SOUNDHARYA LAHARI 33/103 J K SIVAN

ஸௌந்தர்ய 33/103 லஹரி – நங்கநல்லூர் J K SIVAN

33. ஸௌபாக்ய மந்த்ரம்

स्मरं योनिं लक्ष्मीं त्रितयमिदमादौ तव मनो-र्निधायैके नित्ये निरवधिमहाभोगरसिकाः ।
भजन्ति त्वां चिन्तामणिगुननिबद्धाक्षवलयाःशिवाग्नौ जुह्वन्तः सुरभिघृतधाराहुतिशतैः ॥ ३३॥

smaraṃ yōniṃ lakṣmīṃ tritayamidamādau tava manō-rnidhāyaikē nityē niravadhimahābhōgarasikāḥ ।
bhajanti tvāṃ chintāmaṇigunanibaddhākṣavalayāḥ śivāgnau juhvantaḥ surabhighṛtadhārāhutiśataiḥ ॥ 33 ॥

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய மித மாதௌ தவ மனோ: நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்தாக்ஷ வலயா: ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதிஶதை:

இந்த ஸ்லோகத்தில் ஸௌபாக்கிய பஞ்ச தசாக்ஷரி மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. அம்மா பராசக்தி, உன்னை வணங்கி வழிபட்டு உலகத்தில் வாழ தேவையான செல்வத்தை, சுகத்தை வேண்டுபவர்களுக்கு
அவர்கள் விருப்பம் நிறைவேற்றுபவள் நீ. பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதல் காமபீஜ அக்ஷரம் ‘க்லீம்’, புவனேசுவரி பீஜாக்ஷரம் ‘ஹ்ரீம்’, லக்ஷ்மீ பீஜாக்ஷரம் ‘ஸ்ரீம்’ என்ற மூன்று மந்திரங்களையும் விடாமல் ஜபித்து அதன் ஆனந்தத்தை அனுபவிப்பவர்களுக்கு, உன்னையே எண்ணி மனதில் பக்தி எண்ணங்களையே ஜெபமாலையாக ஜபித்துக்கொண்டு உனது ஸ்ரீ சக்ர த்ரிகோணங்களை அதில் உள்ள அக்னி திரிகோணத்தில் அக்னியில் பசுநெய் போன்ற ஆத்மானந்தத்தை ஹோமமாக ஆஹுதி பண்ணி சிவனை மகிழ்விப்பவர்கள் உன் மூலம் செல்வந்தர்கள். சகல சம்பத்தும் பெறுபவர்கள்.

லோபா முத்திரை என்றால் ஸ்மரம் ஹகாரத்தையும், யோநிம் ஸகாரத்தையும், லக்ஷ்மீம் ககாரத்தையும் குறிக்கிறது. ‘ஹ ஸ க’ என்ற மூன்று அக்ஷரங்களை உபயோகிப்பது ஹாதிவித்யை என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

क्लीं – क ए ई ल ह्रीं klīṁ – ka e ī la hrīṁ
ह्रीं – ह स क ह ल ह्रीं hrīṁ – ha sa ka ha la hrīṁ
श्रीं – स क ल ह्रीं śrīṁ – sa ka la hrīṁ
இது தான் சௌபாக்கிய பஞ்சதசாக்ஷரி மந்திரம். திரிசக்தி என்பது காளி , புவனேஸ்வரி, லக்ஷ்மி என்று உபாசகர்கள் தச மஹா வித்யா வழிபாட்டில் பூஜிப்பதுண்டு. ,இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி என்றும் பொருள் உண்டு. ஆழமாக சிந்தித்தால் ஒவ்வொரு பீஜாக்ஷர மந்த்ரமும் பல உள்ளர்த்தங்களை விளக்கும்.
சிந்தாமணி என்பது ஆத்மஞான வழிபாடு. 51 மணிகள் கொண்ட ஜபமாலை. மணிகள் இங்கே அக்ஷரங்கள். மனதால் ஜபிப்பது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *