WORLD’S OLDEST SIVA TEMPLE – J K SIVAN

உலகத்திலேயே பழைய சிவன். – நங்கநல்லூர் J K SIVAN

நமது தேசம் ஒன்றில் தான் உலகத்தில் மற்ற இடங்களில் இருப்பதை விட அதிகமான கோவில்கள் அதுவும் பெரும்பாலானவை தமிழகத்தில், முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் அதிகம் காணப்படுவது நமது தமிழகத்தில் தான். என்ன பிரயோஜனம், எத்தனையோ புண்ய புருஷர்கள் மகாராஜாக்கள் பிரபுக்கள் கட்டிய இந்த ஆலயங்கள் கண்ணில் ரத்தம் வரும் அளவுக்கு , பாதிக்கு மேல் கவனிப்பாரற்று கிடக்கும் நிலைக்கு நாம் தான் காரணம். இதற்கு நாம் தான் பொறுப்பு. பொறுப்பற்றவர் கையில் பொறுப்பை ஒப்படைக்கலாமா?

மூன்று சிவலிங்கங்கள் கற்சிலை சிற்ப வரலாற்றில் காலத்தால் பழமையானவை. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே உள்ள குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிற்கும் சிவன்-சிவலிங்கம். சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்த விக்ரஹம். சிகப்பு ப்ரொவ்ன் கலந்த வழு வழுப்பான வினோத மணல்-கல்லில் செதுக்கப்பட்டது. இந்தியாவிலேயே ரொம்ப ரொம்ப பழைய சிவாலயம் இது. இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் பழங்கால சிவலிங்கமும் இது தான். மற்ற இரண்டு சிவலிங்கங்களும் குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். வேறெங்கோ இருப்பவை. இது சிவப்புக் கல்லால் ஆனது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், எர்பேடு மண்டலத்தில் உள்ள இந்த குடிமல்லம் (గుడిమల్లం) ஓர் விசேஷமான கிராமம். இராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது. பாப்பாநாயுடு பேட்டை யிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஏர்பேடு கிராமத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ரேணிகுண்டாவிலிருந்து 8.3 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 17.8 கி.மீ. தொலைவிலும், திருச்சானூர் 18.9 கி.மீ. தொலைவிலும், நாரயணவனத்திலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 20.8 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 54.4 கி.மீ. தொலைவிலும், சித்தூரிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 137 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

திருப்பதியிலிருந்து எப்போதாவது இவ்வூருக்குப் பஸ்கள் ஓடுகிறது. ரேணிகுண்டா இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ ரிக்ஷா அமர்த்திக் கொள்ளலாம். சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை வழியே பயணம் செய்தால் வரண்ட சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. கோவில் நுழைவாயில் மொட்டைக் கோபுரமாகக் காணப்படுகிறது. எப்போதாவது வரும் பக்தர்களைத் தவிர கோவில் ஆளரவமற்றுக் காணப்படுகிறது.

பழங்காலத்துக் கோவிலான பரமேஸ்வரர் (சிவன்) கோவில் குடிமல்லத்தில் அமைந்துள்ளதால், இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோவிலின் மூலவரான பரசுராமேஸ்வரர் உலகிலேயே தொடர்ந்து வழிபடப்பட்டுவரும் சிவலிங்கம் என்றும் பரசுரமேஸ்வரர் கோவில் 2200 ஆண்டுகள் பழையானது என்றும் கற்றறிந்த வரலாற்று அறிஞர்கள், சில சான்றுகளின் அடிப்படையில், கருதுகிறார்கள். 1903ல் கண்டுபிடித்து புனருத்தாரணம் பண்ணியவர் புதை பொருளாராய்ச்சி நிபுணர் ஸ்ரீ T A கோபிநாத். பீடத்தில் நிற்கும் இந்த லிங்கம் உலகத்திலேயே ரெண்டாவது பழமையான லிங்கம் என்கிறார்கள். லிங்கத்தை வழிபட்டவர் பரசுராமர் என்பதால் அவர் பெயரோடு கலந்த ஈஸ்வரன். நிற்கும் சிவன் ஒரு வேடனைப் போல் உள்ளார். கையில் மான், மழு,. கமண்டலம். ஒரு கையில் கோடாலி. பரசு என்று சமஸ்க்ரிதத்தில் சொல்வார்களே அது. அதனால் தான் அதை ஆயுதமாக கொண்ட ஒரு அவதார ரிஷிக்கு பரசுராமன் என்று பெயர்.

எப்போது தோன்றிய லிங்கம் என்று இன்னும் விவரம் கிடையாது. சதுர ஆவுடையார், பிண்டிக எனப்படுவது. லிங்கம் ஏழு பட்டை கொண்ட பாண லிங்கம். நிற்கும் சிவன் செதுக்கப்பட்டுள்ளது. முயலகன் மேல் நிற்பது போன்ற அமைப்பு. ஒருவேளை இது பல்லவர்களின் கை பட்ட சிறந்த வேலைப்பாடாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். இந்த லிங்கத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள கோவில் அப்புறம் வந்தது. முதலில் வெறும் சிவலிங்கம் மட்டும் வெட்டவெளியில் மேலே குறையில்லாமல் நின்று கொண்டிருந்ததாம்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலவர் விமானம் தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட / ஹஸ்திபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது. கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம் ஆகிய இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பினைக் குறிக்கின்றன. அதாவது விமானத்தின் பின்புறம் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானச் சுவற்றின் நடுவில் வெற்றிடம் உள்ளது.

பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த விமானத்தின் பிரஸ்தாரம், சிகரம், கிரீவம் (கண்டம்) மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுச் சுதை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் அதிஷ்டானத்திலிருந்து பிரஸ்தாரம் வரை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது . பிரதிவரிபந்த வகையைச் சார்ந்த இந்த விமானத்தின் தளத்தை உபானம், ஜகதி, உருள் குமுதம் ஆகிய ஆகம உறுப்புகள் கொண்டவை. விமானத்தின் வெளிப்புறச் சுவர்களை அரைத் தூண்களின் உதவி கொண்டு பத்தி பத்தியாக பிரித்திருக்கிறது .சுவரின் பத்திகளின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் அமைக்கப்பட்ட

இரு கால்களையும் பரப்பிக் கால்களைப் பலமாக ஊன்றியவாறு நின்ற நிலையில் (sthanaka posture) காணப்படும் சிவன் விக்ரஹம் ஒரு வேடன் மாதிரி காணப்படும். யையும் பரப்புகிறது. பாதங்கள் ஒரு குள்ள யட்சன், முயலகனோ? அவன் தோள்களை அழுத்துகிறது. சாந்தமான சலனமற்ற பரசுராமேஸ்வரன் முகம். றது. ரெண்டு கைகள் கீழே தொங்குகிறது.
காதில் பெரிய குண்டலங்கள். கழுத்தில் ஆபரணம். கைகளில் ஐந்து கங்கணம். ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் வஸ்திரம். அதன் மீ வஸ்திர மேகலா. நாம் பெல்ட் BELT போட்டுக்கொள்வது மாதிரி. தலையில் தலைப்பாகை மாதிரி ஜடாமுடி சுற்றி மீதி நீண்ட சுருள் சுருளான சிகை, முடி பின்னால் தொங்குகிறதா? சிற்பி என்ன அழகாக கற்பனையில் பண்ணி இருக்கிறான்? தடித்த உதடுகள் ஒரு தனி அழகு. கழுத்தில் சரபளி (sarapali), விலாவில் உதரபந்தம் (udarabandha), தோள்களில் தோள்வளை (tholvalai), மேற்கைகளில் கேயூரம் (keyura), முழங்கையில் கங்கணம் (kangana), மணிக்கட்டில் கடக வளை (kataka valai), வளையல்கள், இடுப்பைச் சுற்றி மடிப்புகளுடன் (fleets) கூடிய மெல்லிய இடுப்பு ஆடை, இடுப்பில் ஆடையை இறுக்கிக் கட்டும் கடிபந்தம் (katibandha) ஆகிய அணிகலன்களுடன் காட்சி தருகிறார். வேடனாக இருப்பதால் பரசுராமேஸ்வரனுக்கு பூணலைக் காணோம். அகழ்வாராய்ச்சியில் இங்கே 2- 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள், பெரிய செங்கற்கள் (42 x 21 x 6 cm) கிடைத்தது. இது இந்தியாவின் மிகப் பழமையான சிவலிங்கம் என்று முடிவு. கோவிலைச் சுற்றி மதிற்சுவர்கள். ராஜ கோபுரம் இல்லை. அம்பாள் ஆனந்தவல்லி (அம்மாவரு) க்கு தனிச் சன்னதி கோவிலில் வடமேற்கு மூலையில் உள்ளது.. வள்ளி தேவானை சமேத சுப்பிரமணியன், சூர்யநாராயணன் ஆகியாருக்கு தனி சந்நிதிகள்.

பரசுராமர் அப்பா ஜமதக்னி முனிவர் கட்டளைப்படி அம்மா ரேணுகாவின் தலையை கோடாலியால் வெட்டிய வெட்டிய பாபத்துக்கு பிராயச்சித்தமாக இந்த குடிமல்லம் வந்து சிவலிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்து நமஸ்கரித்து அர்ச்சனைகள் ல்பண்ணி, தவம் இருந்ததாக ஐதீகம். கோவில் அருகே பரசுராமர் வெட்டிய குளம் இருக்கிறது. தினமும் புனிதமான ஒற்றை மலர் குளத்தில் மலர்ந்தது. அதைப் பறித்துக் குடிமல்லம் சிவலிங்கத்தின் பாதத்தில் வைப்பார்.

ஒரு விசேஷம். அறுபது வருஷத்துக்கு ஒரு தடவை கர்பகிரஹத்தில் வெள்ளம் பீரிட்டு வருமாம். நீர்மட்டம் உயர்ந்து பாண லிங்கம் மறைந்துவிடும். வெள்ளம்சீக்கிரம் வடியும். கடைசியாக 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வெள்ளம் லிங்கத்தை சில நிமிஷங்கள் மூடியது. அதற்கு முன்னால் 1945ல் வெள்ளம் லிங்கத்தை மூடியபோது பார்த்தவர்கள் ஊரில் இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த வெள்ளம் காசி கங்கைஜலம் என்கிறார்கள்.

ஜூன் 20 அல்லது 21 (உத்தராயணம்); டிசம்பர் 21 அல்லது 22 (தட்சிணாயணம்) ஆகிய தேதிகளில் மட்டும் மீண்டும் மீண்டும் நடக்கும் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் கர்பகிரஹம் எதிரே உள்ள சாளரம் வழியாகப் புகுந்து சிவலிங்கத்தின் நெற்றியின் மீது விழுகிறது.
கோவிலில் 25 கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர்கள், கங்கப் பல்லவர்கள், பாணர்கள், மற்றும் சோழ மன்னர்கள் அளித்த சாசுவதமான தானம் தர்மம் பற்றி சொல்கிறது. சிவனை இந்த கல்வெட்டுகள் பரசிராமேசுரமுடைய நாயனார் என்றும் திருவேங்கடக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவிற்பெரும்பெட்டு ஆளுடையார் ஸ்ரீ பரமேசுரமுடையர் என்றும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடி திருவேங்கடக் கோட்டத்து திருவிற்பெரும்பெட்டு மகாதேவர் பரசுராமேசுரமுடையர் என்று நீளமாக சொல்கிறது. திருப்பி சொன்னாள் வாய் வலிக்கும். குடிமல்லம் என்ற பேரைக் காணோம். விப்ரபீடம் (பிராமண அக்ராகரம்) என்று தான் சொல்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *