SOUNDHARYA LAHARI 39/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 39/103 – J K SIVAN

39. ஸ்வாதிஷ்டான சக்ர சிவ காமேஸ்வரி தர்சனம்

तव स्वाधिष्ठाने हुतवहमधिष्ठाय निरतं तमीडे संवर्तं जननि महतीं तां च समयाम् ।
यदालोके लोकान् दहति महति क्रोधकलिते दयार्द्रा या दृष्टिः शिशिरमुपचारं रचयति ॥ ३९॥

tava svādhiṣṭhāne hutavahamadhiṣṭhāya nirataṃ tamīḍe saṃvartaṃ janani mahatīṃ tāṃ ca samayām ।
yadāloke lokān dahati mahati krodhakalite dayārdrā yā dṛṣṭiḥ śiśiramupacāraṃ racayati ॥ 39॥

தவ ஸ்வாதிஷ்ட்டானே ஹுதவஹ மதிஷ்ட்டாய நிரதம் தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிர முபசாரம் ரசயதி 39

தாயே ! உன்னுடைய ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்னி தத்துவத்தை சிந்தித்து அதில் இடைவிடாது பிரகாசிக்கும் காலாக்னி ரூபரான அந்த ருத்திரனையும், மகிமை வாய்ந்த அந்த ஸமயா அல்லது சந்திரகலா சக்தி என்னும் உன்னையும், போற்றுகின்றேன். ருத்திரருடைய எந்தப் பார்வையான அக்கினி கோபத்தால் வளர்ந்து உலகங்களை எரிக்கின்றதோ அப்போது கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது குளிர்ச்சியான உபசாரத்தை செய்கிறது.

வாயுவிலிருந்து அக்கினி தோன்றுகிறது. அக்கினிக்கு இருப்பிடம் ஸ்வாதிஷ் டான சக்கரம். இது ஆறுதள கமலம். இங்கே ஸமவர்த்தேசுவரர், ஸமயாம்பாள் என்று சிவனையும் சக்தியையும் 62 தைஜஸ மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். இதற்கேற்பட்ட ஸ்தானமான அருணாசலம் என்னும் திருவண்ணாமலை. இங்கே உள்ளது தேஜோலிங்கம்.

இந்த ஸ்லோகத்தில் ரெண்டு விஷயம் உடனே நடக்கிற மாதிரி சொல்கிறார்: ஒன்று பரமேஸ்வரனின் நெற்றிக் கண் பார்வையின் சக்தி அவர் ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் இருக்கும்போது ஸர்வ ஸம்ஹார அக்னி யால் எல்லாவற்றையும் அழிக்கும் சக்தி கொண்டது. அதே நேரம் ஸமயா என்ற பெயர் கண்ட அம்பாள் ஸ்ரீ சக்தியின் கருணா கடாக்ஷம் அந்த அக்னியை குளுமைப் படுத்தி காருண்யம் பொங்கி எழச் செய்து அக்னியை சமனப்படுத்துகிறது.

சிவன் சக்தி இருவரையும் ஒன்றாக வணங்கி போற்றி பாடும் ஸ்தோத்ரம் சிவானந்த லஹரி சௌந்தர்ய லஹரி. சிவனுக்கு காலாக்னி ருத்ரன்ம் த்ரிகாக்னி காலாயன் என்று பெயர் என ருத்ரம் ஸ்லோகம் சொல்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *