SOUNDHARYALAHARI SLOKAS 66-75 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 66-75 – நங்கநல்லூர் J K SIVAN

विपञ्च्या गायन्ती विविधमपदानं पशुपतेः त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने ।
तदीयैर्माधुर्यैरपलपिततन्त्रीकलरवां निजां वीणां वाणी निचुलयति चोलेन निभृतम् ॥66॥

Vipanchya gayanthi vividham apadhanam Pasupathea Thvay’arabdhe vakthum chalita-sirasa sadhuvachane;
Tadhiyair madhuryair apalapitha-tantri-kala-ravam Nijaam vinam vani nichulayati cholena nibhrutham 66

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ் த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசனே I
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம் நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் II66

லோகாம்பிகை, தாயே, உன் குரல் சரஸ்வதி தேவி யின் வீணை கச்சபியை விட இனிமையாக, மிருதுவாக இருக்கிறதம்மா. பசுபதியின் லீலைகளை கலைமகள் அழகாக காவியமாக வாசிக்கிறாள் . அதைக் கேட்டு நீ புளகாங்கிதம் அடைகிறாய். ஆஹா என்று ரசித்து தலையாட்டி அவள் வீணை ஒலியை புகழ்கிறாய். ஆனால் உன் குரலின் இனிமை அவள் வீணையைப் பழிக்கும் இனிமை கொண்டது. இதயத்தையே தொட்டு மலர வைப்பவை. உன்குரலினிமை கேட்டு ஸரஸ்வதி தேவி யுடைய வீணை வெட்கப்படக்கூடாதே என்று அந்த வீணையை அவள் தன்னுடைய வெண்ணிற ஆடையால் சுற்றி மறைத்துக்கொண்டு வாசிக்கிறாள் .

कराग्रेण स्पृष्टं तुहिनगिरिणा वत्सलतया गिरीशेनोदस्तं मुहुरधरपानाकुलतया ।
करग्राह्यं शम्भोर्मुखमुकुरवृन्तं गिरिसुते कथङ्कारं ब्रूमस्तव चिबुकमौपम्यरहितम् ॥67

Karagrena sprustam thuhina-girina vatsalathaya Girisen’odasthama muhur adhara-pan’akulataya;
Kara-grahyam sambhor mukha-mukura-vrintham Giri-sute Kadham-karam bramas thava chubukam aupamya-rahitham.67

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா கிரிசேனோ-தஸ்தம் முஹுரதரபானா-குலதயா I
கரக்ராஹ்யம் சம்போர் முக-முகுரவ்ருந்தம் கிரிஸுதே கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மௌபம்ய-ரஹிதம் I67

67 ஹிமகிரி தனயே , ஹேமலதே , மலையரசன் பெண்ணே ! இமவானால் வாத்ஸல்யத்துடன் நுனிக்கையால் தொடப்பட்டதும் பரமசிவனால் அதரபானம் செய்யும் ஆவலுடன் அடிக்கடி உயர்த்தப்பட்டதும் பரமசிவனுடைய கையால் அங்ஙனம் தொடுதற்கு உரியதும் உவமையற்றதும் முகமாகிய கண்ணாடிக்குப் பிடிபோன்றதும் ஆகிய உன்னுடைய மோவாய்க்கட்டையை எப்படித்தான் வர்ணிக்க முடியும் என்று ஆதி சங்கரர் மயங்குகிறார்.
சிறப்பு” [தேவியின் ப்ரஸன்னம்]

भुजाश्लेषान् नित्यं पुरदमयितुः कण्टकवती तव ग्रीवा धत्ते मुखकमलनालश्रियमियम् ।
स्वतः श्वेता कालागुरुबहुलजम्बालमलिना मृणालीलालित्यम् वहति यदधो हारलतिका ॥68॥

Bhujasleshan nithyam Pura-damayituh kantaka-vathi Tava griva dhatte mukha-kamalanaala-sriyam iyam;
Svatah swetha kaalaagaru-bahula-jambala-malina Mrinali-lalithyam vahati yadadho hara-lathika.68

68. புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ தவ க்ரீவா தத்தே முக-கமல-நால-ச்ரிய-மியம்
ஸ்வத; ச்வேதா காலா-கரு-பஹுல-ஜம்பால-மலினா ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா II68

68 சர்வலோக நாயகி, உன்னுடைய இந்த கழுத்து முப்புரம் எரித்த பரமசிவனுடைய புஜங்களின் தழுவுதலால் எப்போதும் மயிர்க்கூச்செறிந்து முள்ளு முள்ளாக சிறு கேசங்கள் சிலிர்த்து நிற்பதாலும் எனக்கு ஒரு உதாரணம் மனதில் தோன்றுகிறது. தாமரை புஷ்பத்தின் காம்பு போல், உன் முகத்தாமரைக்குக் காம்பு அந்த பரமேஸ்வரன் புஜத்தின் சிலிர்த்த கேசங்கள். பொலிவைத் தருபவை. உன் கஸுத்தில் அதன் கீழுள்ள முத்துமாலை இயற்கையில் வெண்மையாயினும் கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பினால் சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடியின் அழகை லாவண்யத்தை மிஞ்சுவதாக இருக்கிறது.

गले रेखास्तिस्रो गतिगमकगीतैकनिपुणे विवाहव्यानद्धप्रगुणगुणसंख्याप्रतिभुवः ।
विराजन्ते नानाविधमधुररागाकरभुवां त्रयाणां ग्रामाणां स्थितिनियमसीमान इव ते ॥ 69॥

Gale rekhas thisro gathi-gamaka-gith’aika nipune Vivaha-vyanaddha-praguna-guna-samkhya-prahibhuvah;
Virajanthe nana-vidha-madhura-ragakara-bhuvam Thrayanam gramanam sthithi-niyama-seemana iva the. 69

69. கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதிக-நிபுணே விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா ப்ரதிபுவ: I
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம் த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவ தே II69

69 அம்மா, உன்னுடைய கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள் ஸங்கீத கதி, கமகம், கீதம் என்பவை. இவற்றில் ஒப்புயர்வற்ற ஈடற்ற திறமை வாய்ந்தவளே! உன்னுடைய கழுத்தில் உள்ள மூன்று பாக்கிய ரேகைகள் நன்றாய்க் கட்டப்பட்ட பல நூல்கள் கொண்ட சரட்டின் எண்ணிக்கையை ஞாபகப்படுத்துவது போலும். பலவிதமான இனிய ராகங்களுக்குத் தோற்றுவாயாக உள்ள ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவது போலும் விளங்குகின்றன.
உத்தம ஸ்த்ரீகளுக்கும் புருஷர்களுக்கும் நெற்றி, கழுத்து, வயிறு ஆகிய மூன்றிடங்களில் மூன்று கோடுகள் இருக்கும் என்று ஸாமுத்ரிகா சாஸ்திடம் கூறுகிறது. “விவாஹ காலத்தில் மாங்கல்யதாரணத்திற்குப் பிறகு இடதுகையில் ஒரு சரடும் கழுத்தில் மூன்று ஸரம் கொண்ட சரடும் கட்டுவது பண்டைக்காலத்தில் பல இடங்களில் வழக்கம். இதை க்ருஹ்ய ஸூத்ரம் கூறுகிறது.

मृणालीमृद्वीनां तव भुजलतानां चतसृणां चतुर्भिः सौन्दर्यं सरसिजभवः स्तौति वदनैः ।
नखेभ्यः सन्त्रस्यन् प्रथममथनादन्धकरिपो- श्चतुर्णां शीर्षाणां सममभयहस्तार्पणधिया ॥ 70॥

Mrinali-mridhvinam thava bhuja-lathanam chatasrinam Chaturbhih saundaryam Sarasija-bhavah stauthi vadanaih;
Nakhebhyah samtrasyan prathama-madhanadandhaka-ripo Chaturnam sirshanam samam abhaya-hasth’arapana-dhiya.70

ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ஸ்ருணாம் சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: I நகேப்ய: ஸந்த்ரஸ்பன் ப்ரதம-மதனா தந்தகரிபோ: சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபயஹஸ்தார்ப்பண-தியா II 70

70. பாக்கியவதி, பார்வதி, உன்னுடைய தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்.தாமரைத் தண்டுபோல் மெதுவாய்த் துவள் பவை. உன்னுடைய நான்கு கொடிபோன்ற கைகளின் அழகை தாமரையில் உதித்த பிரம்மா முதலில் தனது தலைகளில் ஒன்றைக் கிள்ளி விட்ட காலகாலனான பரம சிவனுடைய நகங்களினின்று பயந்துகொண்டு ஸமகாலத்தில் நான்கு கைகளாலும் அபயம் அளிப்பாய் என்ற நோக்கத்துடன் நான்கு முகங்களாலும் துதிக்கிறார் என்று சங்கரர் கூறுகிறார்.

नखानामुद्द्योतैर्नवनलिनरागं विहसतां कराणां ते कान्तिं कथय कथयामः कथमुमे ।
कयाचिद्वा साम्यं भजतु कलया हन्त कमलं यदि क्रीडल्लक्ष्मीचरणतललाक्षारसछणम् ॥71॥

Nakhanam uddyotai nava-nalina-ragam vihasatham Karanam te kantim kathaya kathayamah katham Ume;
Kayachid va samyam bhajatu kalaya hanta kamalam Yadi kridal-lakshmi-charana-tala-laksha-rasa-chanam.71

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம் கராணாம் தே காந்தி கதய கதயாம: கதமுமே I
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம் II71

71 உமா தேவியே ! பளபளக்கும் உன் நகங்களுடைய சிறந்த ஒளியினால் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பை ஏளனம் செய்கின்ற உன்னுடைய கரங்களின் காந்தியை எவ்வாறு என் போன்ற ஒரு சாதாரணன் வருணிக்க இயலும்? நீயே சொல். அது ரொம்ப கடினமான காரியம் எனக்கு. செந்தாமரையை ஒருவேளை அதனிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடி யில் உள்ள செம்பஞ்சுக் குழம்புடன் சேர்த்தால் அப்போது வேண்டுமானால் ஏதோ கொஞ்சம், சிறிதளவாவது உன் கரங்களின் எழிலோடு ஒப்பிடலாம்.

समं देवि स्कन्दद्विपवदनपीतं स्तनयुगं तवेदं नः खेदं हरतु सततं प्रस्नुतमुखम् ।
यदालोक्याशङ्काकुलितहृदयो हासजनकः स्वकुम्भौ हेरम्बः परिमृशति हस्तेन झडिति ॥ 72॥

Samam devi skanda dwipa vadana peetham sthanayugam Thavedham na khedham harathu sathatham prasnutha mukham
Yada loakakhya sankha kulitha hridayo hasa janaka Swa kumbhou herambha parisrusathi hasthena jhhaddithi 72

72. “கணபதியும், ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்”
[தேவியருள் சுரத்தல், யக்ஷிணி வச்யம், இரவில் பயமின்மை]

ஸமம் தேவி ஸ்கந்த-த்வி-வதன-பீதம் ஸ்தன-யுகம் தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத-முகம் I
யதா-லோக்யா-சங்கா-குலித-ஹ்ருதயோ ஹாஸ-ஜனக: ஸ்வகும்பௌ-ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேன ஜடிதி II

நீ ஜகன்மாதா. கந்தனுக்கு கணேசனுக்கும் தாய். இரு குழந்தைகளும் உன் மார்பகத்தில் பால் அருந்தியவை. நாங்கள் உன் கருணை அன்பு, தயை பாலை அருந்தி உயிர்வாழ்பவர்கள். எங்கள் துயர் தேர்ந்தவர்கள்.

73. अमू ते वक्षोजावमृतरसमाणिक्यकुतुपौ न संदेहस्पन्दो नगपतिपताके मनसि नः ।बन्तौ तौ यस्मादविदितवधूसङ्गरसिकौ कुमारावद्यापि द्विरदवदनक्रौञ्चदलनौ ॥ 73॥

Amuu they vakshoja vamrutharasa manikhya kuthupou Na sadhehaspatho nagapathi pathake manasi na
Pibhanthou thow yasma dhavadhitha bhadusangha rasikou Kumara vadhyapi dwiradhavadhana krouncha dhalanou 73

73. “அமூ தெ வக்ஷோஜா-வம்ருதரச-மாணிக்ய-குதுபௌ ந ஸந்தேஹச்பந்தோ நகபதி-பதாகே மனசி ந: I
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க ரஸிகௌ குமாராவத்யாபி த்விரத-வதன-க்ரௌஞ்ச-தலனௌ II73

ஞானாம்பிகே, மலையரசன் மகளே, உன் கருணை தான் ஞானப்பாலாக உலகை அமுதூட்டி மகிழ்விக்கிறது. சந்தேகமே இல்லை. உன் மார்பகங்கள் ஞான அம்ருத கலசங்கள். உலகை உயிர்வாழவைக்கும் அம்ருத குடங்கள். சர்வ சக்தி வாய்ந்த ஆனைமுகனும் ஆறுமுகனும் அமுதுண்ணவை.

वहत्यम्ब स्तम्बेरमदनुजकुम्भप्रकृतिभिः समारब्धां मुक्तामणिभिरमलां हारलतिकाम् ।
कुचाभोगो बिम्बाधररुचिभिरन्तः शबलितां प्रतापव्यामिश्रां पुरदमयितुः कीर्तिमिव ते ॥ 74

vahathyambha sthamberam dhanuja kumbha prakrithibhi Samaarabhdham muktha mamibhi ramalam haara lathikam
Kuchabhogo bhimbhadara ruchibhi rathna saabhalitham Prathapa vyamishram puradamayithu keerthimiva thee 74

74. வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ-கும்ப-ப்ரக்க்ருதிபி: மமாரப்தாம் முதாமணிபி-ரமலாம் ஹார-லதிகாம் I
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்ட்த: சபலிதாம் ப்ரதாப-வ்யாமிஸ்ரீஆம் புரதமாயிது: கீர்த்திமிவ தே II

என் தாயே, கஜாசுரனின் கும்பத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெண் முத்துகளை மாலையாக்கி மார்பில் அணிந்தவளே, பளிங்கு போல் வெண்மை கொண்ட அவை கோவைப்பழத்தை போன்ற உன் அதரத்தின் சிவந்த நிறத்தை பிரதிபலிக்கிறது. முப்புரம் அழித்த பரமசிவனுடைய பிரதாபத்தோடு கலந்த கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உனது கொடிபோன்ற ஹாரத்தை தாங்குகிறது.

तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयतः पयःपारावारः परिवहति सारस्वतमिव ।
दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत् कवीनां प्रौढानामजनि कमनीयः कवयिता ॥ 75

Twa stanyam manye dharanidhara kanye hridhayatha Paya paraabhaara parivahathi saaraswathamiva
Dhayavathya dhattham dravida sisu raaswadhya thava yat Kaveenam proudana majani kamaniya kavayitha 75

75 தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத: பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத் கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா: 75
”மலையரசன் பெண்ணே ! உண்ணாமுலையாளே , அபீத ப்ரஹத் குஜாம்பாளே , உன்னுடைய முலைப்பால் ஹ்ரு தயத்திலிருந்து உதித்த அம்ருதப்பிரவாஹம். வாக்தேவதையான ஸரஸ்வதியே அப்படிப்பட்ட உருவம் கொண்டு வந்தது போல் வெள்ளை வெளேரென்று பெருகிறது” என்கிறார் சங்கரர். ஏனென்றால் கருணை ததும்பும் உன்னால் அளிக்கப்பட்ட உன்னுடைய பாலை அருந்திய திராவிட சிசு, ஞான சம்பந்தன், உன் ஞானப்பாலை சீர்காழியில் பருகியவனாயிற்றே. அவன் தலைசிறந்த கவிஞ னாக உள்ளங்கவர் பக்தி தேவார பதிகங்களை வழங்கியுள்ளானே”.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *