BRAMMA SUTHRAM 20-28 J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
சூத்திரங்கள் 20 முதல் 27வரை
ॐ अन्तस्तद्धर्मोपदेशात् ॐ ॥ १.१.२०॥
ANTARADHIKARANAM: . ANTASTADDHARMOPADESAT I.1.20 (20)
அந்தராதிகரணம்: ஓம் அந்தஸ்தத் தர்மோபதேசாத் ஓம்;
சூரியனுக்கும் நமது கண்ணுக்கும் இடையே இருப்பது ப்ரம்மன். ஸூர்யனே கண்ணுக்கு ஒளி தருபவன். தங்க நிற மேனி, முடி,தாடி, நகம் ஒளி உடையவனாக சகல தீயவைகளுக்கும் அப்பாற்பட்டவன் உதிதன். கடந்தவன். பிரம்மநிலையை அடைந்தவன். ப்ரம்மம் ஒளி, ஒலி ,ஸ்பர்சம், உருவம்,அழிவு அற்றது.
ॐ भेदव्यपदेशाच्चान्यः ॐ ॥ १.१.२१॥
Bhedavyapadesachchanyah I.1.21 (21)
ஓம் பேதவ்யப தேஸாச்சான்யா ஓம்
சூரியனிலிருந்தும் கண்னின் பார்வையிலிருந்தும் வேறுபடுத்திச் சொல்வதால் அது பிரம்மத்திற்கு அந்நியமானது என்று விளங்கும். எளிதில் புரியாமலிருப்பதன் காரணம் பிரம்மம் விளக்க முடியாதது. சூத்திரங்கள் ஒரு கோடி காட்டுபவை. அதிலிருந்து அனுபவ பூர்வமாக தான் சாதகன் பிரம்மத்தை உணரமுடியும்.
நம்மாழ்வார் இதைத்தான் தன்னுடைய அருமையான தமிழ் பாசுரத்தில் சொல்கிறார்:
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே. 2.5.10
எம்பெருமான் ப்ரம்மஸ்வரூபன் ஆனவன், ஆணும் பெண்ணும் அல்லன். இரண்டு பாலிலும் சேராத அலியும் அல்லன். நம் கண்களால் காண முடியாதவன். உண்டு/இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த இயலாதவன். ஆனால், அடியார்களுக்கு வேண்டுகின்ற காலத்திலே, வேண்டுகின்ற வடிவில், காட்சி தந்து ரட்சிப்பவன். ஆதலால், அப்பரந்தாமன் குறித்து எடுத்துரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்!
ॐ आकाशस्तल्लिङ्गात् ॐ ॥ १.१.२२॥
AKASADHIKARANAM: AKASASTALLINGAT I.1.22 (22)
ஓம் ஆகாசஸ் தல்லிங் காத் ஓம்
ஆகாசம் என்பதும் ப்ரம்மம் தான். அதனால் ஆகாசம் மட்டுமே ப்ரம்மம் என்று ஆகாது. பஞ்ச பூதங்களும் அதில் அடக்கம். ஆகாசத்தில் உதயமாகி அதில் மறைபவை உலக வஸ்துக்கள். ப்ரம்மம் அனைத்தையும் கடந்தது. அது ஞானமயமானது.
ॐ अत एव प्राणः ॐ ॥ १.१.२३॥
PRANADHIKARANAM: ATA EVA PRANAH I.1.23 (23)
ஓம் அத ஏவ பிராண: ஓம்
எப்படி ஆகாசத்தை பற்றி சொன்னோமோ அப்படியே ப்ராணனைப் பற்றியும் சொல்ல வேண்டும். பிராணன் ப்ரம்மம் என்றால் ப்ராணன் மட்டுமே என்று அர்த்தம் இல்லை. சகல ஜீவன்களும் வாழ அத்தியாவசியமானது ப்ராணன். அனைத்தும் தோன்றி மறைவது ப்ராணனால்.
ॐ ज्योतिश्चरणाभिधानात् ॐ ॥ १.१.२४॥
JYOTISCHARANANDHIKARANAM: JYOTISCHARANABHIDHANAT I.1.24 (24)
ஓம் ஜ்யோதிஸ்ச்சரணாபிதாநாத் ஓம்
ஜ்யோதி என்பதும் ப்ரம்மன். சாதாரண விளக்கின் ஒளி அல்ல இந்த ஜ்யோதி. ஆத்ம ஒளி. வீட்டில் வெளிச்சம் தருவது அல்ல. மனிதனின் உள்ளே ஒளிர்வது. சூரிய பிரகாசத்தை உதாரணமாக சொன்னாலும் இந்த ஜ்யோதி பலமடங்கு அதைவிட பெரியது, ஒளி மிகுந்தது.
ॐ छन्दोऽभिधानान्नेतिचेन्न तथाचेतोऽर्पणनिगदात्तथा हि दर्शनम् ॐ ॥ १.१.२५॥
Chhando’bhidhanannet chet na tathacheto’rpananigadat tatha hi darsanam I.1.25 (25)
ஓம் சந்தோ அபிதனாந் நேதி சேத்ன ததா சேதோ அர்ப்பணநிகதாத் ததா ஹி தர்சனம் ஓம்:
காயத்ரி மந்திரம் ப்ரம்மம் என்று உணர்த்தும் மந்திரம் இது.
ॐ भूतादिपादव्यपदेशोपपत्तेश्चैवम् ॐ ॥ १.१.२६॥
Bhutadipadavyapadesopapatteschaivam I.1.26 (26)
ஓம் பூதாதி பாத வ்யபதே பதேஸோப பத்தேச் சைவம் ஓம்:
காயத்ரிக்கு நான்கு பாதங்கள் அவை ஆத்மா, பூமி, உடல், ஆத்மா குடியிருக்கும் மனம்/ ஹ்ருதயம்.. ஆகவே காயத்ரி மந்திரம் எனப்படுவது ப்ரம்மமே. காயத்ரி மந்த்ரத்தை பூணல் போடும்போது உபதேசிப்பது அதனால் தான் ப்ரம்ம உபதேசம் எனப்படுகிறது.
ॐ उपदेशभेदान्नेति चेन्नोभयस्मिन्नप्यविरोधात् ॐ ॥ १.१.२७॥
Upadesabhedanneti chet naubhayasminnapyavirodhat I.1.27 (27)
ஓம் உபதேசா பேதாந் நேதி சேத் உபயஸ்மின் அபி அவிரோதாத் ஓம்
காயத்ரியும் பிரம்மமும் வேறு வேறு பொருள்களை உபதேசங்களை சொல்வது போல் இருந்தாலும் அது அவ்வாறு இல்லை. ப்ரம்மத்துக்கும் காயத்ரிக்கு வேறுபாடு எதுவும் இல்லை. பிரம்மத்தின் மூன்று பாதங்கள்
தேவலோகத்தில் உள்ளது என்றும் , இன்னொரு மந்திரம் தேவலோகத்தின் மேலே என்றும் கூறுகிறது என்றாலும் இதில் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு பறவை மரத்தின் நுனியில் இருக்கிறது என்பதற்கும் மரத்தின் மேல் இருக்கிறது என்பதற்கும் என்ன வித்யாசம். ப்ரம்ம சூத்ரம் உபநிஷதுகள் கூறும் உபதேசங்களில் வித்தியாசமில்லை என்று நிரூபணம் செய்கிறது

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *