SOUNDHARYA LAHARI 38/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 38/103 – நங்கநல்லூர் J K SIVAN

38. அநாஹத சக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம்

समुन्मीलत् संवित् कमलमकरन्दैकरसिकं भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरम् ।
यदालापादष्टादशगुणितविद्यापरिणति- र्यदादत्ते दोषाद् गुणमखिलमद्भ्यः पय इव ॥ ३८॥

Samunmeelath samvithkamala makarandhaika rasikam Bhaje hamsadwandham kimapi mahatham maanasacharam
Yadhalapaa dhashtadasa gunitha vidhyaparinathi Yadadhathe doshad gunamakhila madhbhaya paya eva

ஸமுன்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம் பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்
யதாலாபா தஷ்டாதஶ குணித வித்யாபரிணதி: யதாதத்தே தோஷாத் குணமகில மத்ப்ய: பய இவ 38

”ஒரு உதாரணம் ;
ஒரு அழகிய தாமரைக்குளம். அதில் ரெண்டு அம்சங்கள் சுகமாக மிதந்து கொண்டு களிக்கின்றன .குளம் முழுக்க அழகிய மலர்ந்த தாமரை மலர்கள். இந்த ஹம்சங்கள் அந்த மொட்டு விரிந்த ஞானத்தாமரை மலர்களின் தாமரை மலர்களில் ஊரும் சிவானந்த தேனை ருசிக்கின்றன.

அம்பா பராசக்தி, , உன் உபாசகர்கள் இதை விரும்பி அனுபவிக்கிறார்கள். மேலே சொன்ன ரெண்டு ஹம்சங்கள் சிவ சக்தி. அவை உலவும் தடாகம் தான் மனசு எனும் மானசரோவர்.மஹாயோகிகள் ஸ்ரீசக்ர உபாசகர்கள் தான் தான் ஹம்ஸங்கள், அவர்கள் சிவாநந்தம் எனும் மகரத்த தேனை அனுபவிக்கிறார்கள் என்கிறார் ஆதிசங்கரர்.

வாயு தத்துவத்திற்கு இருப்பிடம் அநாஹத சக்கரம். இது பன்னிரண்டு தள கமலம். இங்கு ஹம் என்ற சிவனையும் ஸ என்ற சக்தியையும் ஹம்ஸேசுவரன் – ஹம்ஸேசுவரி என்ற 54 வாயவ்ய மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணைதான் பதினெட்டு வித்தைகள். அவை என்னவென்றால் வேதங்கள் 4, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் என 6, மீமாம்ஸம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என 4, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், நீதி சாஸ்திரம் என 4.

“வித்யோபாஸகர்கள் அந்தர்முகமாக இருந்து கொண்டு அநாஹத சக்கரத்தில் ஏற்படும் சப்தத்தைக் கவனித்தால், ஸ்ரீவித்யா ஷோடசியில் உள்ள அக்ஷரங்களும், வித்யாகுருவின் ஸ்வரூபமும், தேவியின் ஸ்வரூபமும் (ஆகப் பதினெட்டும்) சப்த மூலமாகப் பிரத்தியக்ஷமாக அநுபவிக்கப் படும்.” என்கிறார் பௌராணிகர் ஸ்ரீ தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்.

“ஹம்ஸ: ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ:” என்ற அஜபாவித்தையினால் ஹம்ஸத்வந்த்வத்யானம் செய்கிறவர்களுக்குப் பாவங்களும் புண்ணியம் ஆகிவிடும். ஹம்ஸத்வந்த உபாசனத்திற்கு ஏற்பட்ட ஸ்தானம் ஆவுடையார் கோவில்.சிவன் அங்கே ஆத்மநாதர்.

ஸ்ரீசங்கரர் ஸுபகோதய வியாக்யானத்தில் “அநாஹத்தில் சிவனை ஶிகிஜ்வாலா என்ற தீப வடிவிலும், சக்தியை ஶிகினீ என்ற ஒளி வடிவிலும் தியானம் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். இப்படி உபாசிப்பவர்கள் எதிலும் நல்லதை எண்ணிப் பார்க்க வேண்டுமேயன்றிக் குற்றங்களை எண்ணக் கூடாது என்பது நியமம்.

இந்த ஸ்லோகம் மிக உன்னதமான சிவசக்தி ஸ்தோத்ரம்.
அஜபா காயத்ரி மந்திரம் இதையே சொல்கிறது:

haṁsa haṁsāya vidmahe | paramahaṁsāya dhīmahi | tanno haṁsaḥ pracodayāt ||
हंस हंसाय विद्महे। परमहंसाय धीमहि। तन्नो हंसः प्रचोदयात्॥
ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே; பரமஹம்ஸாயதீமஹி; தந்நோ ஹம்ஸா ப்ரசோதயாத்

இந்த ஹம்ஸ காயத்ரி மந்திரத்தை 24 மணி நேரம் விடாமல் சொல்லவேண்டும். ஒரு விடிகாலையிலிருந்து அடுத்தநாள் விடிகாலை வரை. ஒரே சந்தமாக ஸ்வாசத்தை கட்டுப்படுத்தி உச்சரிக்கவேண்டும். மந்த்ரத்தை தியானிக்கும்போது மனசு மூலாதார சக்கரத்திலிருந்து ஒவ்வொரு சக்ரமாக முழுசாக ஈடுபடவேண்டும். இப்படி 24 மணி நேரம் சொல்லுமோது அதன் எண்ணிக்கை குறைந்தது 21600 ஜப மந்திரமாகவாவது இருக்கும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *