SOUNDHARYA LAHARI 51/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 51/103 – நங்கநல்லூர் J K SIVAN

शिवे श‍ृङ्गारार्द्रा तदितरजने कुत्सनपरा सरोषा गङ्गायां गिरिशचरिते विस्मयवती ।
हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजयिनी सखीषु स्मेरा ते मयि जननी दृष्टिः सकरुणा ॥ ५१॥

Shive sringarardhra tad-ithara-jane kutsana-paraa Sarosha Gangayam Girisa-charite’vismayavathi;
Har’ahibhyo bhita sarasi-ruha-saubhagya-janani Sakhishu smera the mayi janani dristih sakaruna

ஶிவே ஶங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா ஸரோஷா கங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ |
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்ய-ஜனனீ ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்றுஷ்டிஃ ஸகருணா || 51 ||

”அம்பிகே, உன் பார்வையில் தான் எத்தனை உணர்ச்சிகள். மகாதேவனை நீ பார்க்கும் போது அதில் பூர்ண அன்பு, நேசம் தெரிகிறது. மற்றவைகளின் மேல் உன் பார்வை படும்போது அதில் அதிக கூர்மையான கவனம், கடமை உணர்ச்சி, பாரபக்ஷமற்ற கவனிப்பு. கங்கையின்மேல் உன் பார்வை படும்போது அதில் கோபம் தெரிகிறது. காரணம் எனக்கு தெரியுமம்மா. மஹேஸ்வரனின் லீலைகளை திருவிளையாடல்களை செவி மடுக்கும்போது உன் கண்களில் ஆச்சர்யம், ஆர்வம் ததும்பி வழிகிறது. கொடிய விஷ நாகங்கள் சிவனின் கழுத்திலும் சிரசிலும் உடலிலும் சுற்றி வளைத்திருப்பதை காணும்போது உன் கண்களில் அச்சம், பயம் தெரிகிறதம்மா. செந்தாமரையாக உன் வதனம் சிவக்கிறது. உன் பக்தர்களை, நண்பர்களைப் பார்க்கும் பார்வையில் தான் எத்தனை நேசம், விழியோர புன்னகை!. அம்மா, என்னை நீ பார்க்கும்போது அதில் அளவற்ற கருணையை நான் அனுபவிக்கிறேன்” என்கிறார் ஆதிசங்கரர். அவர் மாதிரி எழுத கற்பனை செய்ய இன்னொருவர் பிறக்க வேண்டும்.

சுத்த பிரம்மமாக இருந்தாலும் அம்பாள் த்ரிகுணங்களை வெளிப்படுத்துபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது. ஒரு நாமம் அவளுக்கு ”த்ரிகுணா”.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *