SOUNDHARYA LAHARI SLOKAS 86-95 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 86-95 – நங்கநல்லூர் J K SIVAN

86. मृषा कृत्वा गोत्रस्खलनमथ वैलक्ष्यनमितं ललाटे भर्तारं चरणकमले ताडयति ते ।
चिरादन्तःशल्यं दहनकृतमुन्मूलितवता तुलाकोटिक्वाणैः किलिकिलितमीशानरिपुणा ॥ 86॥

Mrisha krithva gothra skhalana matha vailakshya namitham Lalate bhartharam charana kamala thadayathi thee
Chiradantha salyam dhahanakritha –munmilee thavatha Thula koti kkana kilikilith –meesana ripuna 86

86 ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன-மத வைலக்ஷ்ய-நமிதம் லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே I
சிராத்ஹந்த: சல்யம் தஹனக்ருத-முன்மூலிதவதா துலா-கோடிகாணை: கிலிகிலித-மீசான-ரிபுணா II

ஏதோ விளையாட்டாக ஒரு நாள் அம்மா, உன் பிறந்தவீட்டைப்பற்றிய பேச்சு வந்தது. நீயும் உன் பதியும் பேசும்போது ஏளனமாக சில வார்த்தைகள் வெளிப்பட்டபோது அதனால் உன் மனம் வருத்தமும் கோபமும் கொண்டது. விளையாட்டு விபரீதமாகியதே என்றுணர்ந்த பரமேஸ்வரன் கலங்கி, இன்னது செய்வதென்று தெரியாமல் அம்மா என்னை தவறாக எண்ணாதே என்று உன்னை வணங்க குனிந்தார். அவர் நெற்றி உன் பாதகமலங்களில் பட்டபோது உன் கால் விரல்கள் அவரது நெற்றிக்கண்ணில் பட்டு அது திறந்தது. இந்த விளையாட்டுக்கு காரணமானவன் மன்மதன் எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தான் அந்த நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். உன் பாதச் சிலம்புகளின் மூலம் ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழும்பியது.

87 हिमानीहन्तव्यं हिमगिरिनिवासैकचतुरौ निशायां निद्राणं निशि चरमभागे च विशदौ ।
वरं लक्ष्मीपात्रं श्रियमतिसृजन्तौ समयिनां सरोजं त्वत्पादौ जननि जयतश्चित्रमिह किम् ॥87॥

Himani-hanthavyam hima-giri-nivas’aika-chaturau Nisayam nidranam nisi charama-bhaghe cha visadau;
Varam laksmi-pathram sriyam ati srijanthau samayinam Sarojam thvad-padau janani jayatas chitram iha kim.87

87. ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சத்ரௌநிசாயாம் நித்ராணம் நிசி-சரமபாகே ச விசதௌ I
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரீஇய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம் ஸரோஜம் த்வத்-பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹ கிம் II

87 பரமேஸ்வரி தாயே, தாமரையோ பனியில் கருகிப்போவது உனது திருவடித் தாமரைகளோ எப்போதும் பனிமலையில் இருப்பதில் அனுபவம் மிக்கவை என்பதால் பாதிக்கப்படாதவை. தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது, உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்தபோதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை; தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை; — ஆகையால் தாமரையை உனது பாத கமலங்கள் ஜயிக்கின்றன. இதில் அதிசயம் என்ன இருக்கிறது ?

88. पदं ते कीर्तीनां प्रपदमपदं देवि विपदां कथं नीतं सद्भिः कठिनकमठीकर्परतुलाम् ।
कथं वा बाहुभ्यामुपयमनकाले पुरभिदा यदादाय न्यस्तं दृषदि दयमानेन मनसा ॥ 88॥

Padham the kirhtinam prapadham apadham Devi vipadham Katham nitham sadbhih kutina-kamati-karpara-thulam;
Katham vaa bahubhyam upayamana-kaale purabhida Yad adhaya nyastham drshadi daya-manena manasa. 88

88 பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத மபதம் தேவி விபதாம் கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா

அம்பிகே, லலிதே, உன்னுடைய பாதங்களின் முன்பாகம் நீ அடியார்களைக் காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு உறைவிடம். அடியார்களுக்கு விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்துக் காத்து ரக்ஷிப்பது. – கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக, மிருதுவாக இருப்பது. இதை எவ்வாறு ஸாதுக்களாகிய கவிகள் கடினமான ஆமையோட்டின் உறுதி கொண்டது என்று வர்ணிக்க முடியும்? அதன் சக்தி வேறு தன்மை வேறு அல்லவா? தயை நிறைந்த மனமுடைய பரமசிவனால் விவாக காலத்தில் அப்பாதங்கள் கைகளால் எடுத்து அம்மிக்கல்லின்மேல் எப்படித்தான் வைக்கப்பட்டனவோ ? – இப்படி ஒரு வர்ணனை ஆதி சங்கரர் மனதில் எவ்வாறு உதித்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!

89. नखैर्नाकस्त्रीणां करकमलसंकोचशशिभि- स्तरूणां दिव्यानां हसत इव ते चण्डि चरणौ ।
फलानि स्वःस्थेभ्यः किसलयकराग्रेण ददतां दरिद्रेभ्यो भद्रां श्रियमनिशमह्नाय ददतौ ॥ 89॥

Nakhair naka-sthrinam kara-kamala-samkocha sasibhi Tarunam dhivyanam hasata iva te chandi charanau;
Phalani svah-sthebhyah kisalaya-karagrena dhadhatam Daridhrebhyo bhadraam sriyam anisam ahnaya dhadhatau. 89

89 நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம் தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ

சும்ப நிசும்பர்களை ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகேஸ்வரி, அம்பாளே, துளிர்கள் போன்ற மென்மையான மிருதுவான கை விறல் நுனிகளால் ஸ்வர்க்க வாசிகளுக்கு விரும்பிய பலன்களை அளிப்பவளே. தேவ லோகத்தில் உள்ல கற்பகம் முதலிய விருக்ஷங்கள் அளிக்கும் செல்வங்களை ஏழை எளியவர்களுக்கும் எந்தச் சமயத்திலும் நிறைவாக விரைவில் அளிக்கின்ற உனது பாதங்களின் நகங்களுக்கு இணையாகுமா, உன் பாத நகங்கள் எனும்போது தேவலோக மாதரின் கைகளாகிற தாமரைகளை மூடிக் கொள்ளச் செய்யும் சந்திரர்களைப் போன்றவை என்று நினைக்க தோன்றுகிறது. முழுநிலவு கூட உனது பாதங்களில் நகங்களின் காந்தி பரிகாசச் சிரிப்பு போல் இருக்கிறது.

90. शमाशानुसदृशी- ममन्दं सौन्दर्यप्रकरमकरन्दम् विकिरति ।
तवास्मिन् मन्दारस्तबकसुभगे यातु चरणे निमज्जन्मज्जीवः करणचरणः षट्चरणताम् ॥90

Dhadhane dinebhyah sriyam anisam asaanusadhrusim Amandham saundharya-prakara-makarandham vikirathi;
Tav’asmin mandhara-sthabhaka-subhage yatu charane Nimajjan majjivah karana-charanah sat-charanathaam. 90

ததானே தீனேப்ய; ச்ரியமனிச-மாசானு-ஸத்ருசீம் அமந்தம் ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி I
தவாஸ்மின் மந்தார-ஸ்தம்பக-ஸுபகே யாது சரணே நிமஜ்ஜன மஜ்ஜீவ: கரண-சரண ஷட்சரணதாம்

90. ‘ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் ஜீவனின் மனதை இந்திரியங்கலாகவும் கால்களாகவும் கொண்ட வந்து என்று உதாரணம் காட்டுகிறார். பூக்களை நாடி அதன் தேனைப் பருக விரும்பும் வந்து போல் பக்தனின் ஜீவன் நாடும் கற்பகப் பூங்கொத்து உன் பாதங்கள். உன் திருப்பாதங்கள் அல்லவோ சர்வ சம்பத்தையும் வாரித்தரும் கற்பகவிருக்ஷம் என்று ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்கிறார்.
அம்பாளின் அருள் தான் பூந்தேன்.

91. पदन्यासक्रीडापरिचयमिवारब्धुमनसः स्खलन्तस्ते खेलं भवनकलहंसा न जहति ।
अतस्तेषां शिक्षां सुभगमणिमञ्जीररणित- च्छलादाचक्षाणं चरणकमलं चारुचरिते ॥91

Pada-nyasa-kreeda-parichayam iv’arabdhu-manasah Skhalanthas the khelam bhavana-kala-hamsa na jahati;
Atas tesham siksham subhaga-mani-manjira-ranitha- Chchalad achakshanam charana-kamalam charu-charite.91

91 பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ: ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

புண்ய சரித்திரம் படைத்தவளே, பரமேஸ்வரி, உன்னுடைய வீட்டில் உள்ள ஹம்ஸங்கள் ,அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் துள்ளிக்குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை ஒருநாளும் விடுவதில்லை. ஆகையினால் உன்னுடைய திருவடிகளில் அணிந்துள்ள மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலி அந்த பறவைகளுக்கு சலங் சலங் என்று தாளமிட்டு மறை முகமாக அவை, நடைப்பழக்கத்தை கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது என்கிறார் ஆதி சங்கரர்.

92. गतास्ते मञ्चत्वं द्रुहिणहरिरुद्रेश्वरभृतः शिवः स्वच्छच्छायाघटितकपटप्रच्छदपटः ।
त्वदीयानां भासां प्रतिफलनरागारुणतया शरीरी श‍ृङ्गारो रस इव दृशां दोग्धि कुतुकम् ॥ 92॥

Gataas the mancathvam Druhina-Hari-Rudr’eshavara-bhrutah Sivah svacchac-chaya-ghatita-kapata-pracchada-pata;
Tvadhiyanam bhasaam prati-phalana-rag’arunathaya Sariri srungaro rasa iva dhrisam dhogdhi kuthukam. 92

92 கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்

லலிதா பரமேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, அம்மா, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய அதிகார புருஷர்கள் உன்னுடைய வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை அடைந்திருக்கிறார்கள். ஸதா சிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற உருவத்தில் ஆசன பீடமாக இருக்கிறார். உன்னுடைய காந்தியின் பிரதிபலத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்.

93. अराला केशेषु प्रकृतिसरला मन्दहसिते शिरीषाभा चित्ते दृषदुपलशोभा कुचतटे ।
भृशं तन्वी मध्ये पृथुरुरसिजारोहविषये जगत्त्रातुं शम्भोर्जयति करुणा काचिदरुणा ॥93

Araala kesheshu prakruthi-saralaa manda-hasithe Sireeshabha chite drushad upala-sobha kucha-thate;
Bhrusam thanvi madhye pruthur urasijh’aroha-vishaye Jagat trathum sambhor jayahti karuna kaachid aruna. 93

93 அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே ஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா

பரமசிவனுடைய மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத ஏதோ ஒரு கருணையானது உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்ற பராசக்தி வடிவில் வெற்றியுடன் விளங்குகிறது. அந்தக் கருணாசக்தி தேவியின் கூந்தலில் சுருண்ட, திரண்ட, இருண்ட ,குழல்கள் மிளிர்கிறது. குமிண் சிரிப்பு துலங்குகிறது. இயற்கையான இனிய நறுமணம் மிக்க மலர், வாகையைப் போன்ற மிருதுத்தன்மையான கூந்தல். நகில்கள் லாவண்யம் மிக்கவை. இல்லையோ என எண்ணத்தோன்றும் மெல்லிடை. மொத்தத்தில் திரிபுர சுந்தரி

94. कलङ्कः कस्तूरी रजनिकरबिम्बं जलमयं कलाभिः कर्पूरैर्मरकतकरण्डं निबिडितम् ।
अतस्त्वद्भोगेन प्रतिदिनमिदं रिक्तकुहरं विधिर्भूयो भूयो निबिडयति नूनं तव कृते ॥94॥

Kalankah kasthuri rajani-kara-bimbham jalamayam Kalabhih karpurair marakatha-karandam nibiditam;
Athas thvad-bhogena prahti-dinam idam riktha-kuharam Vidhir bhuyo bhuyo nibidayathi nunam thava krithe. 94

94, கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம் கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம் விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே

செக்கர் வானில் தோன்றும் சந்திரமண்டலமோ என எண்ண வைக்கும் சந்திர பிம்ப வதனம். பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த மரகதப்பாண்டம் நிறைய சந்திர கிரணங்களாகிய பச்சைக் கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டதுபோல் காண்கிறது. சந்திரனில் காணும் களங்கமாகத் தோன்றுவது நீ தரித்துள்ள கஸ்தூரி. ஆகையால் தினந்தோறும் உனது உபயோகத்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்’என்கிறார் ஆதி சங்கரர்.

95, पुरारातेरन्तःपुरमसि ततस्त्वच्चरणयोः सपर्यामर्यादा तरलकरणानामसुलभा ।
तथा ह्येते नीताः शतमखमुखाः सिद्धिमतुलां तव द्वारोपान्तस्थितिभिरणिमाद्याभिरमराः ॥ 95॥

Pur’arather antah-puram asi thathas thvach-charanayoh Saparya-maryadha tharala-karananam asulabha;
Thatha hy’ethe neetah sathamukha-mukhah siddhim athulam Thava dvar’opantha-sthithibhir anim’adyabhir amarah. 95

95 புராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ: ஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம் தவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா:

நீ முப்புரம் எரித்த பரமசிவனுடைய அந்தப்புரத்தில் பட்டமஹிஷியாக விளங்குகிறாய். அதனால் உன்னுடைய பாதங்களில் நெருங்கிப் பூஜை செய்யும் முறை அடங்காத சித்தம் உடையவர்களால் அடையக் கூடியது அன்று. அதனால்தான் இந்த இந்திரன் முதலான தேவர்கள் உன்னிடைய வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால் – தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் அணிமா முதலிய சித்திகளை அடையும்படி செய்விக்கப் பட்டார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *