ADITHYA HRUTHAYAM 26-31 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்
ஸ்லோகங்கள் 26-31
 
ஆதித்ய ஹ்ருதயம் 31 ஸ்லோகங்கள் இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது.
 

26. पूजयस्वैनमेकाग्रो देवदेवं जगत्पतिम्। एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि॥ 26
poojaswaikegro deva devam jagat pathim  ethath trigunitham japthwa yudeshu vijayishyasi
பூஜயஸ்வைன மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் | ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

சூர்ய நாராயணா, நீ விஸ்வபதி, தேவாதி தேவன், பிரபஞ்ச புருஷன், மனத்தை ஒருமித்து இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம் சொல்லி உன்னை ஒருமனதாக, மனமார வணங்குபவன் எதிலும் வெல்வான். எவரையும் வெல்வான்.  சகல துன்பங்களும் துயரங்களும் அவனை விட்டு ஓடிவிடும். இந்த  ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களை மனதிற்குள்ளேயே  மூன்று முறை சொல்லிக்கொள்ளவேண்டும்,. இது ப்ரம்ம ஞான ஜபம்.


27. अस्मिन् क्षणे महाबाहो रावणं त्वं वधिष्यसि। एवमुक्त्वा तदागस्त्यो जगाम च यथागतम्॥ 27
Asmin kṣaṇe mahābāho rāvaṇaṃ tvaṃ vadhiṣyasi evamuktvā tadāgastyo jagāma ca yathāgatam
அஸ்மின் க்ஷணே , மஹாபாஹோ ராவணம்  த்வம்  வதிஷ்யஸி ஏவமுக்த்வ ததாகஸ்த்யோ ஜகாம  யதாகதம்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களை ராமனுக்கு உபதேசித்தது யார்? சாக்ஷாத் அகஸ்த்ய மஹ ரிஷி.    யாருக்கு சொன்னார்? ஸ்ரீ ராமனுக்கு.

” ரகுகுல ராமா, வீராதி வீரா, ஹே ராமா, நீ இந்த பாதகன் ராவணனை சம்ஹாரம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது.  உனக்கு  மிகவும் சக்திவாய்ந்த இந்த ஆதித்ய ஹ்ருதய  ஜெபத்தை  உபதேசித்துவிட்டேன். என் கடமை தீர்ந்தது.இனி  ஒரு நொடியில் ராவணனை முடிக்க உனக்கு சக்தி வந்துவிட்டது. உடனே நீ அவனை முடிப்பாய்.உனக்கு  சகல தெய்வங்களின்  ரிஷிகளின் ஆசிகள்.” என்ற அகஸ்திய மகரிஷி ராமனை ஆசிர்வதித்து விட்டு யுத்தகளத்தை விட்டு செல்கிறார்.

 
இவ்வாறு அகஸ்திய ரிஷியால் உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை ராமர்  மனதில் ஒருமித்து சொன்னார் . அவருள் ஒரு புது சக்தி பிறந்தது மூச்சினிலே.  அது நமக்கும் கிடைக்காமலா போகும்?  ராமர்  அகஸ்தியரை வணங்கி புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தார். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் அவர் மனதை நிரப்ப அவரிடம் புதிய  பலம் மிகுந்தது.

28)एतच्छ्रुत्वा महातेजा नष्टशोकोऽभवत् तदा ।
धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान् 
etacchrutvā mahātejā naṣṭaśoko’bhavat tadā |dhārayāmāsa suprīto rāghavaḥ prayatātmavān |
‘ஏதச்ருத்வா மஹாதேஜ நஷ்டஸோகோ பவத்ததா தாரயாமாஸ  சுப்ரிதோ ராகவ: ப்ரயதாத்மவான்”
 
 ராமர் உபதேசித்தபடி ராமன் சூரியனை ஸ்தோத்ரம் செய்து இந்த ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஜபித்தன். அவனுள் ஒரு புத்துணர்ச்சி, அதீத பலம் உண்டானது கோதண்டத்தை கையில் எடுத்து  ராவணனுடன் போர் புரிய தயாரானான்.  ராமனின் மனம்  பிரம்மத்தில் லயித்தது.  சகல தேவாதி தேவர்களும் பாராட்டி  வாழ்த்தினார்கள்.  ராவணனைக் கொல்ல  என்று  எந்த மந்திரத்தையும் அகஸ்தியர்  உபதேசிக்கவில்லை. சூரியனின் சக்தி உனக்குள் பரவட்டும் என்று தான் இந்த ஸ்லோகங்களை உபதேசித்தார். அது நமக்கும் பயன் தரும். எடுத்த காரியத்தில் வெற்றி தரும். 

29  आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान्। त्रिराचम्य शुचिर्भूत्वा धनुरादाय वीर्यवान्॥ 29
Adityaṃ prekṣya japtvā tu paraṃ harṣamavāptavān trirācamya śucirbhūtvā dhanurādāya vīryavān
ஆதித்யம் பிரேக்ஷய  ஜப்த்வா  து பரம் ஹர்ஷமவாப்தவான் த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய  வீர்யவான்.

உடலும் உள்ளமும் பரிசுத்தமாகி, மூன்று முறை அச்சுதாயநாம: அனந்தாய நாம: கோவிந்தாய நாம: என்று தனது பெயரையே சொல்லி ராமன் ஆசமனம் செய்தான். (நாம் ஆசமனம் செயகிறோமே அது இந்த உள் -புற பரிசுத்தத்திற்காகத்தான்)  பிறகு ராமன் சூரியனை நோக்கி நமஸ்கரித்தான். எடுத்தான் கோதண்டத்தை, வில்லை. மனம் குதூகலித்தது எதிரே ராவணனைப் பார்த்து.

 
30. रावणं प्रेक्ष्य हृष्टात्मा युद्धाय समुपागमत् ।  सर्वयत्नेन महता वधे तस्य धृतोऽभवत् ॥३०॥
Rāvaṇaṃ prekṣya hṛṣṭātmā yuddhāya samupāgamat  sarvayatnena mahatā vadhe tasya dhṛto’bhavat 30
ராவணம்  ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய சமுபாகமத் ஸர்வயத் னேன மஹதா  வதே தஸ்ய த்ருதோபவத்

எதிரே நின்ற ராவணனை  ராமன் ‘வா ராஜா வா’  உனக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தேன், என சந்தோஷமாக பார்த்தான்.  அவன் கண்ணுக்கு  ராவணன்  ஏதோ ஒரு எட்டுக்கால் பூச்சி போல தோன்றினான் . யுத்தத்தை தொடங்கினான். இன்று ராவணனை முடிப்பதென்று தீர்மானித்தான். கோதண்டம் பேசியது.  ராவணன் முட்டாள் அல்ல. அவனுக்கும் தனது விதி என்ன எவர் கையால் மரணம் என்பது தெரியும். ஆகவே மோக்ஷம் அடைய  இதை விட சிறந்த கரங்களால்  மரணம் அடையமுடியாது என உள்ளூர மகிழ்ந்தான். முடிந்தான் .

31. अथ रविरवदन्निरीक्ष्य रामं मुदितमनाः परमं प्रहृष्यमाणः । निशिचरपतिसंक्षयं विदित्वा सुरगणमध्यगतो वचस्त्वरेति ॥३१॥
Atha Ravir-Avadan-Niriikssya Raamam Mudita-Manaah Paramam Prahrssyamaannah |Nishi-Cara-Pati-Samkssayam Viditvaa Sura-Ganna-Madhyagato Vacas-Tvare[a-I]ti ||31||
 
சூரியனுக்கு பரம சந்தோஷம், தனது சக்தியை ராமனுக்கு அளித்தான்.  தேவர்களை வாட்டி வதைத்த ராவணனை சம்ஹாரம் செய்வதற்கென்றே அவதரித்த ராமனுக்கு உதவுவதில் மகிழ்ந்தான். 
 சூர்யநாராயணா, ஆதித்யா, ஒளி மயமே, இரவை விரட்டி, பகலைக் கொடுக்கும் பகலவனே, உயிர்காக்கும் பரம் பொருளே, எமக்கு நீண்ட ஆயுளை, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஞானம் அனைத்தும் அருள வேண்டி உன்னை நமஸ்கரிக்கிறோம்.

கிரஹங்களின் அனுக்ரஹம் அதுவும் அவற்றில் தலையாய சூர்யநாராயணனின் அருளாசி இந்த ஸ்லோகத்தினால் நமக்கு  கிடைக்கிறது. விடாது சொல்பவன் புண்யவான். சர்வ சத்ருக்களும் நாசமடைவார்கள். சகல சக்தியும் பெறுவான்.  ஆதித்ய ஹ்ருதயம் எங்கும் மங்களத்தை தருகிறது. பாபம் எங்கிருந்தாலும் அதை அழிக்கிறது. மன வியாகூலம், சோகம், பயம் சகலமும் நீக்குகிறது. கவலைகள், துன்பங்கள் நீக்கி நீண்ட ஆயுளைத் தருகிறது. இன்னும் என்ன வேண்டும்?.

கஷ்டமாக தோன்றும் நேரத்தில் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை சொன்னால், கதிரவன் முன் பனியென அவை விலகும். மனதில் உடலில் புது தெம்பு தைர்யம் தோன்றும்.   நீ யின்றி வேறெவர் சூர்ய நாராயணா  எமக்கு ஆதரவு?. காருண்ய மூர்த்தே, அருள்வாயாக, ரக்ஷிப்பயாக.   உனக்கு கோடி நமஸ்காரங்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே. உன் கடன் அடியேனையும் தாங்குதல் – எவ்வளவு அழாகாக அப்பர் சொல்லியிருக்கிறார். அதானால் தான் நாவுக்கு அரசர் என்ற பெயர் அவருக்கு. ஆதித்யா,  உன்னை ஹ்ருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன். உன்னை பணிவதே என் என் கடன். அடியேனை மட்டுமல்ல இந்த அகிலத்தையே காத்தல் உன் கடன் அல்லவா?.
ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் மிக சக்தி வாய்ந்தவை. நம்முடைய அதிர்ஷ்டம் இது போன்ற நிறைய ஸ்லோகங்கள் உபதேசங்கள் எல்லாம் நமது வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்களில் நிரம்பி இருக்கிறது. கொள்வார் தான் இல்லை.   மகரிஷி வால்மீகியின் ராமாயணத்தில் 107வது அத்தியாயமாக ஆதித்ய ஹ்ருதயம் வருகிறது.  ஆதித்ய ஹ்ருதயத்தை நிறைவு செய்ய அருள்செய்த  சூர்யா உனக்கு நமஸ்காரம் .

ஆதித்ய ஹ்ருதயத்தை  ஒரு குட்டி புஸ்தகமாக்கி  ஆயிரம் பிரதிகள் அச்சடித்து குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க  மனம் எண்ணுகிறது. யாரேனும் இதற்கு உதவ முன்வந்தால் அவர்களுக்கு இந்த 31 ஸ்லோகங்களை,
அர்த்தத்தோடு  வழங்குறேனே. நல்ல காரியம் செய்ய சிலர் எப்போதும் எங்கோ ரெடியாக இருக்கிறார்கள் என்பது என் அனுபவம். ரெடியாக உள்ளவர் எவரேனும் என்னோடு தொடர்பு கொள்ளவும்  ஜேகே சிவன். 9840279080
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *