MAYA PANCHAKAM – J K SIVAN

மாயா பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஸ்ரீ ஆதி சங்கரரின் நூல்கள் எண்ணற்றவை. அற்புதமான ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள் நமக்கு அவரிடமிருந்து கிடைத்த பொக்கிஷம். அதில் ஒன்று தான் இன்று நாம் அறிந்து கொள்ளும் மாயா பஞ்சகம் என்ற ஐந்து ஸ்லோகங்கள். குட்டி ஸ்தோத்ரம். ஒவ்வொரு ஜீவனும் மாயையின் பிடியில் சிக்கி இருக்கிறது. அந்த மாயை சக்தி மிகுந்தது. முடியாத காரியங்களை நடக்கச் செய்யும் பிரம்மத்தின் சக்தி மாயை. இல்லாதது எதுவோ அது தான் மாயை. ( மா = இல்லை; யா = அது).

निरूपमणित्यनिरणशकेप्यखंडे मयि चिति सर्वकल्पनानादिशुने। घटयति जगदीशजीवभेदं त्वधात्घातनपटियासि माया॥ 1

Nirupam anithya niramaskhepya khande Mayi chithi sarva vikalpananahi soonye, Ghatayathi Jagadheesa jeeva bhedham
Thwagathitha ghatanaa patiyasi maya.

நிருபம அநித்ய நிரமஷ் கேபிய கண்டே மயி சிதி ஸர்வ விகல்பநானாதி ஶூந்யே கடயதி ஜகதீச ஜீவ பேதம்
த்வகத்தித கடன படியஸி மாயா ॥ 1

எது முடியாததோ அதை முடிய வைக்கும் சக்திகொண்டது மாயை. காரணம் மனதை அது மயக்கிவிடும். அநித்யத்தை நித்யமாக்க முயலும். அற்பமானதை உன்னதமாக காட்டக்கூடியது. மாயைக்கு ரெண்டு சக்திகள் உண்டு; மறைக்கும் தன்மை. ஆவரண சக்தி என்பது ஒன்று. இன்னொன்று தக்கபடி காட்சி தரும் திட்ட சக்தி, விக்ஷேப சக்தி என்று இதற்கு பெயர். பிரம்மம் ஈஸ்வரனாக மாயாவின் விக்ஷேப சக்தியைப் பயன்படுத்தி உலகை முன்னிறுத்துகிறார் . மாயை ஈஸ்வரனின் கட்டுப்பாட்டில் இருப்பது. ஜீவன்கள் மாயையின் கட்டுப்பாட்டில் மாட்டிக்கொண்டால் அது மாயையின் அடிமையாகிவிடுகிறது. ஆத்மாவை திரை போட்டு மறைத்து வைத்து ஆத்மாவை ஜீவன் அறியமுடியாமல் ஒளித்து வைக்கிறது. பிரம்மத்தை தெரியாத குருடனாக நம்மைப் பண்ணுகிறது. ஜீவன் மனம் போன போக்கில் அதனால் போகிறது. பிரம்மம் தான் நான் என்று புரிந்து கொண்டால், ஜீவன் தனது உண்மையான ஸ்வயம் எனும் தூய்மையான உணர்வை பெறுகிறது. ப்ரம்மம் தான் நித்தியமானது, தனித்துவமானது என்று புரிந்தால் மாயையை விலக்கமுடியும் .

श्रुतिशति निगमान्तशोदकन- पयः धनादिनीदर्शनेन सद्याः । कालूशायति चतुष्पादद्यभिन्ना- असत् घटनपटियासि माया॥ 2
Sruthi sathi nigamaantha sodhakana paya: dhanadini darsanena sadhya, Kalushayathi chathush padadhyabhinna, Asathu ghatana patiyaasi maya. 2

ஸ்ருதி சாதி நிகமாந்த ஷோத கன பய: தநாதிநி தர்ஷநேன ஸத்யா: காலுஷாயதி சதுஷ்பத: த்யாபிந்நா அஸத் கடன படியாஸி மாயா 2

ஆஹா இந்த மாயை எவராலும் முடியாததை முடித்துக் காட்டும் சக்தி கொண்டது. திட சித்தம், வைராக்கியம் தீவிரமாக கொண்ட ஒரு சாதகனால் மட்டுமே அதை வெல்லமுடியும். ஆஹா, வேதங்களிலும் சாஸ்திரங்கள் உபநிஷதுகள் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற அறிஞர்களைக் கூட பணம், தனம், செல்வத்தைக் காட்டி மயக்கி அவர்களை நாலு கால் மிருகங்களை விட கேவலமாக பண்ணிவிடும் இந்த மாயை. மனதை அடிமையாக்க வல்லது. அவர்களை வெறுமே ‘சாப்பிடுவது, குடிப்பது, புணர்வது மற்றும் உறங்குவது” என்பதில் மட்டுமே மனத்தை செலவழிக்க செய்வது.

सुख्चिद्खंडविबोधमद्वितीय विद्यानला दिविनीरमिता नियोज्य। भ्रमयति भवसागरे नितन्त त्वधवद्घातनपतियासि माया ॥ 3

Sukha chidha kanda vibodhamadwitheeyam, Viya danaladhi vinirmathe niyojya, Bhramayathi bhava sagare nithantham,
Thwagathitha ghatanaa patiyasi maya. 3

சுகச் சித அகண்ட விபோதம் அத்விதீயம் வியதா அனல திவி நிர்மிதே நியோஜ்ய ப்ரமயதி பவசாகரே நிதாந்தம் த்வத் அகாதித கடனா படியாசி மாயா 3

மாயை இல்லாததை இருக்க வைக்கும். முடியாததை முடிக்கும். பேரின்பம், விழிப்புணர்வு மற்றும் வேறுபடுத்தப்படாத அறிவு ஆகிய ஆத்மாவை மாயை நெருங்காது. அதன் ஆதிக்கம் எல்லாம் பூதங்களால் ஆன உடலுடன் தான். மனம் அதன் அடிமையாகிவிட்டால் ஆத்மாவின் பக்கமே போகாது. இதனால் ஜீவன் சம்சார சாகரத்தில் மூழ்கி அவஸ்தைக்குள்ளாகிறான். மாயாவின் மாயாஜால சக்திகளால் ஜீவன் ஆத்மாவின் சக்தி, அதன் தன்மை அதன் இருப்பு அனைத்தையும் மறைக்கிறான். அவனிடமிருந்து இதை மாயை மறைத்து விடுகிறது.

ஒருவன் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் பிறந்து உடலோடும் பெயரோடும் அந்தஸ்தோடும் அடையாளமாக இருக்கும் வரை சம்சாரத்தின் சுழற்சி நிற்காது.

अपगतगुणवर्णजतिभेदे सुखचिति विप्रविद्याहनकृति च। स्फुतयति सुतदारगेमोहम् त्वथद्घातनपटियासि मया ॥

Apagatha guna varna jathibhedhe, Sukhachithi vipra vidadhyahana kruthi cha, Sphutayathi sutha dara ge moham, Thwathangaathana patiyasi maya.

அபகத குண வர்ண ஜாதி பேதே ஸுக சிதி விப்ரா வித்யா ஹன க்ருதி ச ஸ்பூதயாதி ஸுதாধர கேஹமேஹம்
த்வதங்காதந படியாஸி மாயா ॥ 4

மாயைக்கு முன் அநேகமாக எவருமே அடிமை தான். இதில் படித்தவன், கற்றவன், அறிவிலி, பணக்காரன், ஏழை எல்லோரும் ஒன்றே. சாஸ்திரங்களை ஊன்றி, உன்னிப்பாக கவனித்தால் புரிந்து கொண்டால் சிவனும் விஷ்ணுவும் வேறில்லை, வேறானவர்களும் இல்லை. இருவரும் ஒருவரே. வித்யாசம் பார்ப்பவன் மனதில் தான்.
மாயை ஜாதி, மதம் போன்ற குணங்களை மனதில் தூண்டுவது. நான், எனது என்னுடைய போன்ற சுயநல எதிர்பார்ப்புகளை ஊக்குவிக்கிறது. ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டு ஆன்மாவின் புரிந்து கொண்டவன் தானும் ஆத்மாவும் வேறல்ல என்று அறிபவன், அவனுக்கு எந்த பேதமும் எதனிடமும், எவரிடமும் இல்லை.

विधिहरिहरविभेदमप्यखंडे बत् विर्चय्या बुधनपि प्रकाशम्। भ्रामयति हरिहरभेदभव – अनहोनी घटनाएँ माया हैं। 5.
விதி ஹரி ஹர விபேதம் அபி அகண்டே பத் விர்ச்சய்யா பூதநபி ப்ரகாசம்; ப்ரமயதி ஹரி ஹர பேத பவ – அநஹோநி கதனாயெம் மாயா 5

மாயா , சாத்தியமற்றது, ஹரி மற்றும் ஹர என்ற பல்வேறு வேறுபாடுகளை முழுவதுமாக உருவாக்குகிறது, மஹான்கள், ரிஷிகள் அறிஞர்கள் மூட சில சமயம் மாயையிடம் தோற்று விடுகிறார்கள். மாயா நிர்குண ப்ரம்மனிடத்தின் தனது சக்தியைக் காட்டி தோற்பது. சைவ-வைஷ்ணவ பேதம் ஒரு மாயை மட்டுமே மற்றும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் பிரம்மனின் திரை வடிவங்கள் மட்டுமே. சமுதாயத்தில் உள்ள சாதி வேறுபாடுகளும் மாயாவின் நாடகம் மட்டுமே என்பதை ஸ்ரீசங்கரர் முந்தைய வசனத்தில் சுட்டிக் காட்டியதை இந்தச் சூழலில் மீண்டும் நாம் நினைவு கூறலாம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *