SOUNDARYALAHARI 30/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி  30/103  –  நங்கநல்லூர்  J K  SIVAN 
 

30. அம்பாளின் ஸ்ரீ சக்ர தேவதைகள் 

 
होद्भूताभिर्घृणिभिरणिमाद्याभिरभितो निषेव्ये नित्ये त्वामहमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिनयनसमृद्धिं तृणयतो महासंवर्ताग्निर्विरचयति निराजनविधिम् ॥ ३०॥
svadēhōdbhūtābhirghṛṇibhiraṇimādyābhirabhitō niṣēvyē nityē tvāmahamiti sadā bhāvayati yaḥ ।
kimāścharyaṃ tasya trinayanasamṛddhiṃ tṛṇayatō mahāsaṃvartāgnirvirachayati nirājanavidhim ॥ 30 ॥

ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணிபிர் அணிமாத்யாபி ரபிதோ நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி 
ஸதா பாவயதி ய:
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸம்ருத்திம் த்ருணயதோ மஹாஸம்வர்த்தாக்னிர் விரசயதி நீராஜன விதிம்.
              

இந்த  ஸ்லோகத்தில்  ஆதி சங்கரர்  அம்பாள்  எந்த  உபாசகன் தேவியை  தனது ஆத்மாவாகவே பாவித்து (bha) பூஜிக்கிறானோ அவனது மேன்மை, மஹிமையை  அங்கீகரித்து,   அவனை சாக்ஷாத்  பரமேஸ்வரனுக்கு இணையாக  உலகம் போற்றும்படி அவனை உயர்த்தும்  என்று  விவரிக்கிறார். அத்தகைய  உபாசகனை அக்னியே  கற்பூர ஹாரத்தி எடுத்து பூஜிப்பான்.  அப்படிப்பட்ட உபாசகனுக்கு  உன்னைத்தவிர  வேறெந்த தெய்வம் நினைவில் இல்லையே  அம்மா,  என்கிறார். 
லலிதாம்பாள் உறையும் ஸ்ரீ சக்ரத்தில் அவளைச்சுற்றி எண்ணற்ற  சேடிகள். உதவியாளர்கள். ஒன்பது நவாவரண  கோட்டைச் சுவர்கள் விவரிக்கப்பட்டுள்ளது. 
 
 முதல்  ஆவரணத்துக்கு  பூபுரம், பூ க்ரஹம்  என்றும் த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்றும் பெயர். முதல் கோட்டையில்  மூன்று மதில் சுவர்கள். முதல் சுவற்றின் காவலாளியாக  10 சித்தி தேவிகள். அவர்கள் யார் தெரியுமா?  அணிமா,லகிமா, மஹிமா, ஈசித்வா,  வஸித்வா,  ப்ராகாம்யா, புக்தி, இச்சா, ப்ராப்தி, சர்வகாமா.  நமக்குத் தெரிந்து  எட்டு  தேவிமார்களைத் தான்  அஷ்டமா சித்தி என்போம். .சக்தி உபாசகன் முழு மனதோடு அம்பாளை நேசித்து வணங்கி  பூஜித்தால் அக்னி முதலான தேவர்கள் அவனை உயர்வாக போற்றுகிறார்கள். அவன் மனம் எதிலும் செல்லாமல் அம்பாளை மட்டுமே  துதிப்பதால், பரமேஸ்வரனோ  மோக்ஷமோ கூட  அவனுக்கு பெரிதில்லை.  அவன் விரும்பாமலேயே, கேட்காமலேயே அவனுக்கு  முக்தியை லலிதாம்பாள்  தருவாள்.
அம்பாள் சரீரத்திலிருந்து ஒளிவீசும் கிரணங்கள் சக்தி வாய்ந்தவை.  ஒன்பது ஆவரணங்களிலிருந்தும் தேவதைகள்,சக்தி உபதேவதைகள் அருள்வதை முன்பே  விளக்கி இருந்தாலும் குறிப்பாக சுருக்கமாக  ஸ்ரீ சக்ர அமைப்பு பற்றி ஒரு விளக்கம்:
 
1 . முதல்  மூன்று  கட்டங்கள் பூ க்ரஹம்  என்பவை.அதற்கான  தளபதிகள் தான்  அஷ்டமா சித்திகள் அவர்கள் பெயர்  மேலே கொடுத்துள்ளேன்.
 
2.  இரண்டாவது கட்ட  அதிபதிகளாக அஷ்ட மாதாக்கள் :  ப்ராம்மி, மாஹேஸ்வரி , கௌமாரி  வைஷ்ணவி, வாராஹி,  மாஹேந்த்ரீ சாமுண்டா, மஹாலக்ஷ்மி.
 
3.மூன்றாவது  கட்டத்தின் பத்து  முத்ராக்கள்: ஸர்வ ஸம்க்ஷோ பிணி, ஸர்வ  வித்ராவினி,ஸர்வாகர்ஷிணி,ஸர்வ வசங்கரி, ஸர்வோன் மாதினி, ஸர்வ மஹாங்குசா, ஸர்வ கேசரி, ஸர்வ பீஜா, ஸர்வ யோனி, ஸர்வ த்ரிகாண்டா.

3. பதினாறு தள தாமரையில் பொறுப்பேற்று நிர்வகிக்கும் 6 தேவதைகள் பெயரையும் தெரிந்து கொள்வோம்: காமாகர்ஷிணி, புத்தியாகர்ஷிணி, அஹம்காராகர்ஷிணி, ஸப் தாகர்ஷிணி. ஸ்பர்ஸாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி. ஸ்ம்ரிதிஆகர்ஷிணி,நாமாகர்ஷிணி, பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, ஸரீராகர்ஷிணி .
அஷ்டதள தாமரையின்  எட்டு தேவதைகள்:   அநங்ககுசுமா,  அநங்க மேகலா, அநங்க மந்தனா, அநங்க மதநாதுரா, அநங்க ரேகா, அநங்க வேகினி, அநங்காங்குசா, அநங்க மாலினி.

4.  ஸ்ரீ சக்ர அமைப்பில்  சதுராசரத்தில் உள்ள  14  தேவதைகள்:  ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வ வித்ராவினி,  ஸர்வ ஆகர்ஷிணி, ஸர்வாஹ்லாதினி,ஸர்வ சம்மோஹனி,ஸர்வ ஸ்தம்பினி, ஸர்வ ஜ்ரும்பினி,ஸர்வ  வசங்கரி,ஸர்வ ரஞ்சனி, ஸர்வோமாதினி,ஸர்வார்த்த சாதனி,  ஸர்வ ஸம்பத்திபூரணி, ஸர்வ மந்த்ரமயீ, ஸர்வ த்வந்தாக்ஷயங்கரி.

5.   பஹிர் தசாரத்தில் உள்ள  பத்து  தேவதைகள்:  ஸர்வஸித்தி ப்ரதா, ஸர்வ ஸம்பத்ப்ரதா, ஸர்வ ப்ரியங்கரி, ஸர்வ மங்களகாரிணி, ஸர்வ காமப்ரதா, ஸர்வ சௌபாக்யதாயினி, ஸர்வம்ருத்யுப்ரசமனி, ஸர்வவிக்ன நிவாரணி, ஸர்வாங்க சுந்தரி, ஸர்வதுக்க விமோசனி.
 
6. அந்தர் தசாரத்தில் அமைந்துள்ள  பத்து  தேவதைகள்:  சர்வஞா, ஸர்வ சக்தி, ஸர்வைஸ்வர்யப்ரதா, ஸர்வ ஞானமயி, ஸர்வ வ்யாதி வினாசினி , ஸர்வாதார ஸ்வரூபா, ஸர்வபாபஹரா, ஸர்வானந்தமயி, ஸர்வ ரக்ஷா ஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதபலப்ரதா 

7. அஷ்ட கோணங்களில் காணும்  எட்டு தேவதைகள்: வாஸினி, காமேஸி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேசி,  கௌலினி.

8.த்ரி கோணத்தில் உள்ள  மூன்று தேவதைகள்: காமேஸ்வரி,  வஜ்ரேஸி, பாகமாலா
9. நவாவரணத்தின் மத்தியில்  அலங்கரிக்கும் அம்பாள்:  த்ரிபுரஸுந்தரி .
பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்கள் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

  1. ஸ்ம்ருத்யாகர்ஷிணி, ஸர்வ த்ரிகண்டா,அனங்கமதனா பகமாலா, த்வந்தக்ஷயங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *