SOUNDHARYA LAHARI 57/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 57/103 – நங்கநல்லூர் J K SIVAN

57 பூரண நிலவொளி அம்பாளின் கருணை.

दृशा द्राघीयस्या दरदलितनीलोत्पलरुचा दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे।
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः॥

Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata Vane va harmye va sama-kara-nipaatho himakarah

த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர: 57

ஜெகதீஸ்வரி, தாயே, மங்களஸ்வரூபியே ! தீர்க்கமான பார்வை கொண்டவளே, மொட்டவிழ்ந்த தாமரைக் கண்ணாளே , ன உன் கடைக்கண் பார்வே எங்கோ வெகு தூரத்தில் உன்னை வணங்கி நிற்கும் பரம ஏழையாகிய என் மீதும் படவேண்டு. என்னை உன் கூட கருணையால் ரக்ஷிக்கவேண்டும். அதுவே பெரும் செல்வந்தனாக என்னை மாற்றிவிடும். இதனால் உனக்கு என்னம்மா நஷ்டம்? சந்திரனைப் பார், அவனது பால் நிலவொளி ஆளில்லாத காட்டிலும், அலைகள் ஓயாத பெரும் கடலிலும் மக்கள் மலிந்த நாட்டிலும், மாளிகைக்குள்ளும் சமமாகவே பொழிகிறதே. என்ன பாரபக்ஷம் இருக்கிறது அதில்?. அதனால் சந்திரனுக்கு ஏதாவது நஷ்டம் உண்டா, சொல்?” என்கிறார் சங்கரர்.

அம்பாளைத் தேடி எங்கும் போகவேண்டாம்? அவள் எங்கும் நிறைந்தவள். தாயின் கருணை என்றும் எப்போதும் உண்டு.
பார்வையாலேயே உலகாள்பவள். அம்பாளை வேண்டும்போது ஏன் சங்கரர் சந்திரனை நினைக்கிறார்? சந்திரனிடம் உள்ள 16 கலைகளும் அம்பாளிடம் உண்டு. அவள் பிறைசூடி. சந்திரனின் குளுமை அம்பிகையின் கருணைத் தன்மை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *