VISWANAATHAASHTAKAM – J K SIVAN

காசி விஸ்வநாதாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்.

காசிக்குப் போகிறவன் சந்நியாசி மட்டும் இல்லை. ஒவ்வொரு ஹிந்துவும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க விரும்புவது காசி க்ஷேத்ரம். அங்கே மரணத்தைத் தழுவ எண்ணற்றோர் சென்று காத்திருக்கிறார்கள். காசியில் மரணம் நேராக மோக்ஷத்தை தரும் என்ற நம்பிக்கை. காசி விஸ்வநாதன் மோக்ஷ காரகன். இந்த எட்டு ஸ்லோகங்களும் ஆதிசங்கரரின் அற்புதமான எத்தனையோ ஸ்தோத்ரங்களில் சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. வருணா, அஸி என்ற இரு கங்கை உபநதிகளின் சங்கமமாக உள்ள காசி க்ஷேத்ரம் வாரணாசி என்ற பெயரை சமஸ்க்ரிதத்திலும் பெனாரஸ் benares என்ற வெள்ளைக்காரன் வாயில் நுழையாத பெயரோடும் பிரபலமானது.

1. गङ्गा तरङ्ग रमणीय जटा कलापं गौरी निरन्तर विभूषित वाम भागम् ।
नारायण प्रियमनङ्ग मदापहारं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥१॥

gaṅgā taraṅga ramaṇīya jaṭā kalāpaṃ gaurī nirantara vibhūṣita vāma bhāgam .
nārāyaṇa priyamanaṅga madāpahāraṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..1..

கங்கா தரங்க ரமணீய ஜடா கலாபம் கௌரீ னிரம்தர விபூஷித வாம பாகம்
நாராயண ப்ரியமனம்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 1 ||

ஹே, மனமே விஸ்வநாதனைப் பாடு. வாரணாசியில் கங்கையின் குளிர்ந்த நீரில் நனைந்த விரித்த செஞ்சடை யாட நிற்கும் பிரபஞ்ச நாயகன், கௌரியை தனது இடது பாகத்தில் அர்த்தநாரியாக கொண்டவன், நாராயணனின் ப்ரேமைக்கு பாத்ரமானவன் மன்மதனின் கர்வத்தை அழித்தவனான விஸ்வநாதனை நினை.

2. वाचामगोचरमनेक गुण स्वरूपं वागीश विष्णु सुर सेवित पाद पीठम् ।
वामेन विग्रहवरेण कलत्रवन्तं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥२॥

vācāmagocaramaneka guṇa svarūpaṃ vāgīśa viṣṇu sura sevita pāda pīṭham .
vāmena vigrahavareṇa kalatravantaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..2..

வாசாமகோசரமனேக குண ஸ்வரூபம் வாகீஶ விஷ்ணு ஸுர ஸேவித பாத பத்மம்
வாமேண விக்ரஹ வரேன கலத்ரவம்தம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 2 ||

வாரணாசி க்ஷேத்ர நாயகன் விஸ்வநாதன் நற்குணங்களின் இருப்பிடம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவன். ப்ரம்மா விஷ்ணு இந்திராதி தேவர்கள் பூஜிக்கும் திருவடிகளைக் கொண்டவன். இடது பாகத்தில் உமையை அர்த்த நாரியாக அழகிய கோலம் கொண்டவன், விஸ்வநாதனை வணங்கு மனமே.

3. भूताधिपं भुजग भूषण भूषिताङ्गं व्याघ्राजिनाम्बरधरं जटिलं त्रिनेत्रम् ।
पाशाङ्कुशाभय वरप्रद शूलपाणिं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥३॥

bhūtādhipaṃ bhujaga bhūṣaṇa bhūṣitāṅgaṃ vyāghrājināmbaradharaṃ jaṭilaṃ trinetram .
pāśāṅkuśābhaya varaprada śūlapāṇiṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..3..

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாம்கம் வ்யாக்ராம்ஜினாம் பரதரம், ஜடிலம், த்ரினேத்ரம்
பாஶாம்குஶாபய வரப்ரத ஶூலபாணிம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 3 ||

வாரணாசி உறை விஸ்வநாதன் லோகநாதன், நாகங்களை ஆபரணமாக கொண்டவன். புலித்தோலை அரைக் கசைத்தவன் ருத்ராக்ஷ ஜடா முடி தாரி, த்ரிநேத்ரன், சூலாயுதன் , பாசாங்குசன், கேட்கும் வரம் தருபவன். உன்னை நமஸ்கரிக்கிறேன் விஸ்வநாதா.

4. शीतांशु शोभित किरीट विराजमानं भालेक्षणानल विशोषित पञ्चबाणम् ।
नागाधिपा रचित भासुर कर्णपुरं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥४॥

śītāṃśu śobhita kirīṭa virājamānaṃ bhālekṣaṇānala viśoṣita pañcabāṇam .
nāgādhipā racita bhāsura karṇapuraṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..4..

4. ஸீதாம்ஶு ஶோபித கிரீட விராஜமானம் பாலேக்ஷணாதல விஶோஷித பம்சபாணம்
னாகாதிபா ரசித பாஸுர கர்ண பூரம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 4 ||

வாரணாசி நாயகன் விஸ்வநாதன் , ஸர்வ லோக ரக்ஷகன், பிறைச் சந்திரனை சிரத்தில் அழகாக அணிந்த சந்திரசேகரன், நெற்றிக் கண்ணால் மன்மதனை தீக்கிரையாக்கியவன். சர்ப்பங்களை காதணியாக , குண்டலமாகக் கொண்டவன். விஸ்வநாதா. உன்னை என் மனம் நாடுகிறது. நமஸ்கரிக்கிறேன்.

5. पञ्चाननं दुरित मत्त मतङ्गजानां नागान्तकं दनुज पुङ्गव पन्नगानाम् ।
दावानलं मरण शोक जराटवीनां वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥५॥

pañcānanaṃ durita matta mataṅgajānāṃ nāgāntakaṃ danuja puṅgava pannagānām .
dāvānalaṃ maraṇa śoka jarāṭavīnāṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..5

5. பஞ்சானனம் துரித மத்த மதம்கஜானாம் னாகாம்தகம் தனுஜ பும்கவ பன்னாகானாம்
தாவானலம் மரண ஶோக ஜராடவீனாம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 5 ||

நமக்குள்ளே உருவாகும் புலன் உணர்ச்சிகள் எனும் பாப ஜந்துக்கள், பெரிய பாப யானைகளையெல்லாம் அடக்கி ஆளும் சிம்ம ராஜா, வாரணாசி வேந்தன் விஸ்வநாதன், நம்முள் தோன்றும் தீய சக்திகள் எனும் ராக்ஷஸ சர்ப்பங்களை வேட்டையாடிக் கொல்லும் கருடன் விஸ்வநாதன். முதுமை, துக்கம், பயம், மரணமெனும் அடர்ந்த வனத்தை கொளுத்திப் பொசுக்கும் காட்டுத் தீ தான் விஸ்வநாதன். காசிவிஸ்வநாதா உனக்கு அநேக கோடி நமஸ்காரம்.

6. तेजोमयं सगुण निर्गुणमद्वितीयम्_आनन्द कन्दमपराजित मप्रमेयम्
नागात्मकं सकल निष्कलमात्म रूपं । वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥६॥

tejomayaṃ saguṇa nirguṇamadvitīyam_ ānanda kandamaparājita maprameyam
nāgātmakaṃ sakala niṣkalamātma rūpaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham ..6..

6. தேஜோமயம் ஸகுண னிர்குணமத்விதீயம் ஆனம்த கம்தமபராஜித மப்ரமேயம்
னாகாத்மகம் ஸகல னிஷ்களமாத்ம ரூபம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 6 ||

ஆஹா, என்ன ஒரு ஆனந்தமான ஒளிமயம், ஞானப்பிரகாசம், சகல நற்குணங்களின் களஞ்சியம், எல்லாம் ஒன்றேயான அத்வைத சாகரம், கருணை வெள்ளம், எல்லையற்ற பேரன்பு கொண்ட பாசம், ஆத்ம ஸ்வரூபம், சிதானந்த பேரொளி, உன்னை வணங்குகிறேன் காசி விஸ்வநாத ப்ரபு .

7आशां विहाय परिहृत्य परस्य निन्दां पापे रतिं च सुनिवार्य मनः समाधौ ।
आदाय हृत्कमल मध्य गतं परेशं वाराणसी पुरपतिं भज विश्वनाथम् ॥8॥

āśāṃ vihāya parihṛtya parasya nindāṃ pāpe ratiṃ ca sunivārya manaḥ samādhau .
ādāya hṛtkamala madhya gataṃ pareśaṃ vārāṇasī purapatiṃ bhaja viśvanātham .7

7.ஆஶாம் விஹாய பரிஹ்றுத்ய பரஶ்ய னிந்தாம் பாபே ரதிம் ச ஸுனிவார்ய மனஸ்ஸமாதௌ
ஆதாய ஹ்றுத்-கமல மத்ய கதம் பரேஶம் வாராணஸீ புரபதிம் பஜ விஶ்வனாதம் || 7 ||

எவ்வுயிரிடத்தும் குறை காணாது பேரருள் தரும் பரமா, ஆசா பாசங்களை வேரறுக்கும் சக்தி ஸ்வரூபா, தீமையால்,
தீங்கினால் விளையும் சுகத்தை, இன்பத்தை விரும்பச் செய்யாதவனே, மனதை தியானத்தில் முழுமையாக ஈடுபடுத்த அருள்புரியும் ஆத்ம நாதா, அழகிய செந்தாமரை ஹ்ருதயம் படைத்தவனே, உன்னை மனதார நமஸ்கரிக்கிறேன்.

8. रागादिदोषरहितं स्वजनानुरागं वैराग्यशान्तिनिलयं गिरिजासहायम् ।
माधुर्यधैर्यसुभगं गरलाभिरामं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥७॥

Raaga-[A]adi-Dossa-Rahitam Svajana-Anuraagam Vairaagya-Shaanti-Nilayam Girijaa-Sahaayam |
Maadhurya-Dhairya-Subhagam Garala-Abhiraamam Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham |8

ராகாதிதோஷரஹிதம் ஸ்வஜநாநுராகவைராக்யசாந்திநிலயம் கிரிஜாஸஹாயம் |
மாதுர்யதைர்யஸுபகம் கரளாபிராமம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௮||

உலகில் மாந்தரை அலைக்கழிக்கும் ராக த்வேஷங்களுக்கு அப்பாற்பட்ட பேரானந்தமே , பக்த வத்சலா, வைராக்யத்தின் மூல காரணமே, சக்தியே துணையான பரமேஸ்வரா, சாந்தஸ்வரூபி, கடுமையான ஹாலஹால நஞ்சை நெஞ்சில் நிறுத்தி நிலையாக வைத்துக் கொண்டிருக்கும் நீலகண்டா , காசி விஸ்வநாதா, உனக்கு அநேக கோடி ஸாஷ்டாங்க நமஸ் காரங்கள்.

9 वाराणसी पुरपतेः स्तवनं शिवस्य व्याख्यातमष्टकमिदं पठते मनुष्यः
विद्यां श्रियं विपुल सौख्यमनन्त कीर्तिं सम्प्राप्य देहविलये लभते च मोक्षम् ॥९॥

vārāṇasī purapateḥ stavanaṃ śivasya vyākhyātamaṣṭakamidaṃ paṭhate manuṣyaḥ
vidyāṃ śriyaṃ vipula saukhyamananta kīrtiṃ samprāpya dehavilaye labhate ca mokṣam ..8

வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம் ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே ச மோக்ஷம் ||

வாரணாசியில் உலகோர்க்கு முக்திதரும் ஈஸா, விஸ்வநாதா, உன்னைத் துதிக்கிறேன். இந்த எட்டு ஸ்லோகங்களால் உன்னை பஜிக்கும் பக்தர்களுக்கு ஞானம், அறிவு, புத்தி தெளிவு, வளமை, சதானந்தம், பேர், புகழ், சகலமும் கிடைக்கும் என்ற பலஸ்ருதியோடு இந்த காசி விஸ்வநாதாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *