SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN
கிருஷ்ணா, இது தான் நடந்தது…

”கிருஷ்ணா,  மாதவா, நீ  என்னை  பிரிந்தாவனத்துக்குப் போ, அங்கே  எனக்காக  காத்திருக்கும், வாடி நிற்கும்  கோபியருக்கு ஆறுதலாக  என் வார்த்தைகளாக  இதெல்லாம் சொல்லிவிட்டு அவர்களை  சந்தோஷப்
படுத்திவிட்டு, உற்சாகப்படுத்தி  விட்டு வா” என்று உபதேசம் எல்லாம் சொன்னாய் . நானும் கவனமாக அதெல்லாம் கேட்டு ஞாபகம் வைத்துக்கொண்டு அவர்களை பிருந்தாவனத்தில்   போய்  சந்தித்தேன். அங்கே நடந்தது என்ன தெரியுமா?  அவர்கள் என் வார்த்தைகளை கேட்பதற்கு முன்னால்  நான் அவர்கள் வார்த்தைகளை கேட்டதில் இதுவரையில் எனக்கு புரியாத உபநிஷத சமாச்சாரங்கள், வேதாந்தங்கள் புரிந்தது.  அடேயப்பா, புராணங்கள், வேதங்களைக்  கரைத்துக் குடித்த  ரிஷிகளால் கூட அவ்வளவு  உயர்ந்த தத்துவங்களை உணர்த்த முடியாது என்று புரிந்து அதிசயித்தேன். நீ இல்லை என்று நான் தான் அங்கே நினைத்தேன், அவர்கள் உன்னை ஒவ்வொரு கணமும் காணும் யாவிலும் கண்டு உன்னோடு இன்று வாழ்கிறார்கள். உன் குரலை காற்றில் எல்லா சப்தத்திலும்  ரசிக்கிறார்கள். நாங்கள் தான் கண்ணனோடு பேசி, சிரித்து, பாடி, ஆடி ஓடி  வாழ்கிறோமே, எதற்கு அவனிடமிருந்து எங்களுக்கு  சேதி கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறாய் என்று என்னை கேலி செய்தார்கள்.  அவர்களுக்கு ப்ரம்மா  சிவன் விஷ்ணு எல்லாம்  நீயாகவே  இருக்கிறாய் .. எல்லோருமே இப்படித்தான்  சர்வ ஞானிகளாக இருக்கிறார்கள் கிருஷ்ணா” என்றார்  உத்தவ மகரிஷி.
கண்ணன்  பேசாமல் வெகுநேரம்  உத்தவரையே  பார்த்துக்கொண்டிருந்தான், எப்போது அவன் சிலையானான்?
அவனை அறியாமல் கிருஷ்ணனின்  விழிகளை  நீர்த்திரை மூடியது.  அவன் மனம் அவனை  பிருந்தாவன நாட்களுக்குக் கொண்டு சென்றது அங்கே அவன் வாழ்ந்த வாழ்க்கை படமாக ஆரம்பம் முதல் ஓடியதை ரசித்தான்.
ஒரு பெருமூச்சு அவன் மனதில் ஓடிய படத்தின் கடைசி காட்சியாக,  முடிவாக  வெளிப்பட்டது. அதிலிருந்த உஷ்ணம் அவனது  ஏக்கமா, கோப கோபியர்கள் மேல் அவனுக்கிருந்த பாசமா, நெருக்கமா, இல்லை, என் அவதார நோக்கம்  பிருந்தாவன வாழ்க்கை இல்லை என்ற  தீர்மானமா, அல்லது    கம்சன்  மற்றும் அவன் ராக்ஷஸர்கள் மீதிருந்த கோபத்தின் எரிச்சலா,  எது என்று நமக்கு எப்படி புரியும்?  ஸூர்தாஸுக்கே  தெரியவில்லை என்கிறாரே!

0 Madhava, I am satiated.
You contrived to send me to Braj with your message.
Pardon my words. do entreat you,to hear about gopis’ condition
the essence of Vedas and Puranas
they told me, in easy graspable words.
Neither Shruti, nor Shesh, nor Shiva or Creator of the Universe: Brahma,
has sung the way as the gopis sang about you.  Sur says, hearing this, Shyam’s beautiful eyes
overflowed with tears.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *