ATHMA VIDHYAA VILAASAM 26-30 J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 26-30 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

कुवलयविकासकारणमज्ञानध्वान्तकौमुदीप्रज्ञः । शुद्धो मुनीन्द्रचन्द्रः सुरसेव्ये लसति विष्णुपदे ॥ २६॥
kuvalayavikAsakAraNamaj~nAnadhvAntakaumudIpraj~naH |shuddho munIndrachandraH surasevye lasati viShNupade || 26||
குவலயவிகாஸகாரணமஜ்ஞாநத்⁴வாந்தகௌமுதீ³ப்ரஜ்ஞ: । ஶுத்³தோ⁴ முநீந்த்³ரசந்த்³ர: ஸுரஸேவ்யே லஸதி விஷ்ணுபதே³ ॥ 26॥

புரியும்படியாக சொல்வதானால், அத்வைத சித்தி என்றால் இயல்பாக தியானத்தில் ஈடுபடுவது. ஸஹஜ சமாதி எனப்படும் முக்தி நிலை இயல்பான தேஹ நிலையைக் கடந்தது. கைவல்யம் எனப்படுவது ஆனந்த நிலையில் ப்ரம்மத்தோடு ஒன்றிணைவது. இப்படிப்பட்ட பக்தன் சாதகன் அறியாமையை விலக்கியவன். தேவாதி தேவரெல்லாம் வணங்குபவன். வைகுண்டவாசி கைலாசவாசி என போற்றப்படுபவன்.

स्वानन्दामृतसेकैरान्तरसंतापसंततिं शमयन् । चित्रमचञ्चलवृत्तिश्चिद्व्योमनि भाति योगिवर्यघनः ॥ २७॥
svAnandAmR^itasekairAntarasa.ntApasa.ntatiM shamayan | chitramacha~nchalavR^ittishchidvyomani bhAti yogivaryaghanaH || 27||
ஸ்வாநந்தா³ம்ரு’தஸேகைராந்தரஸந்தாபஸந்ததிம் ஶமயந் । சித்ரமசஞ்சலவ்ரு’த்திஶ்சித்³வ்யோமநி பா⁴தி யோகி³வர்யக⁴ந: ॥27

இப்படிப்பட்ட ப்ரம்மஞானி விரல் பட்டால் கூட ஞானம் மற்றவனுக்கு கிட்டும். பாபம் அகலும். பார்வை பட்டாலே அஞ்ஞானம் அழியும்.

सुमनःसौरभमञ्जुलसञ्चारनिवारिताखिलश्रान्तिः । संयमिचारुसमीरो विहरत्यानन्दसंविदारामे ॥ २८॥
sumanaHsaurabhama~njulasa~nchAranivAritAkhilashrAntiH | sa.nyamichArusamIro viharatyAnandasa.nvidArAme || 28||
ஸுமந:ஸௌரப⁴மஞ்ஜுளஸஞ்சாரநிவாரிதாகி²லஶ்ராந்தி: । ஸம்யமிசாருஸமீரோ விஹரத்யாநந்த³ஸம்விதா³ராமே ॥ 28॥

ஏதாவதொரு விஷயத்தில் மனம் ஆழ்ந்து ஈடுபட்டால், அதனால் அதற்கு அளவற்ற இன்பமும் துன்பமும் நிகழும். இப்படி ஈடுபடும்போது அது உலக ஈர்ப்புகளின் சம்பந்தமாக இருந்தால் அவன் அடையும் இன்பம் நிரந்தரமல்ல. பொய்யான சுகம். ப்ரம்ம ஞானியின் வருகையால், அவனது இருக்கையால், ஞான ஒளி எங்கும் பரவி தீய ஈர்ப்பு சக்திகள் ஓடிவிடும். ஆத்ம வெளியில் நந்தவனத்தில் உலவும் ப்ரம்ம ஞானியின் தோற்றமே அவனைச் சுற்றியுள்ள படுதிகளில் சுகந்தத்தை அளிக்கிறது. நறுமணம் வீசும் தென்றலில் ஞானி ஆனந்தமாக ஒளிவீசி நடக்கிறான்.

निःश्रेयससरसफले निर्मलविज्ञानपल्लवमनोज्ञे । वीतभये विपिनतले यतिशितिकण्ठो विभाति कोऽप्येकः ॥ २९॥
niHshreyasasarasaphale nirmalavij~nAnapallavamanoj~ne | vItabhaye vipinatale yatishitikaNTho vibhAti ko.apyekaH || 29||
நி:ஶ்ரேயஸஸரஸப²லே நிர்மலவிஜ்ஞாநபல்லவமநோஜ்ஞே । வீதப⁴யே விபிநதலே யதிஶிதிகண்டோ² விபா⁴தி கோऽப்யேக: ॥ 29॥

பயம் எனும் உணர்ச்சி தான் ஒருவன் மனதில் அவனைத் தவிர மற்ற எல்லா எண்ணங்களையும் நிரப்புகிறது. ஆத்ம ஞானம் தான் உண்மையான விஞ்ஞானம். அங்கே ஆத்மாவாகிய அவனைத் தவிர வேறு எந்த ஜீவனுமில்லை. அந்த ஆனந்தமய நந்தவனத்தில் வண்ணமயில்கள் ஆடி உலவும். பயம் என்பதே என்ன என்று தெரியாமல் போகும். ஞானிக்கோ அவனை அணுகியவனுக்கோ பயம் என்பதே நெருங்காது. நீலகண்டன் போல் அவன் நிரந்தரமானவன். ஞான ஆரண்யத்தில் முக்தி பழம் நிரம்பி ஆனந்த மலர்கள் வரவேற்கும்போது நீலமயில்கள் ஏன் அங்கே ஆடாது?.

निःसारभुवनमरुतलमुत्सार्यानन्दसाररसपूर्णे । वरसरसि चिन्मयेऽस्मिन्परहंसः कोऽपि दीव्यति स्वैरम् ॥ ३०
niHsArabhuvanamarutalamutsAryAnandasArarasapUrNe |varasarasi chinmaye.asminparaha.nsaH ko.api dIvyati svairam || 30
நி:ஸாரபு⁴வநமருதலமுத்ஸார்யாநந்த³ஸாரரஸபூர்ணே । வரஸரஸி சிந்மயேऽஸ்மிந்பரஹம்ஸ: கோऽபி தீ³வ்யதி ஸ்வைரம் ॥ 30

கானல் நீர் நம்மை மாயையில் எதிரே நீர் ஓடுவதைப் போல திகைக்க வைக்கிறது. ஞானியை இந்த மாயை அணுகாது.ப்ரம்ம ஞான அம்ருதத்தைப் பருகுவனுக்கு கானல் நீர் எதற்கு? உலகே பாலைவனம் என்று உணர்ந்தவன் ஞான ஏரியில் நீந்துகிறான். ஸம்ஸார சாகரத்தில் நம்மைப் போல் சிக்கிக்கொள்ளாத சுகவாசி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *