KALA BAIRAVASHTAKAM – J K SIVAN

கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

சிவாலயங்களில் சந்நிதிகளில் கால பைரவர், பைரவர் என்று நாம் வணங்கும் சிவாம்சம் பொருந்திய தெய்வத்தைப் பற்றி நிறைய இதுவரை கட்டுரைகள் எழுதி உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஆதி சங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் எனும் மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை. நல்மார்க்கத்திற்கு வழி காட்டுபவை. புண்ய பலன் தருபவை. பாபங்களை, துன்பங்களை, வறுமையை, இச்சைகளை, கோபத்தை, தீர்ப்பவை. படிக்கும் நம்மை உயர்விப்பவை.

देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् ।
नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥१॥

Deva-Raaja-Sevyamaana-Paavana-Angghri-Pangkajam Vyaala-Yajnya-Suutram-Indu-Shekharam Krpaakaram |
Naarada-[A]adi-Yogi-Vrnda-Vanditam Digambaram Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||1||

தேவராஜ ஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧||

கபாலத்தை கையில் ஏந்திய காலபைரவர் எப்படிப்பட்டவர் என ஆதிசங்கரர் அழகாக வர்ணிக்கிறார்:
கபாலத்தை கையிலேந்திய கயிலைவாசா, மகா தேவா, உனது தாமரைப் பாதங்களை அர்ச்சிப்பவன் வேறு யாருமல்ல ஸாக்ஷாத் இந்திரன், தேவாதி தேவன், உனக்கென்று ஒரு தனி ஆபரணம் எது என்று பார்க்கிறேன், யாரும் அணிய நினைக்காத அரவ புரிநூல், , நாக யக்நோபவீதம். உனக்கு ஒளிவீசும் மகுடம் வைரத்திலோ, வேறு எந்த விலைமதிப்பில்லாத கல்லோ, மணியோ அல்ல. வளர்ந்து தேயும், பிறைச் சந்திரனே உனது ஜடாமுடியில் ஒரு கிரீடம். முகத்திலோ சர்வ சாந்தம். கருணை ப்ரவாஹம் கங்கையோடு போட்டி போட்டுக்கொண்டு. மோனத்தில் ஞானமா, ஞானத்தில் மோனமா என்று அறியமுடியாத உன்னை போற்றிப் பாடுபவர் யார் இங்கே நிற்கிறார்கள் என நீ அறிவாயா? மூடின கண் திறந்தால் தானே தெரியும். திரிலோக சஞ்சாரி நாரத ப்ரம்ம ரிஷி. யோகீ ஸ்வரர்கள், முநிஸ்வரர்கள் அல்லவோ சூழ்ந்து நிற்பவர்கள். . திகம்பரேசா, எண் திசைகள் தான் உனது ஆடை எனும்படியாக எங்கும் பரந்த உருவம். பனிமலை சிகரத்தில் ஒன்றாக உன் தேகம்….காலபைரவா, காசிகா புராதிநாதா. உனக்கு நமஸ்காரங்கள்.”

2. भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनम् ।
कालकालमंबुजाक्षमक्षशूलमक्षरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥२॥

Bhaanu-Kotti-Bhaasvaram Bhavaabdhi-Taarakam Param Niila-Kannttham-Iipsita-Artha-Daayakam Trilocanam |
Kaala-Kaalam-Ambuja-Akssam-Akssa-Shuulam-Akssaram Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||2||

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் |
காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨||

சதாசிவா, உன் மகனை, கணேசனை, வணங்கும்போது ”சூர்ய கோடி சம பிரபா” என்போமே. அது உன் குடும்ப சொத்தா? அது தான் உண்மை என்று எனக்குப் படுகிறது. கண்ணைப்பறிக்கும் பொன்னார் மேனியனே, நீயும் நூறு நூறு கோடி சூர்ய பிரகாசமானவன். பவ சாகரத்தை கடக்கும் தோணி, நீல கண்டா, அது எப்படி ஹாலஹால விஷம் கூட உன் மேனிக்கென்று ஒரு தனி அழகைத் தருகிறது? . மயில் கழுத்து போல் மயக்குகிறது. எமது பெண்களுக்கு மயில் கழுத்து நிற புடவை என்றால் எத்தனை மோகம். சிவம் என்றால் மங்களம் தானே. உன் பெயர் சொன்னாலே சுபிக்ஷம் தானே. அரவிந்த லோசனா, இந்த அழகிய இரு கண்களை அரை மூடி நீ த்யானத்தில் இருக்கும் காந்த சக்தி அகிலத்தை வளைத்து விடுமே, ஆனால் அதன் மீது இருக்கும் முக்கண்ணோ, தீயவர் கண்டஞ்சும் தன்மையது.

பரம சிவா, நீ காம தகன காரணன் மட்டுமல்ல. திரிபுராந்தகன் மட்டும் அல்ல. காலனுக்கே காலன். ம்ருத்யுஞ்ஜயன் . கால சம்ஹார மூர்த்தி. சூலாயுத பாணி. திரி புவனத்தையும் காக்கும் ரக்ஷை உன் திரிசூலம். முடிவில்லாதவன் நீ மோன குரு. கால பைரவேஸ்வரா, காசிபுராதினாதா, உன்னை பஜித்து மகிழ்கிறோம்

3. शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं श्यामकायमादिदेवमक्षरं निरामयम् ।
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥३॥

Shuula-Ttangka-Paasha-Danndda-Paannim-Aadi-Kaarannam Shyaama-Kaayam-Aadi-Devam-Akssaram Nir-Aamayam |
Bhiimavikramam Prabhum Vicitra-Taannddava-Priyam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||3||

சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம் ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் |
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩||

பிரபஞ்ச காரணா, திருசூல நாதா. பாசமும் கதாயுதமும் கொண்டவனே. காலம் என்பதே கருமையான இருளே தான் அதில் ஒளி வீசுபவன் நீயே என்று உணர்த்தும் கரிய மேனியனே. வியாதிகள் அனைத்தும் போக்கும் மஹா வைத்தியநாதா, சர்வ சக்தி தாயகா , தாண்டவ மூர்த்தே, அழிவையே அழிக்கும் சம்ஹார மூர்த்தியே, காலபைரவா, காசிகாபுராதி நாதா உனக்கு நமஸ்காரம்.

4. भुक्तिमुक्तिदायकं प्रशस्तचारुविग्रहं भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहम् ।
विनिक्वणन्मनोज्ञहेमकिङ्किणीलसत्कटिं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥४॥

Bhukti-Mukti-Daayakam Prashasta-Caaru-Vigraham Bhakta-Vatsalam Sthitam Samasta-Loka-Vigraham |
Vi-Nikvannan-Manojnya-Hema-Kingkinnii-Lasat-Kattim Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||4||

புக்தி முக்தி தாயகம் ப்ரஶஸ்தசாரு விக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம் |
னிக்வணன்-மனோஜ்ஞ ஹேம கிம்கிணீ லஸத்கடிம் காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே

இந்த ஸ்லோகத்தில் பரமசிவா, கைலாச நாதா, உன்னை எவ்வளவு கற்பனை வளத்தோடு வர்ணிக்கிறார் ஆதிசங்கரர். ஹே காலபைரவா, காசி நகர அதிபதியே, உன்னை வணங்கி வேண்டுவோர்க்கு கேட்டதெல்லாம் அருள்வோனே, நீ பக்தர்களுக்கு மனோவசியன் . ஈசா, இக பர சுகமாக உலக வாழ்வில் பக்தி இன்பமும் பரலோகத்தில் மோக்ஷ சித்தியும் அருள்பவனே. கண் கவரும் காந்த மேனியனே, பக்தர்களுக்கு பரமானந்தம் தருபவனே, என்றும் நிரந்தரா, பல்வேறு ரூபங்களாக பரிமளிப்பவனே, பொன்மணி ஒளியும், ஒலியும் வீச மணிகளை இடையில் ஆபரணமாக பூண்டவனே, உன் அலகிலா விளையாட்டுக்கு நடனத்திற்கு மெருகூட்ட, — நான் அசைந்தால் அசையும் அகில உலகமும்….என திகழ்பவனே உனக்கு நமஸ்காரம்காசி நாதா உனக்கு நமஸ்காரம்.
.
5. धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशकं कर्मपाशमोचकं सुशर्मदायकं विभुम् ।
स्वर्णवर्णशेषपाशशोभिताङ्गमण्डलं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥५॥

Dharma-Setu-Paalakam Tu-Adharma-Maarga-Naashakam Karma-Paasha-Mocakam Su-Sharma-Daayakam Vibhum |
Svarnna-Varnna-Shessa-Paasha-Shobhitaangga-Mannddalam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||5||

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம் கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் |
ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫||

பொன்னார் மேனியனே, பரமேஸ்வரா, பராத்பரா, தர்ம ரக்ஷகா,தர்ம பரிபாலன மூர்த்தி, அதர்மத்தை விநாசம் பண்ணுபவனே, கர்ம பாசத்தில் கட்டுண்ட எமை கட்டவிழ்த்து விடுவித்து ரக்ஷிப்பவனே, அசாத்தியமான திரிமூர்த்தி, வார்த்தைகளுக்கு எட்டாத ருத்ரா, புண்ய க்ஷேத்ரமான காசிகா நகர அதிபதி கால பைரவா, உனக்கு எண்ணற்ற நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம். ஏற்றுக்கொண்டருள்வாய்.

6. रत्नपादुकाप्रभाभिरामपादयुग्मकं नित्यमद्वितीयमिष्टदैवतं निरंजनम् ।
मृत्युदर्पनाशनं करालदंष्ट्रमोक्षणं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥६॥

Ratna-Paadukaa-Prabhaabhi-Raama-Paada-Yugmakam Nityam-Advitiiyam-Isstta-Daivatam Niramjanam |
Mrtyu-Darpa-Naashanam Karaala-Damssttra-Mokssannam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||6||

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் |
ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬||

காசி மாநகர் சிறக்க அதிபதியாக விளங்கும் கால பைரவா உனக்கு நமஸ்காரங்கள். பொன்னாலான பாதரக்ஷைகளில் மின்னும் நவரத்ன மணிகள் கண்ணை பறிக்கிறது. ஈடு இணையற்ற குறையற்ற, கரையேற்ற, பரிசுத்த காருண்ய வள்ளலே. பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்கும் பெருமானே. யாமிருக்க பயமேன் என்று அஞ்சேல் என மரண பயத்திலிருந்து தைர்யம் அளிக்கும் காலகாலா , ஆதரவளிக்கும் ஆதி தேவா. பிறவா வரமளிக்கும் பெம்மானே. காசிகாபுர ஆதி நாதா காலபைரவா , உனது திருவடிகளுக்கு நமஸ்காரம்.

7 अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् ।
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥

Atttta-Haasa-Bhinna-Padmaja-Anndda-Kosha-Samtatim Drsstti-Paata-Nasstta-Paapa-Jaalam-Ugra-Shaasanam |
Asstta-Siddhi-Daayakam Kapaala-Maalikaa-Dharam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||7||

அட்டஹாஸ பிந்ந பத்மஜாண்டகோச ஸந்ததிம் த்ருஷ்டிபாத நஷ்ட பாப ஜாலமுக்ரசாஸனம் |
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகா தரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||

7.3: Who Bestows the Eight Siddhis and Who Wear a Garland of Skulls.
7.4: Salutations to Sri Kalabhairava Who is the Supreme Lord of the City of Kasi.

அட்டகாசமான வெடிச்சிரிப்பால் அண்டத்தை, பகிரண்டத்தை கிடுகிடுக்க வைக்கும் மரண பயம் போக்கி மனத்தின் க்லேசங்களை விலக்குபவரே , காசி மாநகர அதிபதியே, ப்ரம்மம் ஒன்றே சாஸ்வதம் என்று அறிவுறுத்துபவரே, கடைக்கண் பார்வையில் பல ஜென்ம பாபங்களை அழிப்பவரே, கபால மாலை அணிந்து அநித்தியம் எது என்று உணர்த்துபவரே, அஷ்டமாசித்திகளை சுலபத்தில் அடைய வைப்பவர் உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

8. भूतसंघनायकं विशालकीर्तिदायकं काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥

Bhuuta-Samgha-Naayakam Vishaala-Kiirti-Daayakam Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||

பூத சங்க நாயகம் விசால கீர்த்தி தாயகம் காசிவாஸ லோக புண்ய பாபா சோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராடனம் ஜகத்பதிம் காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ சகல தேவதைகள், பைசாசங்கள், பூதங்களுக்கும் நாயகன், கணேஸ்வரன், எங்கள் ஆத்மாவை அறியச் செய்து ஞானம் அளிக்கும் குருநாதன். காசியில் வாசம் செய்வோரின் பாப நாசன். புண்ய தாயகன். ஞான மார்க்க பந்து. ஆதி பிரபஞ்ச காரணன். சர்வ லோகேசன். காசி மாநகர் சிறக்கச்செய்யும் அதிபதியே , கால பைரவா எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ சக்தி கொண்ட காக்கும் தெய்வமே,. உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

9, कालभैरवाष्टकं पठंति ये मनोहरं ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥

Kaalabhairavaassttakam Patthamti Ye Manoharam Jnyaana-Mukti-Saadhanam Vicitra-Punnya-Vardhanam |
Shoka-Moha-Dainya-Lobha-Kopa-Taapa-Naashanam Prayaanti Kaalabhairava-Amghri-Sannidhim Naraa Dhruvam ||9||

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோகரம் ஞானமுக்தி சாதனம் விசித்ர புண்யவர்தனம்
சோக மோஹ தைன்ய லோப கோப தாப நாசனம் ப்ரயாந்தி காலபைரவாம்க்ரி சந்நிதிம் நரா த்ருவம்\

மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு கால பைரவாஷ்டக ஸ்லோகங்களும் ஞானம் தருபவை. நல்மார்க்கத்திற்கு வழி காட்டுபவை. புண்ய பலன் தருபவை. பாபங்களை, துன்பங்களை, வறுமையை, இச்சைகளை, கோபத்தை, தீர்ப்பவை. படிக்கும் நம்மை உயர்விப்பவை. மனதை கவரும் புண்ய க்ஷேத்ரபாலகன் காலபைரவர் தரிசனம் கடாக்ஷம் அருள்பவை என்கிற பல ஸ்ருதியோடு நிறைவு பெறுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *