RASA AASWAADHA THARANGINI – J K SIVAN

தசரதன் அரண்மனையில் ”ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு” என்று கேட்ட விஸ்வாமித்ரர் அனுப்ப தயங்கிய தசரதனுக்கு ராமன் சாதாரண மானிட பாலகன் இல்லை என்று உணர்த்த 100 ரஹஸ்யங்களை சொல்கிறார். அது எனக்கு தெரியும் உனக்கு தெரியாது என்று அவர் சொல்லும் காரணங்களில் இது வரை 30 ரசித்து விட்டோம். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த பருத்தியூர் பெரியவா ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் அற்புதமாக இயற்றி உபன்யாசங்கள் செய்தா ரஸ நிஷ்யந்தினி ஸ்லோகங்களை இனி தொடர்வோம்:

31. अस्य योनिमहं जानामीति त्वमः ‘तस्य धीराः परिजानन्तियोनिम्’ इत्यहम् ।
அஸ்ய யோனிமஹம் ஜானாமிதித்வம் ; தஸ்ய தீரா ; பரிஜானந்தி யோனிம் இத்யஹம்

தசரதா, இவன் இன்னாருக்கு புத்ரன், இன்னாருக்கு பேரன் என்று ராமனின் விருத்தாந்தத்தை சொல்கிறாயே. அதோடு நின்றுவிட்டதா, அவ்வளவுதானா? அவன் எடுத்த பிறவிகள், எடுக்கப்போகிறவை கணக்கற்றவை. அவற்றை பூரண ஞானிகளால் மட்டுமே உணரமுடியும். இதை நீ அறியாய். நான் அறிவேன்.

32. अस्य मानुषी काचन पत्नी भवित्रीति त्वम्; ‘ह्रीश्च ते लक्ष्मीश्च पढ्यौ’ इति ह्रियं लक्ष्मी च पत्नीत्वेन प्राप्तोऽयमितिं नित्यसिद्धह्री लक्ष्मीपत्नीक इत्यहम् ।।
அஸ்ய மானுஷி காசன பத்னி பவித்ரிதி த்வம் ; ஹிச்சதே லக்ஷ்மிஸ்ச பட்யோ இதி ஹியம் லக்ஷ்மி சா பத்னித்வேன ப்ராப்தோயமிதிம் நித்யசித்த லக்ஷ்மி பத்னிக இத்யஹம்

தசரதா , ஏதோ ஒரு அரசனின் புத்ரியை ராமனுக்கு மனைவியாக நிச்சயித்து கல்யாணம் பண்ணி விடலாம் என்று நீ உத்தேசம் பண்ணுகிறாய். . மஹா லக்ஷ்மி விட்டு விடுவாளா? அவனது பத்னியாக அவள் இருக்கும் இடத்தில் வேறு யாரை அமர்த்த முடியும்? இதை நீ உணரமாட்டாய். அவள் அவனுக்காக காத்திருக்கிறாள் என்பதும் எனக்கு தெரியும்.

33. अयमेकशिरा इति त्वम्; अयं सहस्रशीर्षा पुरुषः इत्यहम् ।
அயமேகஸிரா இதித்வம் ; அயம் சஹஸ்ரசீர்ஷா புருஷ ; இத்யஹம்

ராமன் என்றால் நம் எல்லோரையும் போல் கழுத்தின் மேல் ஒரு தலை அதற்கு மேல் அழகிய பொன்னாலான கிரீடம் என்று தான் என்று ராஜ வம்சத்தில் பிறந்த நீ அறிவாய். . தசரதா நன்றாக புரிந்து கொள். இந்த உலகத்தில் எத்தனை உயிர்களை அவன் படைத்துக் காக்கின்றானோ அத்தனை தலைகள் உள்ளவன் ராமன். அவ்வளவும் அவன் உடலே. சும்மா கணக்குக்கு ஆயிரம் தலைகள் கொண்டவன் என்று சொல்கிறோம். அது ஆயிரமல்ல. கணக்கிலடங்காதது. எண்ணவும் எண்ணிப்பார்க்கவும் முடியாதது. இது எனக்கு தெரியும். உனக்கு தெரியாது.

34. अयं मर्त्यस्येशानः इति त्वम् अयममृतत्वस्य ईशान इत्यहम् ।
அயம் மத்யர் ஸ்யேஷான்: இதி த்வம் ; அயமம்ருதத்வஸ்ய இன்ஸான் இத்யஹம் .

இது அழியும் உலகம். இதில் ஏதோ ஒரு நாட்டின் ராஜாவாக நீ இருக்கிறாய்.உனக்குப் பிறகு அதற்கு ராஜாவாக உன் மகன் ராமன் ஆளபோகிறான் என்று நீ நினைத்து சந்தோஷப்படுகிறாய் தசரதா. ஸ்ரீ ராமன் நித்ய அநித்யமான எல்லாவற்றிற் கும், சகலத்திற்கும் எஜமானன். இதை நான் அறிவேன். நீ அறியாய்.

35. अस्य द्विपादत्वमिति त्वम्, ‘त्रिपादस्यामृतं दिवि’ इत्यहम्।
அஸ்ய த்விபாதத்வமிதி த்வம் . த்ரிபாதஸ்யாம்ருதம் தீவி இத்யஹம்

”தசரதா , ராமன் நம் எல்லோரையும் போல இரு கால்களால் இந்த பூமியில் நடக்கும் சாதாரண பாதசாரி என்றா உன் எண்ணம்? நான் அறிவேன் அவனை. இந்த அகில உலக உயிர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் அவனது உருவத்தின் கால் பங்கு தேறாது என்றபோது அவனது உருவத்தின் முக்கால்பங்கு விண்ணுலகை கடந்து அழியாது நிற்பதை உணரமுடிகிறதா உன்னால்? (புருஷ சூக்தம் சொல்கிறது இதை)

त्रिपादूर्ध्व उदैत्पूरुषः पादोऽस्येहाभवत्पुनः ।ततो विष्वङ् व्यक्रामत्साशनानशने अभि ॥४॥
Tri-Paad-Uurdhva Udait-Puurussah Paado-Asye[a-I]ha-Abhavat-Punah | Tato Vissvang Vya[i-A]kraamat-Saashana-Anashane Abhi ||4||

36. अयमाशीर्वादग्रहणार्थं ब्राह्मणमुखान्यवलोकत इति त्वम्; ‘ब्राह्मणोऽस्य मुखमासीत्’ इति ब्राह्मणान् मुखतोऽसृजत् इत्यहम् ।

அயம் ஆசிர்வாதக்ரஹணார்த்த ப்ராமணமுகான்யவலோகத் இதித்வம்; ப்ராம்மணோஸ்ய முகமாஸித் இதை பிராமணான் முகத்தோஅஸ்ருஜத் இத்யஹம் :

தசரதா, உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். நிறைய தான தர்மங்களை கொடுத்து வணங்கி வேத பிராமணர்களின் முகங்களை ஆர்வமாக பக்தியாக பார்க்கிறோமே எதற்கு?. அவர்கள் முகமலர்ந்திருக்கிறார்களா? திருப்தியா, ஆசி தருவார்களா? என்று தானே. இதோ உன் எதிரே நிற்கிறான் பார் இளம் பாலகனாக உன் மகன் ராமன். அவன் முகத்தைப் பார். வேத வித்துக்களான பிராமணர்களின் முகங்களை ஆர்வமாக ஆவலாக எதிர் நோக்கி அவர்களது ஆசிகளை பெற அவன் நிற்பது போலவா உனக்கு தோன்றுகிறது? அது அல்ல உண்மை. பிராமணர்கள் என்பதே அவனுடைய முக பிரதி பிம்பம் என்று நீ முதலில் உணர்வாய். காரணம் என்ன தெரியுமா? அவனிடமிருந்தே தான் வேத மும் அதை கோஷிக்கும் வேதியர்களும் தோன்றினார்கள்.” (புருஷ சூக்தம் சொல்வது) ब्राह्मणोऽस्य मुखमासीद् Braahmanno-Asya Mukham-Aasiid

37. वैरिव्यूहनिरसनार्थमनेकक्षत्रियबाहूनयमपेक्षत इति त्वम्; ‘बाहू राजन्यः कृतः’ इति बाहुभ्यामेव क्षत्रियजातिमसृजदित्यहम् ।
வைரிவ்யூ ஹநிற சனார்த்தமனேக க்ஷத்ரிய பாஹுனய மபெக்ஷத் இதித்வம் ; பாஹு ராஜன்ய; க்ருத; இதை பாஹுப்யாமேவ க்ஷத்ரிய ஜாதிமஸ்ருஜதித்யஹம் .

தசரதா , உன் மகன் பட்டத்திளவரசன் ராஜ குமாரன் ராமன் எதிரி மன்னர்களின் சதி திட்டங்களை முறியடிக்க பிறந்த க்ஷத்ரியன். அநேக க்ஷத்ரிய பெரிய பெரிய ராஜாக்களின் பலமிகுந்த புஜங்கள் அவனுக்கு தேவை என்று நீ எண்ணுகிறாய். இது ரொம்ப சாதாரண மானிட எதிர்பார்ப்பு. புருஷ சூக்தம் சொல்லும் ”புஜபல பராக்கிரம க்ஷத்ரியர்களே அவன் புஜம் தான்… (புருஷ சூக்தம்) बाहू राजन्यः कृतः । Baahuu Raajanyah Krtah |

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *