SOUNDHARYA LAHARI 45/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 45/103 – நங்கநல்லூர் J K SIVAN

4 அம்பாளின் முக தேஜஸ்.

अरालै: स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकै:परीतं ते वक्त्रम् परिहसति पङ्केरुहरुचिम्
दरस्मेरे् यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिह: ॥ ४५

Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih -Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire – Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.

அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை: பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ: 45

அம்பிகே பராசக்தி, உன் அருளால் உன் திவ்ய சௌந்தர்யத்தை இந்த சந்நியாசி கண்டு வணங்க முடிகிறதம்மா. ஆஹா உனது புன்சிரிப்பு மலர்போல் முகத்தில் விரிந்தபோது உன்னுடைய அழகிய பற்கள் வரிசையாக அடுக்கி வைத்த நல் முத்துக்கள் போல் காட்சி அளிக்கிறது. ஒளி வீசுகிறது. மலர்ந்த தாமரை மலர் போன்ற உன் முகத்தில் மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன் வண்டுகள் எப்படி தேன் நிரம்பிய மலர்களில் சுற்றி சுற்றி ஆடி மயங்குமோ, அப்படி, உன்னுடைய முகம் இயற்கையாகவே உருண்டை நிலவாக இருப்பதாலும் , உனது நெற்றியிலிருந்து வழிந்து முகத்தில் காற்றில் சிறகடித்து ஆடும் உன் கரிய சுருண்ட கேசங்கள் நான் மேலே சொன்ன வண்டுகள் போல் ஒரு தனி அழகான, சோபையை அளிக்கிறது மட்டுமல்ல அந்த தாமரை மலரை கேலி செய்து விளையாடுவது போல் இருக்கிறது. உனது முன் நெற்றிஅதனால் மேலும் அழகு பெற்று பக்தர்களை கவர்கிறது தாயே.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 10வது ஸ்லோகத்தில் ஒரு நாமம் அம்பாளின் பற்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला –
ஶுத்³த⁴வித்³யாங்குராகாரத்³விஜபங்க்தித்³வயோஜ்ஜ்வலா |
பளிச்சென்று பிரகாசிக்கும் வெண்ணிற பற்கள் ஸ்ரீ வித்யா ஞானமலரின் அரும்புகள் போல் உபாசகர்களுக்கு ஒளிவீசுபவை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *