BALAMUKUNDHASHTAKAM J K SIVAN

பாலமுகுந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
லீலா சுகர் -பில்வமங்கள் ஸ்வாமியார்
உள்ளம் கொள்ளை போகுதே..
கேரள குருவாயூரப்பன் எனும் குட்டி கிருஷ்ணனுக்கு கணக்கில்லாத பக்தர்கள். அவர்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் பில்வமங்கள சாமியார் என்கிற லீலாசுகர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று வங்காளத்தில் உதித்த சைதன்ய பிரபு, ஆந்திரா வந்தபோது கிடைத்தது. ஸமஸ்க்ரிதம் என்பதால் அதன் ருசி உணர்ந்து சிலரை திருவனந்தபுரம் அனுப்பினார். சைதன்யர் எதிர்ப்பார்த்தபடி, அங்கே லீலா சுகர் எழுதிய முழு ஸ்லோகமும் கிடைத்தது. அதுவே நாம் இன்பமாக அனுபவிக்கும் ஸ்ரீ கிருஷ்ணகர்ணாம்ருதம். 300க்கு மேலே ஸ்லோகங்கள் கொண்டது.
”டேய் என்னோடு வா” என்று பில்வமங்கள் சாமியார் ( லீலா சுகர்) கூப்பிட்டால் குருவாயூரப்பன் அவர் பின்னாலேயே உடனே போவான். நேரம் எப்படியாவது ஒதுக்கு ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் ஸ்லோகங்களை எழுத முயற்சிக்கிறேன். கிருஷ்ணன் நிச்சயம் உதவுவான். அதில் கிருஷ்ணனை பாலக்ரிஷ்ணனாகவும் வாலிப கிருஷ்ணனாகவும் காணலாம்.
இப்போதைக்கு லீலா சுகரின் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பால முகுந்தாஷ்டகம் தெரிந்து கொள்வோம்.
करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् । वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥१॥
Kara-Aravindena Pada-Aravindam Mukha-Aravinde Vi-Niveshay-Antam | Vattasya Patrasya Putte Shayaanam Baalam Mukundam Manasaa Smaraami ||1||
கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் | வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
”குட்டி கிருஷ்ணா, உன்னை நினைத்தால் முதலில் உன் சிவந்த தாமரைப் பாதங்கள் தான் கண் முன் காட்சி தருகிறது. உன் பிஞ்சு கரங்களால் வலது கால் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைக்கும் அழகை என்னவென்று சொல்லுவது ஆலிலை கிருஷ்ணா, வடபத்ரசாயி யாக மனதை கொள்ளை கொள்ளும் அழகா.
संहृत्य लोकान् वटपत्रमध्ये शयानमाद्यन्तविहीनरूपम् ।सर्वेश्वरं सर्वहितावतारं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥२॥
Samhrtya Lokaan Vatta-Patra-Madhye Shayaanam-Aady[i]-Anta-Vihiina-Ruupam |Sarve[a-Ii]shvaram Sarva-Hita-Avataaram Baalam Mukundam Manasaa Smaraami ||2||
ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே சயானமாத்யந்த விஹீனரூபம் | ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
மஹா பிரளய சமயம் சர்வ ஜீவராசிகளும் மறைந்தபோது ஆலிலையில் மிதந்துவந்தவன் பாலகிருஷ்ணன் என்பார்கள். பிரபஞ்சத்தை மீண்டும் ஸ்ரிஷ்டித்தவன்,ஆதி அந்தமில்லாதவன். சர்வ லோக நாயகன். எந்தனுள்ளம் கொள்ளை கொண்டவன் அந்த பால முகுந்தன் என்கிறார் லீலாசுகர்.
इन्दीवरश्यामलकोमलाङ्गं इन्द्रादिदेवार्चितपादपद्मम् । सन्तानकल्पद्रुममाश्रितानां बालं मुकुन्दं मनसा स्मरामि ॥३॥
Indiivara-Shyaamala-Komala-Anggam Indra-[A]adi-Deva-Arcita-Paada-Padmam | Santaana-Kalpadrumam-Aashritaanaam Baalam Mukundam Manasaa Smaraami ||3||
இந்தீவரச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம் |ஸந்தான கல்பத்ருமமாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
இந்த விஷமக்கார கருப்பன், குட்டிப் பையன், மாயாஜால கருநீல வர்ணன். கார்மேகவண்ணன். மெத்து மெத்து என்று இருப்பவன். இந்திராதி தேவர்கள் சரணடைந்து பணிந்து வணங்கும் அந்த சின்னஞ்சிறு பதங்கள் உருவத்தில் தான் பார்க்க ரொம்ப சின்னவை. உண்மையில் அவை மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளில் சர்வ சாதாரணமாக அளக்க வல்லவை. கேட்ட வரம் தருபவை.
लंबालकं लंवितहारयष्टिं शृङ्गारलीलाङ्कितदन्तपङ्क्तिम् ।बिंबाधरं चारुविशालनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥४॥
Lamba-Alakam Lamvita-Haara-Yassttim Shrnggaara-Liila-Angkita-Danta-Pangktim | Bimba-Adharam Caaru-Vishaala-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||4||
லம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் ச்ருங்கார லீலாங்கிததந்தபங்க்திம் | பிம்பாதரம் சாருவிசாலநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
உருண்டு திரண்டு, சுருண்ட மெல்லிய நீண்ட கேசங்கள் கொண்டவன் அந்த அழகன் பால முகுந்தன் . அழகிய வனமலர்கள் தொடுத்த மாலை அணிந்தவன். முத்துப்போல பல்லழகன். கோவைக்கனி இதழ்களும் அலைபாயும் நீலோத்பல விழிகளும் கொண்டவன். இவனை மனம் நினைக்காமல் இருக்க முடியுமா?
शिक्ये निधायाद्य पयोदधीनि बहिर्गतायां व्रजनायिकायाम् । भुक्त्वा यथेष्टं कपटेन सुप्तं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥५॥
Shikye Nidhaaya-Adya Payo-Dadhiini Bahir-Gataayaam Vraja-Naayikaayaam | Bhuktvaa Yathessttam Kapattena Suptam Baalam Mukundam Manasaa Smaraami ||5||
சிக்யே நிதாயாத்யபயோததீநி பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம் | புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II
திருடன் அவன். மனமாகிய வெண்ணையைத் திருடுபவன். உறியில் சட்டியில் திருடிய வெண்ணை நம் இதயத்தை கொள்ளை கொள்வதை குறிக்கிறதோ?. அதனால் தான் அவனை ‘உள்ளங்கவர் கள்வன்’ என்கிறோமோ? அவனுக்கு அவன்
உடலும் அதன் நிழலும் போல வ்ரஜ பூமியில் வசித்த அனைத்து கோபியரும் அவனுடைய நிழல் தான். அவனை இணை பிரியாதவர்கள். ஆயர்பாடி மாளிகையில் தூங்குவது போல் நடிப்பவன். காக்கும் கடவுள்.
कलिन्दजान्तस्थितकालियस्य फणाग्ररङ्गे नटनप्रियन्तम् ।तत्पुच्छहस्तं शरदिन्दुवक्त्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥६॥
Kalinda-Ja-Anta-Sthita-Kaaliyasya Phanna-Agrar-Angge Nattana-Priyantam | Tat-Puccha-Hastam Sharad-Indu-vaktram Baalam Mukundam Manasaa Smaraami ||6||
காளிந்தஜாந்தஸ்தித காளியஸ்ய பணாக்ரரங்கே நடனப்ரியந்தம் | தத் புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
யமுனையில், காளிந்தி நதி பிரதேசத்தை ஆக்கிரமித்த கொடிய விஷம்கொண்ட காளிங்கன் சிரத்தில் குதித்து நடமாடி, அவன் தவறு செய்தாலும் அவனைக் கொல்லாமல் உயிர் பிச்சை அளித்து அப்புறப்படுத்தியவன் பால கிருஷ்ணன். சிறிய ஒரு கையால் காளிங்கன் வால் நுனியை பிடித்துக் கொண்டு ஒரு கால் தூக்கி படமெடுத்து ஆடும் காளியன் தலையில் பால கிருஷ்ணன் நிலவொளி வீசும் வதனத்தோடு ஆனந்த புன்முறுவலுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் காட்சி காளீய நர்த்தனம் என்று நிறைய சிலைகளாகவும், படங்களாகவும் காண்பதெல்லம் இதோ வரிசையாக கண் முன் தோன்றுகிறது.
उलुखले बद्धमुदारशौर्यं उत्तुङ्गयुग्मार्जुनमङ्गलीलम् ।उत्फुल्लपद्मायतचारुनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥७॥
Ulukhale Baddham-Udaara-Shauryam Uttungga-Yugma-Arjunam-Angga-Liilam | Utphulla-Padma-[A]ayata-Caaru-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||7||
உலூகலே பத்தமுதாரசௌர்யம் உத்துங்க யுக்மார்ஜுன பங்கலீலம் | உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||
”அப்பப்பா, எவ்வளவு விஷமம் பண்ணுகிறான் இந்த கிருஷ்ணன் பயல், தாங்கமுடியவில்லையே ” என்று அன்னை யசோதை அவனை ஒரு கல் உரலோடு கயிற்றால் பிணைத்து வயிற்றில் கட்டியபோது அந்த கட்டுண்ட மாயன் கண்களில் ஜலம் ததும்ப அன்னையிடம் கட்டுண்ட காட்சியை மறக்க முடியுமா? அதையே சாக்காக வைத்தல்லவோ குபேரனின் புத்திரர்கள் நளகூபன், மணிக்ரீவன் ஆகியோருக்கு சாப விமோசனம் அருளினான். இரு மருதமரமாக நின்ற அவர்களுக் கிடையே அன்னை யசோதை கட்டிய உரலோடு சென்று மரங்களை சாய்த்து அவர்களை விடுவித்து விண்ணுலகுக்கு அனுப்பினான். அடே பாலமுகுந்தா நீ படே ஆள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தியில் பெரியவன்.
आलोक्य मातुर्मुखमादेण स्तन्यं पिबन्तं सरसीरुहाक्षम् ।सच्चिन्मयं देवमनन्तरूपं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥८॥
Aalokya Maatur-Mukham-Aadenna Stanyam Pibantam Sarasii-Ruha-Akssam |Sac[t]-Cinmayam Devam-Ananta-Ruupam Baalam Mukundam Manasaa Smaraami ||8||
ஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம் |ஸச்சின்மயம் தேவமனந்தரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II
இதோ ஒன்றுமறியாத பாலகனாக, தாய் மடியில் படுத்து அவள் பாலூட்ட சுவைத்து ருசித்து குடிப்பவனைப் பாருங்கள். தாமரைத் தடாகத்தில் மலர்போல் விழிகள். காக்கும் தெய்வமே,பால முகுந்தா, நின்னைச் சரணடைந்தேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *