SOUNDHARYA LAHARI 59-61/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 59 -61 /103 – நங்கநல்லூர் J K SIVAN

59. स्फुरद्गण्डाभोगप्रतिफलितताटङ्कयुगलं चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम्।
यमारुह्या द्रुह्यत्यवनिरथमर्केन्दुचरणंमहावीरो मारः प्रमथपतये सज्जितवते॥

59, sphuradgaṇḍābhogapratiphalitatāṭaṅkayugalaṁ catuścakraṁ manye tava mukhamidaṁ manmatharatham |
yamāruhyā druhyatyavanirathamarkenducaraṇaṁ mahāvīro māraḥ pramathapataye sajjitavate ||

59, ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித- தாடங்க-யுகளம் சதுச்ச்க்ரம் மன்யே தவமுகமுதம் மன்மதரதம் I
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத-மர்க்கேந்து-சரணம் மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே II

அம்மா, உன் கன்னம் கண்ணாடி கிண்ணம். அதில் எது கண்ணைக்கூசும் ப்ரகாசத்தோடு பிரதிபலிக்கிறது தெரியுமா? உன் காதில் ஜொலிக்கும் தாடங்கங்கள் . இப்படிப்பட்ட அழகோடு நீ பவனி வரும்போது மன்மதன் நாலு சக்கர தேரில் அமர்ந்து சிவனை எதிர்த்து யுத்தத்துக்கு வருவது போல் உள்ளது. சிவனின் தேர் பூமி, சூரிய சந்திரர்கள் அந்த தேரின் சக்ரங்கள். மன்மதன் என்பது நமது மனதில் எழும் எண்ணங்கள். அதன் ஆத்மாவை கட்டுப்படுத்த முயல்வது தான் யுத்தம். அதில் மாயை எனும் எண்ணங்கள் எரிக்கப்படுகிறது. சிவன் யோகி என்பது இங்கே ப்ரம்மஞானி. ஞானப் பிரகாசம்.

60. सरस्वत्याः सूक्तीरमृतलहरीकौशलहरीःपिबन्त्याः शर्वाणि श्रवणचुलुकाभ्यामविरलम् ।
चमत्कारश्लाघाचलितशिरसः कुण्डलगणो झणत्कारैस्तारैः प्रतिवचनमाचष्ट इव ते ॥ ६०॥

60. Sarasvatyah sukthir amrutha-lahari-kaushala-harihPibanthyah Sarvani Sravana-chuluk abhyam aviralam;
Chamathkara-slagha-chalita-sirasah kundala-gano Jhanatkarais taraih prati-vachanam achashta iva te.

60. ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீபிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்
சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே
பரமசிவபத்தினியே ! பச்சைப் பெண்ணே பார்வதியே, அம்ருத வெள்ளத்தின் இன்பத்தை, இனிமையை உன்னுடையதாக்கிக் கொண்டவளே. உன் வாக்கு, சொற்கள், பேச்சு எவ்வளவு இன்பத்தேனாக காதில் பாயும் என அதைப் பருகுகின்ற ப்ரம்மஞானிகள் பாக்யசாலிகள் . அதைச் செவி குளிர கேட்டு ஆஹா அற்புதம் என்று ஸரஸ்வதீ தேவி சிரத்தை அசைக்கும்போது அவளது காதணிகள் ‘ஜணக்’ ‘ஜணக்’ என்ற இன்னிசை ஒலியால் ‘ஆம், ஆம்’ என்று ஆமோதிப்போது போல் அல்லவோ தோன்றுகிறது என்கிறார் ஆதி சங்கரர்.

61. असौ नासावंशस्तुहिनगिरिवंशध्वजपटि त्वदीयो नेदीयः फलतु फलमस्माकमुचितम् ।
वहन्नन्तर्मुक्ताः शिशिरतरनिश्वासगलितं समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधरः ॥ 61॥

61.Asau naasa-vamsas tuhina-girivamsa-dhvajapati Thvadhiyo nedhiyah phalatu phalam asmakam uchitam;
Vahathy anthar muktah sisira-kara-nisvasa galitham Samruddhya yat tasam bahir api cha mukta-mani-dharah

61. அஸௌ நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடித்வதீயோ நேதீய பலது பல மஸ்மாக முசிதம் பஹத்யந்தர் முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம் ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:
ஹிமவான் குலக்கொழுந்தே, கொடி மரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கொடியே. உன் மூக்குக்கு எதை அடையாளமாகச் சொல்லலாம் என்று தோன்றி எனக்கென்னவோ அதற்கு மூங்கில் தண்டு தான் பொருத்தம் என்று மனதில் பட்டது. உன் அருள் விரைவில் கிடைக்க அனுக்ரஹம் பண்ணு தாயே. உனது நாசியாகிய  மூங்கில் தண்டுக்குள்ளே முத்துக்கள் நிறைய இருக்கிறதோ? முத்துக்கள் நிறைந்தி ருப்பதால்தான் மூக்குக்கு வெளியே சந்திரநாடி பாயும் இடதுநாசியின் வழியே வெளிவரும் மூச்சுக் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறந்த முத்தை நாசி அணிந்துகொண்டிருக்கிறதோ? இப்படி எல்லாம் எப்படி எனக்கு தோன்றுகிறது? அதுவும் உன் அருள் தானோ?
.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *