SOUNDHARYA LAHARI 46/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி  46/103 –   நங்கநல்லூர் J K  SIVAN

46. அஷ்டமி சந்த்ரிகா .

ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव य- द्द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम्

।विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥ ४६॥

Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam;
Viparyasa-nyasad ubhayam api sambhuya cha mithah Sudhalepa-syutih pareenamati raka-himakarah.லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்  த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்
விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:  ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46

இந்த  ஸ்லோகத்தில் ஒரு  ரஹஸ்யத்தை வைத்திருக்கிறார்  ஆதி சங்கரர்.  ஷோடசி மந்த்ர ஜெபத்தில்  ஸஹஸ்ரா ரத்தையும்  அதை தாண்டியும்  தியானம் செய்யும்போது  கிடைக்கும் அனுபவம் .அம்பாள் முகம் பூரண சந்திரன் போல் புலப்படும். குளிர்ந்த அம்ரிதம் போன்ற ஞானம் கருணை அதில் பெருகும்.   பிறைமதியின் இரு நுனிகள் தொடுவது போல் இருப்பது சிவ  சக்தி ஸ்வரூபம். சிவன்  ஸஹஸ்ராரத்தில்  பரா பிந்துவில் உறையும்போது அம்பாள் எனும் சக்தி நுண்ணிய குண்டலினியில்  மேல் நோக்கி  நகர்ந்து ஸஹாஸ்ராரத்தில் சிவனோடு இணைகிறாள்.  இதனால் சக்தி உபாசகன் பரம யோகியாகிறான்.

மேலே சொன்ன ஸ்லோகத்தின்  விளக்கம்:   
‘அம்பிகே, உன்னுடைய  வதனம் பூர்ண சந்திரன். உன்னுடைய  அகன்ற நெற்றி ஞான பீடம். அதன் பிரகாசத்தை உன் சிரத்தில் நீ சூடிக்கொண்டிருக்கும்  கிரீடம்  பாதி மறைத்து விடுகிறது.  சந்திர கலையில் பாதி தானே தெரிகிறது. கிரீடத்தை கொஞ்சம் உயர்த்தி  அணிந்து கொண்டால், அதன் ஒளியும்  உனது ஞானபீட  நெற்றியின் ஒளியும் ஒன்று சேர்ந்தால் அடடா  அம்ருதம் ஒழுகும் பூர்ண சந்திரனை முழுமையாக  தரிசிக்கமுடியுயுமே என்று தோன்றுகிறது. அம்பாளுடைய நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வளைந்து அழகாக  உன் நெற்றி அமைந்துள்ளது என்கிறார்.
“அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிக ஸ்த்தல சோபிதாயை நம:”
அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்ட பராசத்தி உனக்கு அநேக கோடி நமஸ்காரம் தாயே. .
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *