govindhashtkam 7&8 j k sivan

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
ஸ்லோகம் 7 & 8
7 कान्तं कारणकारणमादिमनादिं कालधनाभासम् । कालिन्दीगतकालियशिरसि सुनृत्यन्तम् मुहुरत्यन्तम् ।
कालं कालकलातीतं कलिताशॆषं कलिदॊषघ्नम् । कालत्रयगतिहॆतुं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 7 ॥
kantham karana makarana adhi manadhim , kala manabhasam,Kalindi gatha kaliya sirasi muhur nruthyantham sunruthyantham,
Kalam kalamanatheetham kalithasesham kalidoshagyam,Kala thraya gatha hethum, pranamatha govindam paramanandham. 7
காந்தம் காரணகாரணமாதிமனாதிம் காலதனாபாஸம் | காளிந் தீகதகாலியஶிரஸி ஸுன்றுத்யம்தம் முஹுரத்யம்தம் |
காலம் காலகலாதீதம் கலிதாஶேஷம் கலிதோஷக்னம் | காலத்ரயகதிஹேதும் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம் || 7 ||
கோவிந்தா கோவிந்தா என்கிற பக்த கோஷம் விண் ணைப் பிளக்கும் ஒரே ஸ்தலம் திருப்பதி திருமலை. அங்கே வெங்கடேசனை நாம் ஏன் கோவிந்தா என்கி றோம் தெரியுமா? அது கிருஷ்ணனின் ஒரு அற்புதமான பெயர். கோவர்தன கிரியை அனாயாசமாக இடது சுண்டுவிரலில் 7 நாள் 7 இரவு தூக்கி நிறுத்தின போது பிரம்மாதி தேவர்கள் அதிசயித்து ‘கோவிந்தா’ என்று அவனை பாடுகின்றனர். கோவிந்தா என்று பக்தர்கள் அழைத்தால் கிருஷ்ணன் புளகாங்கிதம் அடைகிறான். கிருஷ்ணா என்றாலே சகலரையும் வசீகரிப்பவன் என்று பொருள். அவன் சச்சிதானந்த விக்ரஹம் – என்றும் எப்போதும் ஆனந்தமும் அருளும் ஞானமும் அளிக்கும் திருவுரு. ஆரம்ப முடிவில்லா ஆனால் தானே சகலத் திற்கும் ஆதாரமாகிய ஒரு தன்னிகரில்லா பரம சக்தி.
கோவிந்தா கோவிந்தா என்று ஸ்மரித்தாலே அதுவே சிறந்த த்யானம். இது இரண்டாவது நிலை. முதலில் கேட்பது, சுருதி, கீதையும் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றே என்று கூட கூறலாம். ரெண்டுமே ஸ்லோகமாக உள்ளது. இரண்டிலும் கிருஷ்ணனை காணலாம். கிருஷ்ணன் நமக்காக ஆலயத்திலும் கோவிந்தா என்று ஸ்மரிக் கும்போது நம் நாவிலும் நர்த்தனமாடுகிறான். நம்முள் இருந்த அசுத்தங்கள் அவன் நாமத்தை உச்சரிக்கும் போது அகன்று விடும். கோவிந்தன் என்கிற முகுந்த னால் மட்டுமே நமக்கு முக்தி கிட்டும்.
திருமலையில் கோவிந்தனை கவனித்திருக்கிறீர்களா?. எல்லா வைணவ ஆலயங்களிலும் வரத ஹஸ்தம் காட்டும் பெருமாள் இங்கு தனது வலது கரத்தால் தனது பாதத்தை சுட்டிக்காட்டுகிறார். இடது கரம் அவரது முழங்காலை உணர்த்துகிறது. இதற்கு என்ன அர்த்தம்? என் பாதங்களில் சரணடைந்த உனக்கு வாழ்க்கையில் துன்பங்கள் அலைமோதும் சம்சாரக்கடல் முழங்கால் அளவு தான். மூழ்க மாட்டாய். கீதையில் இதையே சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சொல்கிறார். சகலமும் துறந்து நானே கதி என்று என்னை சரணம் அடைபவர்களை காப்பாற்றுவது என் வேலை என்கிறார். கலியுக வரதா, கண்கண்ட தெய் வமே, கோவிந்தா, காளிங்கனின் சிரசில் நர்த்தனமாடி களித்தவனே, த்ரி காலமும் நீயே ஆகிய கோவிந்தா உனக்கு நமஸ்காரங்கள்.
8. बृन्दावनभुवि बृन्दारकगणबृन्दाराधितवन्दॆहम् । कुन्दाभामलमन्दस्मॆरसुधानन्दं सुहृदानन्दम् ।
वन्द्याशॆष महामुनि मानस वन्द्यानन्दपदद्वन्द्वम् । वन्द्याशॆषगुणाब्धिं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 8 ॥
Vrundavana bhuvi vrundharaka gana vrundharadhitha vandeham, Kundhabamala mandasmera sudhanandam suhrud anandam,
Vandhya sesha maha muni manasa vandhyananda pada dwandwam, Vandhya sesha gunabdheem, pranamatha govindam paramanandham. 8
ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||
பிருந்தாவன வ்ரஜ பூமியில் தேவர்களின் கூட்டமும் பிருந்தா முதலான கோபியரும் வணங்கும் பாதங்களை யுடையவன். குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின் அமுதத்தால் மகிழ்விப்பவன். ஆனந்தமூர்த்தி.
மா முனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி களையுடையவன். எண்ணற்ற நற்குணங் களின் கடல் அவன். அப்படிப்பட்ட பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவோம்..
கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ கோகுலநாயகா கிருஷ் ணா எனக் கூறி இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் கோவிந்தனின் பாதகமலத் தியானம்எனும் அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி தன் அகத்துள் இருக்கும் பரமானந்த அமுதமான அந்த கோவிந்தனை அடைவர்.
பலஸ்ருதி :
गॊविन्दाष्टकमॆतदधीतॆ गॊविन्दार्पितचॆता यः । गॊविन्दाच्युत माधव विष्णॊ गॊकुलनायक कृष्णॆति ।
गॊविन्दाङ्घ्रि सरॊजध्यानसुधाजलधौतसमस्ताघः । गॊविन्दं परमानन्दामृतमन्तस्थं स तमभ्यॆति ॥
Govindashtakamethad adheeta govindarpitha chethayo, Govindachyutha madhava vishno, gokula nayaka krushnethi,
Govindangri saroja dhyana sudha jala dhoutha samasthago,Govindam paramanandam amruthamathastham sa samabhyethi. 9
கோவிந்தாஷ்டகமேதததீதே கோவிந்தார்பிதசேதா யஃ |கோவிந்தாச்யுத மாதவ விஷ்ணோ கோகுலனாயக க்றுஷ்ணேதி |
கோவிந்தாம்க்ரி ஸரோஜத்யானஸுதாஜலதௌதஸமஸ்தாகஃ |கோவிந்தம் பரமானந்தாம்றுதமம்தஸ்தம் ஸ தமப்யேதி ||
கோவிந்தா, உனது மகிமையை உணர்ந்தல்லவோ தேவாதி தேவரெல்லாம் புடைசூழ பிருந்தாவனத்தில் குழுமி உன்னை தரிசித்து மகிழ்ந்தனர். உன் புன்சிரிப்பு ஒன்றே போதுமே கண்ணா. அன்றலர்ந்த புத்தம் புது மல்லிகை மொட்டவிழ்ந்து மலர்ந்து அதை நெருக்கமாக தொடுத்த மாலையாக்கினால் எப்படி ப்ரகாசிக் குமோ அதையும் தோற்கடிக்கும் அழகிய புன்னகை. பூந்தேனையும் கசக்கிறது என்று சொல்ல வைக்கும் இனிய இனித்த காந்த சக்தி கொண்ட கண்கள். பார்த்தோர் மயங்கும் பரவசம் அளிக்கும் பார்வை. நெஞ்சம் ஊடுருவும் அன்பு அதில் இழையோடுகிறதே. பகவான் என்று சொல்லத்தக்க ஆறு உயர்ந்த மேன்மை யான சக்திகளைக்கொன்டவனே, அழகு, பிரதாபம், செல்வம், பலம், ஞானம், வைராக்கியம் சகலமுமாக உன்னில் மிளிர்கிறதே. அதனால் அல்ல வோ ஸ்ரீமத் பாகவதம் உன்னை ”ஸ்ரீ க்ரிஷ்ணாஸ் து பகவான் ஸ்வயம்” என்று புகழ்கிறது. உன் வேணுகானத் தில் மயங்காத ஜீவன் மூவுலகில் உண்டா? ஒரு காலை மற்றொரு காலோடு பின்னிக் கொண்டு நீ நின்று கொண்டு மதுவனத்தில் குழல் இசைக்கும்போது உன் அழகிய தன்னிகரற்ற இணையடியில் வணங்காத தலை உண்டா? மயங்காத கண் ஏதேனும் உண்டா? கூப்பாத கரம் உண்டா? பரமானந்தம் தரும் கோவிந்தா உன்னை வணங்கு கிறோம்.
கோவிந்தா, அச்சுதா, மாதவா, கோகுல நாயகா, எமது சர்வ பாபத்தையும் நாசம் செய்பவனே, ஆயர்தம் கொழுந்தே, உன்னை இவ்வாறெல்லாம் அழைத்து வணங்கும் இந்தச் சுவை தவிர யாம் போய் இந்திர லோகத்தையே ஆளும் அச்சுவையைப் பெறினும் வேண்டவே, வேண்டவே வேண்டாம் கோவிந்தா.
எங்கும் எதிலும் நிறைந்து காணப்படும் கிருஷ்ணா, கோவிந்தா, என் மனதிலும் எப்போதும் நீ நிறைந்து இருக்க வேண்டுகிறேன். திருவரங்கத்திலும் நீயே, திருமலையிலும் நீயே, திருப்பாற்கடலிலும் நீயே, சர்வமும் நீயே சகலமும் நீயே. கோவிந்தா நினை சரணடைகிறோம். யாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் நீயே. உனக்குத் தேவை ஒரு இலை, ஒரு துளி நீர், அதுவும் மனமுவந்து பக்தி யோடு அளித்தால், பரமா நீ அளிக்கும் ஆனந்தமே அலாதியானது.
நன்றி நண்பர்களே, இத்துடன் கோவிந்தாஷ்டகம் நிறைவு பெறுகிறது. பிடித்ததா? எல்லோருக்கும் அனுப்புங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *