SOUNDHARYA LAHARI 52/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 52/103 நங்கநல்லூர் J K SIVAN

52 அம்பாள் நயன ப்ரபாவம்

गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती पुरां भेत्तुश्चित्तप्रशमरसविद्रावणफले ।
इमे नेत्रे गोत्राधरपतिकुलोत्तंसकलिकेतवाकर्णाकृष्टस्मरशरविलासं कलयतः ॥ ५२॥

Gathe karnabhyarnam garutha iva pakshmani dhadhati Puraam bhetthus chitta-prasama-rasa-vidhravana-phale;
Ime nethre gothra-dhara-pathi-kulottamsa-kalike Tav’akarn’akrishta-smara-sara-vilasam kalayathah.

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ புராம் பேத்து-ஶ்சித்தப்ரஶம-ரஸ-வித்ராவண பலே |
இமே னேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே தவாகர்ணாக்றுஷ்ட ஸ்மரஶர-விலாஸம் கலயதஃ|| 52 ||

தாயே, பராசக்தி, ஹைமவதி , ஹிமவான் மகளே, உன் இரு கண்கள் விசாலமாக காது வரை நீண்டவை என்பதே கண்ணுக்கு ஒரு தனி அழகு. அவற்றைப் பார்க்கும்போது கூரான அம்பு ஒரு முனையிலும் அதன் இன்னொரு முனையில் இறகுகள் கட்டியிருப்பதும் போல உன் கூர்மையான கண்களின் இன்னொரு முனையில் அழகிய உன் இமைகளும் அதில் வரிசையாக இருக்கும் நுண்ணிய மயிரிழைகளும் இறகுபோல காட்சி யளிக்கிறது. இந்த கண்கள் தானே திரிபுரமும் எரித்த சிவபெருமானுடைய மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அதில் ஜெயித்தவை. மன்மதனின் பாணத்தை விட அதிக காந்த சக்தி வாய்ந்தவை. அம்மா, உன் கண்ணழகைத் தியானம் செய்வதால் ஹ்ருதயத்தில் உள்ள காமச் சிக்கல் எல்லாம் அறுபட்டு ஒழியும் என்பது ஸர்வ நிச்சயம்.

குரு சிஷ்யனுக்கு அருள் பாலிப்பதில் நயன தீக்ஷை என்று ஒரு வகை. கண்ணால் பார்வை மூலமே குரு அனைத்து சக்தி களையும் ஞானத்தையும் சிஷ்யனுக்கு அளிப்பது. அம்பாளின் நயனங்கள் பக்தனின் பாபங்களை விரட்டி அவனுக்கு மோக்ஷம் தர வல்லவை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *