாவஹிதோ வித்³வந்யந்மயா ஸமுதீ³ர்யதே । ததே³தச்ச்²ரவணாத்ஸத்³யோ ப⁴வப³ந்தா⁴த்³விமோக்ஷ்யஸே ॥ 68॥
நான் சொல்வதை நன்றாக கேள். ஸம்ஸார சாகரத்திலிருந்து நீ தப்ப அது உதவும்.
69. मोक्षस्य हेतुः प्रथमो निगद्यते वैराग्यमत्यन्तमनित्यवस्तुषु । ततः शमश्चापि दमस्तितिक्षा न्यासः प्रसक्ताखिलकर्मणां भृशम्॥ ६९
mōkṣasya hētuḥ prathamō nigadyatēvairāgyamatyantamanityavastuṣu ।tataḥ śamaśchāpi damastitikṣā
nyāsaḥ prasaktākhilakarmaṇāṃ bhṛśam ॥ 69॥
மோக்ஷஸ்ய ஹேது: ப்ரத²மோ நிக³த்³யதே வைராக்³யமத்யந்தமநித்யவஸ்துஷு । தத: ஶமஶ்சாபி த³மஸ்திதிக்ஷா ந்யாஸ: ப்ரஸக்தாகி²லகர்மணாம் ப்⁴ரு’ஶம் ॥ 69॥
அழியக்கூடிய எந்த வாஸ்துவின் மேலும் ஆசை வைக்காதே. அது தான் முதல் படி. மனதை அதன் மீதிலிருந்து திருப்பு. சாஸ்வதமில்லாதது நமக்கு எதற்கு? அமைதியை உன்னுள்ளே தேடு. சுய கட்டுப்பாட்டோடு புலன்களை அடக்க கற்றுக்கொள். சாஸ்த்ர வேத நூல்கள் என்ன சொல்கிறது என்று உன்னிப்பாக கவனி. புரிந்து கொள் . பின் பற்று.
70. ततः श्रुतिस्तन्मननं सतत्त्वध्यानं चिरं नित्यनिरन्तरं मुनेः । ततोऽविकल्पं परमेत्य विद्वान् इहैव निर्वाणसुखं समृच्छति ॥ ७०॥
tataḥ śrutistanmananaṃ satattva-dhyānaṃ chiraṃ nityanirantaraṃ munēḥ ।tatō’vikalpaṃ paramētya vidvān
ihaiva nirvāṇasukhaṃ samṛchChati ॥ 70॥
தத: ஶ்ருதிஸ்தந்மநநம் ஸதத்த்வத்⁴யாநம் சிரம் நித்யநிரந்தரம் முநே: । ததோऽவிகல்பம் பரமேத்ய வித்³வாந் இஹைவ நிர்வாணஸுக²ம் ஸம்ரு’ச்ச²தி ॥ 70॥
70. ஸ்ரவணம் என்றால் கேட்பது.ஸ்ருதி என்றால் கேட்கப்படுவது. நல்ல விஷயங்களைக் கேள். மனதில் அது பற்றி சிந்தி. அதையே பற்றி விடாமல், வேறெதிலும் மனம் அலையாமல், சிந்திப்பது தானய்யா தியானம். அது நாளடைவில் நிர்விகல்ப சமாதி நிலைக்கு நம்மை கொண்டு செல்லுமே. நிர்வாணம் எனப்படும் மோக்ஷத்தை அடைய அது தான் வழி.
71. यद्बोद्धव्यं तवेदानीमात्मानात्मविवेचनम् । तदुच्यते मया सम्यक् श्रुत्वात्मन्यवधारय ॥ ७१
yadbōddhavyaṃ tavēdānīmātmānātmavivēchanam ।taduchyatē mayā samyak śrutvātmanyavadhāraya ॥ 71॥
யத்³போ³த்³த⁴வ்யம் தவேதா³நீமாத்மாநாத்மவிவேசநம் । தது³ச்யதே மயா ஸம்யக் ஶ்ருத்வாத்மந்யவதா⁴ரய ॥ 71॥
நீ தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். ஆத்மா எது?, ஆத்மா அல்லாதது எது? இதற்குண்டான வித்யாசம் தெரிந்தால் தானே எது சரியானது என்று புரிந்து கொள்ள முடியும்? உன் மனதை அதை அறிய முயற்சி செய்ய வேண்டாமா?
72. मज्जास्थिमेदःपलरक्तचर्मत्वगाह्वयैर्धातुभिरेभिरन्वितम्। पादोरुवक्षोभुजपृष्ठमस्तकैः अङ्गैरुपाङ्गैरुपयुक्तमेतत् ॥ ७२
majjāsthimēdaḥpalaraktacharma-tvagāhvayairdhātubhirēbhiranvitam ।pādōruvakṣōbhujapṛṣṭhamastakaiḥ
aṅgairupāṅgairupayuktamētat ॥ 72॥
மஜ்ஜாஸ்தி²மேத:³பலரக்தசர்மத்வகா³ஹ்வயைர்தா⁴துபி⁴ரேபி⁴ரந்விதம் ।தோ³ருவக்ஷோபு⁴ஜப்ரு’ஷ்ட ²மஸ்தகை: அங்கை³ருபாங்கை³ருபயுக்தமேதத் ॥ 72॥
நமது உடல் சம்பந்தமாக ஏழு விஷயங்கள் இருக்கிறது. ஜவ்வு, எலும்பு, கொழுப்பு, சதை, ரத்தம் தோல். அதிலேயே கடினமான திக்கான, தோல் (பாதம், உள்ளங்கை போன்ற இடத்தில் இருப்பது ) . நமது உடலில் உள்ள அங்க பாகங்கள்: கை கால்கள், தொடைகள், மார்பு, தோள் , வயிறு, முதுகு தலை அல்லவா?
73. अहम्ममेति प्रथितं शरीरं मोहास्पदं स्थूलमितीर्यतेबुधैः । नभोनभस्वद्दहनाम्बुभूमयः सूक्ष्माणि भूतानि भवन्ति तानि ॥ ७३
ahammamēti prathitaṃ śarīraṃ mōhāspadaṃ sthūlamitīryatē budhaiḥ । nabhōnabhasvaddahanāmbubhūmayaḥ
sūkṣmāṇi bhūtāni bhavanti tāni ॥ 73॥
அஹம்மமேதி ப்ரதி²தம் ஶரீரம் மோஹாஸ்பத³ம் ஸ்தூ²லமிதீர்யதே பு³தை:⁴ நபோ⁴நப⁴ஸ்வத்³த³
ஹநாம்பு³பூ⁴மய: ஸூக்ஷ்மாணி பூ⁴தாநி ப⁴வந்தி தாநி ॥ 73॥
இந்த உடம்பு எதை உபசரித்து தன்னுள்ளே பராமரிக்கிறது தெரியுமா? ”நான்” ”எனது” எனும் மாயையை. இந்த உடம்புக்கு ஸ்தூல சரீரம் என்று ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். அதை தான் கோபு, பாபு, குமார், கண்ணன் என்று பேர் வைத்து நாம் அடையாளம் காண்கிறோம். அந்த பேர் சொல்லி யாராவது கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறோம்.. ஆகாசம், காற்று, அக்னி எனும் நெருப்பு, ஜலம் , மண் இதெல்லாம் பஞ்ச பூதங்கள்.
74. परस्परांशैर्मिलितानि भूत्वा स्थूलानि च स्थूलशरीरहेतवः । मात्रास्तदीया विषया भवन्ति शब्दादयः पञ्च सुखाय भोक्तुः ॥ ७४
parasparāṃśairmilitāni bhūtvā sthūlāni cha sthūlaśarīrahētavaḥ ।mātrāstadīyā viṣayā bhavanti
śabdādayaḥ pañcha sukhāya bhōktuḥ ॥ 74॥
பரஸ்பராம்ஶைர்மிலிதாநி பூ⁴த்வா ஸ்தூ²லாநி ச ஸ்தூ²லஶரீரஹேதவ: । மாத்ராஸ்ததீ³யா விஷயா ப⁴வந்தி ஶப்³தா³த³ய: பஞ்ச ஸுகா²ய போ⁴க்து: ॥ 74॥
மேலே சொன்ன பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து வெவ்வெறு அளவில் கலவையானால் உடம்பு பிறக்கிறது. ஒவ்வொரு கலவையும் பல வித நுணுக்கமான பஞ்சபூத அளவினம். புலன்களின் அடிமையாக இந்த உடம்பு ஆகிவிடுகிறது. புலன்கள் இழுத்த இழுப்புக்கு ஆடுகிறது. அவஸ்தை படுகிறது. சப்தம், கந்தம், ருசி போன்ற பல சுவைகளை தேடுகிறது. இதெல்லாம் தான் நிரந்தர சந்தோஷம் என்று நினைத்து ஏமாறுகிறது. இதை ருசிப்பவன் தான் ஜீவன்.
75. य एषुमूढा विषयेषुबद्धा रागोरुपाशेन सुदुर्दमेन । आयान्ति निर्यान्त्यध ऊर्ध्वमुच्चैः स्वकर्मदूतेन जवेन नीताः ॥ 75
ya ēṣu mūḍhā viṣayēṣu baddhā rāgōrupāśēna sudurdamēna ।āyānti niryāntyadha ūrdhvamuchchaiḥ
svakarmadūtēna javēna nītāḥ ॥ 75॥
ய ஏஷு மூடா⁴ விஷயேஷு ப³த்³தா⁴ ராகோ³ருபாஶேந ஸுது³ர்த³மேந । ஆயாந்தி நிர்யாந்த்யத⁴ ஊர்த்⁴வமுச்சை: ஸ்வகர்மதூ³தேந ஜவேந நீதா: ॥ 75॥
தம்பி, சொல்கிறேன் கேள்: முட்டாள்கள் தான் இந்த புலன்கள் சமாச்சாரத்தில் சிக்கிக்கொண்டு பற்று எனும் வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த வலையை அறுத்து வெளியேறுவது எளிதல்ல. அவரவர் செய்த பூர்வ ஜென்ம கர்மாவின் பலன் தான் இதெல்லாவற்றையும் முடிவு செய்கிறது.
76. शब्दादिभिः पञ्चभिरेव पञ्च पञ्चत्वमापुः स्वगुणेन बद्धाः । कुरङ्गमातङ्गपतङ्गमीन भृङ्गा नरः पञ्चभिरञ्चितः किम्॥ ७६
śabdādibhiḥ pañchabhirēva pañchapañchatvamāpuḥ svaguṇēna baddhāḥ । kuraṅgamātaṅgapataṅgamīna-
bhṛṅgā naraḥ pañchabhirañchitaḥ kim ॥ 76॥
ஶப்³தா³தி³பி:⁴ பஞ்சபி⁴ரேவ பஞ்ச பஞ்சத்வமாபு: ஸ்வகு³ணேந ப³த்³தா:⁴ । குரங்க³மாதங்க ³பதங்க³மீந ப்⁴ரு’ங்கா³ நர: பஞ்சபி⁴ரஞ்சித: கிம் ॥ 76॥
76. ஒரு மான், ஒரு யானை, ஒரு வண்டு , ஒரு மீன், கருவண்டு, இதெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போல் தோன்றினாலும் பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக அடுத்து எடுத்த பிறவிகளில் ஒன்றே தான். ஒன்றோடொன்று பற்று கொண்டது இப்படித்தான். மனிதன் பிறப்பதும் இது போலவே தானே. அவைகளோடு சம்பந்தப்பட்டவன் தானே அவனும்.
दोषेण तीव्रो विषयः कृष्णसर्पविषादपि । विषं निहन्ति भोक्तारं द्रष्टारं चक्षुषाप्ययम्॥ ७
dōṣēṇa tīvrō viṣayaḥ kṛṣṇasarpaviṣādapi । viṣaṃ nihanti bhōktāraṃ draṣṭāraṃ chakṣuṣāpyayam ॥ 77॥
தோ³ஷேண தீவ்ரோ விஷய: க்ரு’ஷ்ணஸர்பவிஷாத³பி । விஷம் நிஹந்தி போ⁴க்தாரம் த்³ரஷ்டாரம் சக்ஷுஷாப்யயம் ॥ 77॥
புலன்கள் ஈர்க்கும் விஷயங்கள் சக்தி வாய்ந்தவை. அவற்றால் விளையும் தீங்குகள் ஏராளம். விஷயானுபவங்கள் விஷத்தை விட கூடியவை. விஷம் எவன் அதை சாப்பிடுகிறானோ அவனைத்தான் கொல்கிறது . இந்த விஷயனுபவங்கள், எவன் அதை கேட்டாலும், சொன்னாலும், பார்த்தாலும் நினைத்தாலும் அவனைத் தொற்றிக்கொள்கிறது. பற்றிக்கொள்கிறது.
78. विषयाशामहापाशाद्यो विमुक्तः सुदुस्त्यजात् । स एव कल्पतेमुक्त्यैनान्यः षट्शास्त्रवेद्यपि ॥ ७८॥
viṣayāśāmahāpāśādyō vimuktaḥ sudustyajāt ।sa ēva kalpatē muktyai nānyaḥ ṣaṭśāstravēdyapi ॥ 78॥
விஷயாஶாமஹாபாஶாத்³யோ விமுக்த: ஸுது³ஸ்த்யஜாத் । ஸ ஏவ கல்பதே முக்த்யை நாந்ய: ஷட்ஶாஸ்த்ரவேத்³யபி ॥ 78॥
எவனொருவன் திட சித்தனாக, வைராக்கியம் கொண்டவனாக , இப்படிப்பட்ட புலன்களின் ஈர்ப்பு சக்தியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடிந்தவனோ, அவன் தான் முக்தி, ஞானம் பெற தகுதியானவனாகிறான்.
79. आपातवैराग्यवतो मुमुक्षून् भवाब्धिपारं प्रतियातुमुद्यतान्। आशाग्रहो मज्जयतेऽन्तराले निगृह्य कण्ठेविनिवर्त्य वेगात् ॥ ७९॥
āpātavairāgyavatō mumukṣūnbhavābdhipāraṃ pratiyātumudyatān । āśāgrahō majjayatē’ntarālē
nigṛhya kaṇṭhē vinivartya vēgāt ॥ 79॥
ஆபாதவைராக்³யவதோ முமுக்ஷூந் ப⁴வாப்³தி⁴பாரம் ப்ரதியாதுமுத்³யதாந் । ஆஶாக்³ரஹோ மஜ்ஜயதேऽந்தராலே நிக்³ரு’ஹ்ய கண்டே² விநிவர்த்ய வேகா³த் ॥ 79॥
79. Tவைராக்கியமில்லாதவன் நிலை எப்படி தெரியுமா? நானும் முக்தி தேடுகிறேன் என்று ஸம்ஸார சாகர ஸம்ஸ்க்ராரங்களில் குதித்து மறுகரை அடைய முடியாதவனாய் சுறாமீன்கள் இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் செல்வது போல. என்கிறார் ஆதி சங்கரர். ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் இங்கே உபயோகமானது. திட சித்தம், வைராக்யம் எந்த நேரமும் உறுதியானமானம் கொண்டவனை கைவிடாது.
80. विषयाख्यग्रहो येन सुविरक्त्यसिना हतः । स गच्छति भवाम्भोधेः पारं प्रत्यूहवर्जितः ॥ ८०॥
viṣayākhyagrahō yēna suviraktyasinā hataḥ । sa gachChati bhavāmbhōdhēḥ pāraṃ pratyūhavarjita
விஷயாக்²யக்³ரஹோ யேந ஸுவிரக்த்யஸிநா ஹத: । ஸ க³ச்ச²தி ப⁴வாம்போ⁴தே:⁴ பாரம் ப்ரத்யூஹவர்ஜித: ॥ 80॥
புலன்களின் ஈர்ப்பு எனும் சுறா தன்னைக் கொல்வதற்கு முன் இரக்கமின்றி கொல்பவன் திட சித்தன். அவனால் தான் இந்த பவ சாகரத்தை தண்டமுடிகிறது. எந்த தடையும், தடங்கலும் இல்லாமல் முக்தி, ஞானம், ப்ரம்மம் எனும் அக்கரையை அடைகிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *