VIGNANA NOUKA – 7-9/9 SLOKAS – J K SIVAN

விஞ்ஞான நௌகா – 7/9 – நங்கநல்லூர் J K SIVAN

अनन्तं विभुं निर्विकल्पं निरीहं शिवं सङ्गहीनं यदोङ्कारगम्यम् । निराकारमत्युज्ज्वलं मृत्युहीनं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ७॥

Anandam vibhum sarvayonim nireeham Sivam sangaheenam yad omkaaragamyam Niraakaaramathyujwalam mruthyuheenam Param Brahma nityam tadevaaham asmi. 7

ஆநந்தம் விভும் ஸர்வயோநிம் நிரீஹம் ॥ஶிவம் ஸங்গஹீநம் யদ் ஓம்காரகாம்யம் நிராகாரமத்யுஜ்வலம் ம்ருʼத்யுஹீநம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 7

இந்த ஆத்ம அனுபவம் இருக்கிறதே அது அற்புதமான ஒன்று. எல்லோராலும் அனுபவிக்க முடியாதது. முயற்சித்தால், விடாது தேடினால் கட்டாயம் கிடைக்கக் கூடியது. அது என்றும் முடிவில்லாதது, தெய்வீகமானது, பிரபஞ்சத்தையே கட்டுக்குள் வைக்க முடிந்தது, அமைதியானது, தனித்வமானது, ” ஓம் ” எனும் ப்ரணவமந்த்ர மூலம். அழிவற்றது, அருவமானது, ஒரு வார்த்தையில் சொல்வதானால் ப்ரம்மம். சதா ஆனந்தத்தை தருவது. .

यदानन्द सिन्धौ निमग्नः पुमान्स्या- दविद्याविलासः समस्तप्रपञ्चः । तदा नः स्फुरत्यद्भुतं यन्निमित्तं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ८॥

Yad Aananda sindhau nimagnah puman sya-Dvidyavilasah samastha prapanchah Tadaa na sphurathyatbhutam yannimitham Param Brahma nityam tadevaaham asmi. 8

யத் ஆநந்த ஸிந்தௌ நிமக்னஹ புமாந் ஸ்யா- দ்விদ்யாவிலாஸঃ ஸமஸ்தா ப்ரபஞ்சঃ ததா ந ஸ்ফுரத்யத்ভூதம் யந்நிமிதம்பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 8

ஆத்மானுவத்தில் மூழ்குபவனுக்கு வெளியேறவே தோன்றாது. அதிலேயே மேலும் மேலும் இன்னும் ஆழமாக ஈடுபடுவான். எல்லையற்ற பேரின்பக்கடல் ப்ரம்மம். பிரபஞ்ச காரணம் அது. அறியாமையைப் பூக்கும் ஞான தீபம். ப்ரம்மம் ஈடிணையற்றது. நானே ப்ரம்மம் என்று உணரவைப்பது.

स्वरूपानुसन्धानरूपां स्तुतिं यः पठेदादराद्भक्तिभावो मनुष्यः । श्रुणोतीह वा नित्यमुद्युक्तचित्तो भवेद्विष्णुरत्रैव वेदप्रमाणात् ॥ ९॥

Swaroopaanusandhanaroopaam sthuthim yah Pathed aadaraal bhakthibhavo manushyah Srunotheeha va nithyam udyukta chitto Param Brahma nityam tadevaaham asmi. 9

ஸ்வரூபாநுஸந்ধநரூபம் ஸ்துதிம் யঃ பதேத் ஆதாரால் பக்திபவோ மனுஷ்யஹ் ஶ்ருணோதீஹ வா நித்யம் உத்யுக்த சித்தோ பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 9

நான் யார் என்ற தேடலின் விடை தான் பிரம்மானந்தம். ஆதி சங்கரர் 9 ஸ்லோகங்களில் இதை எளிதாக வர்ணிக்கிறார். அதை தான் விஞ்ஞான நௌகா என்ற சம்சார சாகரத்திலிருந்து விடுபட வைக்கும் வழிகாட்டியாக அறிகிறோம். இதை பக்தி சிந்தனையுடன் படித்தால் அறிந்தால், புரிந்து கொண்டால், அதன் பரிசு பேரின்பத்துக்கு இலவச டிக்கெட். நானே ப்ரம்மம் என்று உணரவைக்க ஒரு சலுகை. இதை எழுதிய ஆதி சங்கரரை வாழ்த்தி வணங்குவோம்.

விஞ்ஞான நௌகா என்ற இந்த சிறிய 9 ஸ்லோகங்கள் இந்த பதிவோடு நிறைவு பெருகிறது. எந்த நண்பராவது இதை பிரசுரித்து இலவசமாக வழங்க முன்வந்தால், விருப்பமிருந்தால் என்னை அணுகவும். ஜே கே சிவன் 9840279080

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *