ADHITHYA HRIDHAYAM SLOKAS 7-12 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்

ஸ்லோகங்கள் 7–12…

सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः । एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥
sarva devathmako hyesha tejaswai rasmi bhavana esha devasura ganan lokan pathi gabasthibhi
சர்வ தேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி, ரஸ்மி பாவன யேஷ தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி:

இந்த சூரியனை ஏதோ சாதாரணமான ஒருவன் என்று நினைத்து விடாதே. அவனுள் தான் முப்பது முக்கோடி தேவர்களும் ஐக்கியம். ஒளிக்கு ஒளி கொடுப்பவன். இந்த பிரபஞ்சத்தை, மூன்று லோகங்களையும், தனது ஒளிக்கதிர்களால் வியாபித்து ஆள்பவன். அவனது பிரகாசம் என்றும் மங்காத நிர்குண ப்ரம்மத்திலிருந்து பெற்றது. எங்கும் பிரகாசமானது. சகுணம் என்பது மூன்று குணங்களை, சத்வ, ரஜோ, தமோ குணங்களை கொண்டது. ஸ்ரிஷ்டிக்கு முன்பு மூன்று குணங்களும் ஒரே கலவை தான். அப்புறம் தான் ஸ்ரிஷ்டி ,ஸ்திதி, லயம் என்று ப்ரம்மா (தமஸ்) விஷ்ணு (சத்வ) சிவன் (ரஜஸ்) படைத்தல் காத்தல், அழித்தல் என பிரித்துக் கொண்டார்கள். (We can discuss more about Vedic gods, if possible in a separate series).

एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः । महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ 8 ॥
esha brahma cha vishnuscha shiva skanda prajapathi mahendro dhandha kalo yama somo hyapam pathi

ஏஷ ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச ஷிவா ஸ்கந்த பிரஜாபதி மஹேந்த்ரோ தனத காலோ எம சோமோ ஹைப்பம் ஹ்யாபாம் பதி
ஆதித்ய நாராயணன் யார்? அவனே பிரம்மா. அவனே விஷ்ணு. அவனே சிவன். திரிமூர்த்தி. அவனே ஸ்கந்தன். அவன் தான் உலக மனித உயிர்களுக்கு மூல காரணன். தேவராஜன். அவனையே குபேரன் என்கிறோம். சகல சம்பத்துக்கும் அதிபதி. அவன் காலன். யமன். வாழ்விக்கறவன் போலவே சம்ஹரிக்கிறவனும் கூட. குளிர்ந்த நிலவு, சந்திரனும் அவனே. தாரையாக பொழியும் மழைக்கதிபதி வருணனும் அவனே. ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைப் பற்றி மட்டும் இல்லை. வேதம் சொல்லும் எல்லா தெய்வங்களையும் போற்றி பாடுவது என்று புரிகிறதா?

पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः । वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ॥ 9 ॥
pitharo vasava sadhya hyaswinou marutho manu vayur vahni praja prana ruthu hartha prabhakara
பிதரோ வசவ: சாத்யா ஹ்யஸ்வினோ, மருத்தோ மனு : வாயுர்வஹ்னி பிரஜாப்ராண’ ருது கர்த்தா பிரபாகர :

ஆதித்யன் தான் பித்ரு தேவன். பித்ருக்கள் நமது முன்னோர்கள். அப்பா, தாத்தா, கொள்ளு,எள்ளு தாத்தாக்கள் ஆசி இல்லாமல் ஒருவன் சுபிக்ஷமாக வாழ முடியாது.அஷ்ட வசுக்களும் அவன் பிம்பங்களே. சாத்யா கண தேவதை. அதுவும் சூரியனே. அஸ்வினி தேவதைகள் இருவருமே அழகு,கம்பீரத்துக்கு அதிபதிகள்.நகுல சஹாதேவனாக அவதரித்தவர்கள். அவர்களால் தான் மனது பரிசுத்தமாகிறது. பரிசுத்தமான ஹ்ருதயத்தில், மனத்தில் தான் பகவான் வசிப்பவன். அஸ்வினி தேவதைகளும் ஸூர்ய ஸ்வரூபமே. மருதி இந்திரனின் சகா. வாயுவானவனும் அவனே. வாயு தேவன் வேறு பிராணன் வேறு. வாயுக்களில் ஒன்று அது. மநு வும் அவனே. ஆதித்யன் அக்னி தேவனும் கூட. சகல ஜீவராசிகளின் உயிர் அவன். ஆத்மாவும் அவன் தானே. காலங்களை உருவாக்குகிறவன் அவன் தான். பிரகாசிப்பவன் அவனே. அவனைப் பற்றி போற்றி பாடுவது தான் ஆதித்ய ஹ்ருதயம்.

आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् । सुवर्णसदृशो भानुः हिरण्यरेता दिवाकरः ॥ 10 ॥
adithya savitha soorya khaga poosha gabasthiman suvarna sadrusa bhanu hiranya retha divakara

ஆதித்யஃ ஸவிதா ஸூர்யஃ ககஃ பூஷா கபஸ்திமான் | ஸுவர்ணஸத்றுஶோ பானுஃ ஹிரண்யரேதா திவாகரஃ || 10 ||
‘ஹே சூர்ய நாராயணா. நீ ஆதித்யன், அதிதி புத்திரன். லோக சிருஷ்டிகர்த்தா. சவிதா என்றாலும் ஸூர்யன் .வேதங்களும் சூர்ய அம்சம் தான். கக என்பது சூரியனின் ஆசனம். புசன் என்பது வேதம் காட்டும் தெய்வம். சூர்யன் தான். கபஸ்திமான் என்றால் சூரியனின் தங்க ஒளிக்கதிர்களை மாலையாக சூடியவன் என்று அர்த்தம். சூரியனுக்கு இப்படி ஒரு பெயர். எங்கள் ஒவ்வொரு செயலும் உன்னால். உன்செயலால் அன்றி எது ஆகும்? வானவெளியில் வலம் வருபவன். நீ இன்றி மழை ஏது. மழை இன்றி உலகேது? தங்க ஒளி படைத்த கதிரவனே, பொன் வண்ணனே , பிரகாசமே, தினகரா உன்னால் தானே தினங்களே உருவாகிறது.

11. हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्ति-र्मरीचिमान् । तिमिरोन्मथनः शम्भुः त्वष्टा मार्ताण्डको‌உशुमान् ॥ 11 ॥
haridaswa sahasrarchi saptha sapthir mareechiman thimironmadhana shambhu thwashtwa marthanda amsuman
ஹரிதஶ்வஃ ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஸப்தி-ர்மரீசிமான் | திமிரோந்மதநஃ ஶம்புஃ த்வஷ்டா மார்தாண்ட அம்ஶுமான் || 11 ||

”சூரிய தேவா, உனது ரதத்தில் பூட்டிய பச்சை,மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட நிற ஏழு குதிரைகளுடன், ஆயிர ஒளி கிரணங்களுடன் இருளை விரட்டுபவனே, ஆனந்தமய வாழ்வு உன்னால் தானே சூரியநாராயணா, ஜனன மரண காரணா, சொல்லொ ணா புகழ் மிக்கவனே, உனக்கு நமஸ்காரம்”.

12. हिरण्यगर्भः शिशिरः तपनो भास्करो रविः । अग्निगर्भो‌உदितेः पुत्रः शङ्खः शिशिरनाशनः ॥ 12 ॥
hiranya garbha shisira thapano bhaskaro ravi agni garbha adithe puthra sanka shisira nasana
ஹிரண்யகர்பஃ ஶிஶிரஃ தபனோ பாஸ்கரோ ரவிஃ | அக்னிகர்போ‌உதிதேஃ புத்ரஃ ஶங்கஃ ஶிஶிரனாஶனஃ || 12 ||
”ஹிரண்ய கர்பா, தங்க நிற பீஜமானவன், உள்ளும் புறமும் சுவர்ண பிம்ப மயமானவனே, மனக் கிலேசம் எல்லாம் நீக்குபவனே, உஷ்ணத்தை அளித்தாலும் அதிலிருந்து தாபத்தை அகற்றுபவனே, ஒளி ஊட்டுபவனே, எல்லோராலும் விரும்பிப் போற்றப்படுபவனே, இணையற்ற அக்னியை தன்னுள் கொண்டவனே, அதிதியின் புத்ரனே, விருப்பமுடன் ஆகாயமார்கமாக பிரயாணிப்பவனே, பனி,குளிர் ஆகியவற்றை நாசம் செய்பவனே, உனக்கு நமஸ்காரம்.
எப்படியெல்லாம் சூரியனை ராமனுக்கு அறிமுகப்படுத்துகிறார் அகஸ்திய மஹரிஷி.
நமது வாழ்வுக்கே ஜீவ ஆதாரமான சூரியனை நன்றியோடு நாமும் வணங்குவோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *