SOUNDHARYA LAHARI 54/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 54/103  –  நங்கநல்லூர்  J K  SIVAN

पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥

Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay’eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham.

பவித்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய  தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:
நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும் த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம்   54

ஸௌந்தர்ய  லஹரி படித்து   எழுதும்போது  ஒரு அலாதி சுகம்.  ஆஹா  எவ்வளவு அற்புதமான  தூய பக்தி உள்ளம் கொண்டவர்  ஆதி சங்கரர். எவ்வளவு அருமையாக  அம்பாள் தரிசனம் பெற்று அதை நமக்கு ஆனந்தாமிர்தமாக 103 ஸ்லோகங்களில்  அள்ளித்தருகிறார்  என்று உணர்ந்து அவரை சாஷ்டாங்கமாக வணங்கச் செய்கிறது.
”அம்பே, லலிதா தேவி,  பசுபதிக்கு   ஸ்வாதீனமான  அன்பு  நிறைந்த ஹ்ருதயத்தை படைத்தவளே ! அம்மா  உனது நயனங் களை எப்படி வர்ணிப்பேன்?    அவை  தயை, கருணை நிறைந்த  அழகிய,  சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக  இருக்கிறதே.    இது எதை நினைவூட்டுகிறது தெரியுமா?  ப்ரவாஹமாக  மேற்கு நோக்கிச் செல்வதும் சிவப்பு  நிறம் கொண்டதுமான  சோணபத்ரா  என்ற  நதியும்,  பனி உருகி வெள்ளை வெளேரென்று குளிர்ந்த சமுத்திரம் போன்ற  வெண்ணிற கங்கை நதியும், சூரிய  புத்திரியாகவும்   இயற்கையிலேயே கறுப்பு வர்ணம் கொண்ட  யமுனா நதியுமாகிய   மூன்று புண்ய புண்ணிய நதிகளும்  ஒன்று சேர்ந்த ஸங்கமமாகி  பாவத்தையெல்லாம் போக்கும் ப்ரயாகையாக காட்சி அளிக்கிறது.   ஓஹோ!   எங்கள்  பாபத்தை எல்லாம் அழித்து  புனிதமாக்குவதற்காக  அல்லவோ உன் பார்வை இருக்கவேண்டும் என்பதற்காக  நீ அமைத்துக்கொண்ட  மூன்று நிற கண்களோ  உன்னுடையவை”
மேலே சொன்ன மூன்று நிற கண்கள் உள்ளார்த்தமாக குண்டலினி சக்தி தியானத்தால் ஏற்படும் நன்மையை குறிக்கிறது.  குண்டலினி நாடி களான   இட, பிங்கள, சுஷும்னா  தான் மூன்று நதிகளாக சொல்லப்படுகிறது.   இந்த மூன்று நாடிகளும்  ஆஞ்ஞா சக்ரத்தில் இணைகிறது. அதை தான் சங்கமம் என்கிறார்.  அதுவே  மூன்றாவது கண். மஹான்கள், ரிஷிகள், துறவிகள் எல்லோரும் இந்த தியானத்தில்  முக்தி பெற விரும்பி அதை அனுபவிப்பவர்கள். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *