SOUNDHARYA LAHARI 47/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 47/103 – நங்கநல்லூர் J K SIVAN

भ्रुवौ भुग्ने किंचिद्भुवनभयभङ्गव्यसनिनि त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम् ।
धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः प्रकोष्ठे मुष्टौ च स्थगयति निगूढान्तरमुमे ॥ ४७॥ 47

Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye’tara-kara-grhitam rathipateh Prakoshte mushtau ca sthagayati nigudha’ntharam ume 47

ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன பய பங்க வ்யஸநிநி த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர் மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே: ப்ரகோஷ்ட்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே 47

உமாதேவி, ஜகன்மாதா, உலக மாயை பயத்தைப் போக்குவதில் நிகரற்றவளே, பக்தர்களுக்கு கருணை புரிபவளே.உன் முகத்தை பார்க்கும்போது பக்தன் கண்ணை முதலில் கவர்வது வளைந்த வில் போன்ற உன்னுடைய இரு புருவங்கள் தான் அம்மா. வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற இரு கண்களால் நாண் பூட்டி, இடதுகையால் பிடிக்கப் பட்டு முழங்கை யாலும் விரல் முஷ்டியாலும் மறைக்கப் பட்டதால் வில்லின் மத்தியபாகம் தெரியாததாக இருக்கும் மன்மதனுடைய கரும்பு வில் தான் உன் புருவங்களோ என்று எனக்கு தோன்றுகிறது தாயே.

”உமா என்று உன்னை நாவினிக்க அழைக்கும்போது, லலிதா ஸஹஸ்ரநாமம் 633 வது நாமம் ”உமா ” நினைவுக்கு வருகிறதம்மா.” நீ உமா, மஹேஸ்வர பத்னி. உமாமஹேஸ்வரி, ஹிமவான் புத்ரி. பர்வத ராஜகுமாரி. ஐந்து வயதில் பரமேஸ்வரனை அடைய தவம் புரிந்தவள் என்று உணரும்போது மனம் மகிழ்கிறது. ஓம் தான் உமா. A U M தான் UMA .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *