ADITHYA HRUTHAYAM SLOKAS 19-25 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்

ஸ்லோகங்கள் 19-25

19.ब्रह्मेशानाच्युतेशाय सुरायादित्यवर्चसे ।भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नम: ॥19॥
brihamesanachuthesaya sooryadhithya varchase bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama
ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே | பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ ||

சூர்யா நாராயணா , சுட்டெரிக்கும் செழுஞ்சுடரே, நீயே பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் சிருஷ்டி, ஸ்திதி, லய காரியங்களுக்கு சக்தி அளிப்பவன்,, அதிதி மைந்தன், சாஸ்வத பிரகாசன், சர்வத்தையும் எரித்து பஸ்மம். சாம்பலாக்கும் சக்திமான். எதிரிகள் கண்டஞ்சும் பராக்ரமன். இதோ எங்கள் நமஸ்காரங்கள் உனக்கு. அகஸ்தியர் சொல்லும் சூரியன் சாதாரண நமக்கு தெரிந்த க்ரஹம் அல்ல. சாக்ஷாத் ப்ரம்மம்.

20. तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने। कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः॥ 20
Tamoghnāya himaghnāya śatrughnāyāmitātmane kṛtaghnaghnāya devāya jyotiṣāṃ pataye namaḥ
தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மனே க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

அகஸ்தியர் சூரியனை பிரம்மமாக வழிபடுவதின் மஹத்வத்தை சொல்கிறார். ப்ரம்மம் தான் ஞான ஒளி.சூர்யன் பரிசுத்த ஒளிமயம்.
தமோகுணம் என்னும் அஞ்ஞான இருளைப் போக்குபவனே, சூர்யதேவா, பனியையும் குளிரையும் அதேபோல் விலக்குபவனே, கெட்டவர்களுக்கும் தீயோருக்கும் நெருப்பானவனே, சூரியமண்டலத்தில் மற்ற கிரஹங்களின் பிரதம தலைவனே, உலகெங்கும் உன் ஒளியால் ஜீவசக்தி அளிப்பவன், உனக்கு நமஸ்காரம்.

21. तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे। नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे॥
tapta chāmīkarābhāya vahnayē viśvakarmaṇē । namastamō’bhi nighnāya ruchayē lōkasākṣiṇē ॥ 21 ॥
தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே | நமஸ்தமோ‌உபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

தங்கத்தை உருக்கி ஓட விட்டால் போல தக தக வென்று ஒளிரும் ஆதித்யா, சூர்ய நாராயணா, வித்யாசம் பார்க்காமல் சகலத்தையும் ஒரே சமமாக பாவித்து ஜ்வாலையோடு எரிக்கும் சூர்யா, அஞ்ஞான இருள் நீக்கியே, பிரபஞ்ச ஸ்ரிஷ்டி காரண விஸ்வகர்மா, சகல காரியங்களுக்கும் காரணமானவனே, சர்வ ஜீவன்களுக்கும் உயிர்ச்சக்தி அளிப்பவனே, நீ விஸ்வ காரணன், அஞ்ஞானத்தை நீக்கும் ஒளிச்சுடர். அக்னி ஸ்வரூபன், லோக காரணன், சர்வ வியாபி, செந்நிற ஒளிப் பிழம்பு, ஸ்வர்ணமயன் , சர்வ சாக்ஷி. உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள் ஆதித்ய நாராயணா.

22. नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः। पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः॥
nāśayatyēṣa vai bhūtaṃ tadēva sṛjati prabhuḥ । pāyatyēṣa tapatyēṣa varṣatyēṣa gabhastibhiḥ ॥ 22 ॥
நாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ | பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

வாழ்க்கை என்பது மானுட வாழ்க்கையின் வளர்ச்சி. சூரிய பகவானே, அதற்கு அதி முக்கியம் உன் ஒளிக் கதிர்கள் தான். எங்கும் இருளை நீக்கி உன் ஒளிக்கதிர்கள் உயிரூட்டுகிறதே. என் மன மாசுகளையும் சுட்டெரித்து உள்ளொளி பெற அருள்வாய், உன் ஒளிக் கதிர்கள் வெம்மையை அளித்தாலும் மழைக்கே ஆதாரம் அவை தான் என அறிவோமே. உனக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் ஆதித்யா.

23. एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः। एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम्॥
ēṣa suptēṣu jāgarti bhūtēṣu pariniṣṭhitaḥ । ēṣa ēvāgnihōtraṃ cha phalaṃ chaivāgni hōtriṇām ॥ 23 ॥
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ | ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||

ஆதித்யா, உலகத்தையே உறக்கத்திலிருந்து மீட்பவன் நீ. உறக்கமில்லாதவன். எங்காவது எப்போதும் ஒளி அளித்து பாதுகாப்பவன். புத்துணர்ச்சியளிப்பவன். களைப்பைப் போக்குபவன். யஞ மூர்த்தி, அக்னி ஹோம அக்னி ஹோத்ர காரணன். உனக்கு நமஸ்காரங்கள்

24. वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च। यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः॥
vēdāścha kratavaśchaiva kratūnāṃ phalamēva cha । yāni kṛtyāni lōkēṣu sarva ēṣa raviḥ prabhuḥ ॥ 24 ॥
வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச | யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

நீயின்றி எது யாகம்?, எது வேதம்?, எது கர்மம்,? எது தர்மம்,? எது காரணம், எது காரியம்?. சர்வமும் நீயே ஆதித்யா, சர்வ சாக்ஷி பூதம் நீ. எல்லோர் ஹ்ருதயத்திலும் வீற்றிருக்கும் சூர்ய நாராயணா, உனக்கு நமஸ்காரங்கள்.

25. एनमापत्सु कृच्छ्रेषु कान्तारेषु भयेषु च। कीर्तयन् पुरुषः कश्चिन्नावसीदति राघव॥ 25
Enamāpatsu kṛcchreṣu kāntāreṣu bhayeṣu ca kīrtayan puruṣaḥ kaścinnāvasīdati rāghava 25
ஏன மாபத்ஸு க்றுச்ச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச | கீர்தயன் புருஷஃ கஶ்சின்-னாவஶீததி ராகவ

அகஸ்தியர் ராமனிடம் ”ஹே ராமா, இதுவரை சொன்னேனே ஆதித்யன் மகிமையை பற்றி, கவனமாக கேட்டாயா?. ஒரு ரகசியம் உரக்க சொல்கிறேன் எல்லோருமே கேட்கட்டும். எவருக்கெல்லாம் கஷ்டம், துன்பம், பயம், இருள், நடுக்கம் உள்ளதோ அவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை ஒரு முறை உச்சரிப்பது. அது போதும். எங்கே போயிற்று அந்த துன்பங்கள் எல்லாம் என்று அப்புறம் தேடவேண்டும்!!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *