meaning of a small manthra. J K SIVAN

காயேன வாசா …நங்கநல்லூர்_J_K_SIVAN


ஒவ்வொருநாளும்  சந்தியாவந்தனம் பண்ணும்போதும் கூட  சொல்கிற ஒரு அற்புதமான  குட்டி மாத்திரம் இது.
வீட்டில் எந்த பூஜை செய்தாலும், சுப காரியங்கள், கிரியைகள், ஸ்ராத்தம் தர்ப்பணம் ப்ரம்மயஞம், வேறு எந்த ஸம்ஸ்காரமாக இருந்தாலும் கடைசியில்   இந்த  குட்டி மந்திரத்தை வாத்யார் சொல்ல வைப்பார்.

கையில் பஞ்சபாத்ரத்தை ஜலத்தோடு வைத்துக்கொண்டு கைகூப்பிக்கொண்டு, அல்லது உள்ளங்கையில் துளசி ஜலத்தை வைத்துக்கொண்டு  அர்த்தம் தெரியாவிட்டாலும் கூட  கிளிப்  பிள்ளை மாதிரி அவர் சொல்வது படியே  அக்ஷரம் தப்பாமல்  சொல்பவன் அதி மேதாவி  என்று சொல்லலாம். 
.
தப்பு தப்பாக அநர்த்தமாக சொல்பவன் நம்மாளு. நாம் அநேகர் நம்மாளு தான்.  இதை நான் எழுதும் வரை கூட  பல ஆயிரம் தடவைகள் இதுவரை  இந்த குட்டி மந்திரத்தை சொன்ன  க்ரஹஸ்தர்கள்  அர்த்தம் தெரிந்து கொள்ள முயற்சிக்காதது அவர்களுடைய அறியாமையா,  துர்பாக்யமா என்று அவர்களே  தீர்மானிக்கட்டும் 
 
ஒரு சில நிமிஷங்கள் போதும்  இந்த மந்திரத்தை எழுத்தில் கண்ணால் பார்த்து அர்த்தம் கொஞ்சம் தெரிந்து கொள்ள 
இந்த குட்டி மந்திரம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கடைசியில் வரும். மனப்பாடம் பண்ண ரொம்ப ரொம்ப சுலபமானது.  நம்மை அளித்துக் காக்கும்  ஸ்ரீ மந்  நாராயணனுக்கு நாம் சமர்ப்பணம் செய்வது.

कायेन वाचा मनसेन्द्रियैर्वा ।  बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् ।  करोमि यद्यत्सकलं परस्मै । नारायणयेति समर्पयामि ॥

Kaayena Vaacaa Manase[a-I]ndriyair-Vaa Buddhy[i]-Aatmanaa Vaa Prakrteh Svabhaavaat |  Karomi Yad-Yat-Sakalam Parasmai
Naaraayannayeti Samarpayaami ||

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா  புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

”என் உடம்பாலும், வார்த்தைகளாலும், மனதாலும், என் அங்கங்கள், புலன்களாலும் நான் எதையெல்லாம் செயகிறேனோ, என் புத்தியை உபயோகித்து  நல்லதைச் செய்ய சொல்ல  ப்ரயோகிக்கிறேனோ, இயற்கை யாகவே எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குணத்தாலும் , என் உணர்வுகளை காட்டுகிறேனோ, என் இதயத்தால் உணர்கிறேனோ, மனது போகிற போக்கில் நினைத்து செயல்படுத்துகிறேனோ, நான் எனக்கும் மற்றவர் களுக்கும் இதனால் என்னென்ன செயகிறேனோ, அது எனக்கு பலன் எதிர்பார்த்து செய்வதாக இல்லாமல் செய்துவிடு. அதில் என் சுயநலம் எதுவும்  இல்லாமல் நீ தான் விலக்கிவிடவேண்டும்.  என் மனதாலும், வாக்காலும், புத்தியாலும்  உருவாகும் இப்படிப்பட்ட  என்   செய் கைகளை எண்ணங்களை எல்லாம் தாமரைப் பாதங்கள் கொண்ட ஸ்ரீமந்  நாராயணா உன்னை சரணடைந்து உனக்கே அர்ப்பணிக்கிறேன்”
அவனருளால்  தான் அவன் தாளை நாம் வணங்குகிறோம்.   நம்மை அவனுக்கு  இப்படி அர்ப்பணிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  ஸ்ரீமந் நாராயணன் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பவன் இல்லை. தாய் குழந்தைக்கு செய்வதெல்லாம் பிரதியுபகாரம் பெற அல்ல. அவனே தாய் அவனே தந்தை, அவனே சகோதரன் அவனே  உற்றார் மற்றார் எல்லாமே.
 
அவன் எவ்வளவு சிம்பிள்  என்பதை அவன் கிருஷ்ணனாக நமக்கு சொன்னது ஞாபகம் இருக்கிறதா?
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி” 
“ஒரு இலையோ, பூவோ, கனியோ, ஒரு துளி நீரோ, எதை நீ ப்ரீதியோடும் பக்தியோடும் தருகிறாயோ, அது போதுமே எனக்கு. சின்ன இலைத்துண்டு, ஒரு உத்ரணி ஜலம் , காய்ந்த ஒரு திராக்ஷை இதை உன் பக்தி தோய்ந்த தூய மனத்தோடு அளித்தால் நான் ரொம்ப திருப்தியாக பெரிய விருந்தனவாக ஏற்றுக் கொள்வேன் என்கிறான் கிருஷ்ணனாக.
அவன் எதிர்பார்ப்பதெல்லாமே, இந்த த்ரிகரண சுத்தியே!– மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் தூய்மை. .
ஆத்மார்த்தமாக, ப்ரியத்தோடு நாம் தருகின்ற எதையும் ஏற்றுக்கொள்ள அவன் ஸித்தமாக இருக்கிறான்..
இவ்வளவு எளிமையானவனுக்கு, இனிமையாய் நம்மையே அளிப்போமே..அது தான் ஸார் சரணாகதி.
 

இனிமேல் எப்போதாவது “காயேன வாசா..” என்று வெறுமே வாய் மட்டும் சொல்லாமல், அற்புதமான மேலே சொன்ன அர்த்தத்தை அனுபவித்து மனமார நம்மை அவனுக்கு அர்ப்பணிப்போமா?
 
இன்று புரட்டாசி மகம் என் ஜென்ம நக்ஷத்ரம்  85 முடிந்து  86க்குள் அடியெடுத்து வைக்கிறேன். காலையில் கொஞ்சம் மழை, அப்புறம் கொளுத்தும் வெயில், மஹாளய தர்ப்பணம் முன்னோர்க்கு திருப்தியாக  நன்றியோடு செலுத்தினேன்.  வழக்கம் போல நிறைய படித்தேன்,எழுதினேன்,  அருகே குடிகொண்ட  திருமால் முருகனை வணங்கினேன். கொஞ்சம் தூங்கினேன், ஒரு டம்பளர் மோர் குடித்து விட்டு  இன்றைய பொழுது அமைதியாக  நிறைவு பெறும். மனது பூரா கிருஷ்ணன் எப்போதும் இருக்கும்போது என்ன குறை? ஒவ்வொரு நாளும் அவன் தரும் பரிசு.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1415

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *