SOUNDARYA LAHARI 18/103- J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 18/103 – நங்கநல்லூர் J K SIVAN

18. அருணரூப த்யானம்
காமஜயம்

तनुच्छायाभिस्ते तरुणतरणिश्रीसरणिभिः दिवं सर्वामुर्वीमरुणिमनि मग्नां स्मरति यः ।
भवन्त्यस्य त्रस्यद्वनहरिणशालीननयनाः सहोर्वश्या वश्याः कति कति न गीर्वाणगणिकाः ॥ १८॥

tanuchChāyābhistē taruṇataraṇiśrīsaraṇibhiḥ divaṃ sarvāmurvīmaruṇimani magnāṃ smarati yaḥ ।
bhavantyasya trasyadvanahariṇaśālīnanayanāḥ sahōrvaśyā vaśyāḥ kati kati na gīrvāṇagaṇikāḥ ॥ 18 ॥

தனுச்சாயாபிஸ் தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர் திவம் ஸர்வா முர்வீம் அருணிம நிமக்னாம் ஸமரதிய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத் வன ஹரிண ஶாலீன நயனா ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதிகதி ந கீர்வாணகணிகா:

இந்த ஸ்லோகத்தின் சிறப்பு என்ன தெரியுமா? ஈடு இணை இல்லாத அழகுடைய அம்பாளைப் போலவே அவளை மனமார துதிக்கும் பக்தர்களுக்கும் அற்புதமான வசீகரம் தோன்றி அவர்கள் ஊர்வசி ரம்பை,திலோத்தமை போன்ற தேவலோக அப்ஸரஸ்களுக்கு நிகரான பெண்களால் கவரப்படுவார்கள் என்பது. அம்பாள் அருணனைப் போன்ற இளஞ்சிவப்பு வண்ணமும் தேக காந்தியும் உடையவள். மூன்று லோகத்திலும் எல்லோரும் அவள் அழகில் மயங்காதவர்களே கிடையாது. அவளை தியானம் செய்பவனை பயந்த ஸ்வபாவம் கொண்ட மான் போன்ற மிரளும் அழகிய கண்களை உடைய ஸ்த்ரீகள் எத்தனையோ பேர் வசப்படுத்த முயல்வார்கள் என்பதால் இந்த ஸ்லோகம் ‘ஸ்த்ரீவஸ்யகரம்” என்ற பெயர்கொண்டது.

“ஸ்த்ரிய ஸமஸ்தாஸ் தவ தேவி பேதா:” என்று சொல்லப்படுவதால் எல்லா ஸ்த்ரீகளும் பரதேவதையின் வடிவங்களே. உபாஸகன் அவர்களை அங்ஙனமே கண்டு வணங்குவான். இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த் தத்தை மட்டும் நாம் கவனிக்கவேண்டும். அம்பாளை உபாசிப்பவனை உபாசகனை உலகத்தில் எல்லோ ருக்கும் பிடிக்கும்.

இளஞ்சிவப்பு வர்ணம் தயை, இரக்கத்தை குறிக்கும். குண்டலினியில் மூலாதார சக்ரம் சிவப்பு வண்ணம். உபாசகர்கள் சிந்தூரம் தரித்துக் கொள்வார்கள். ஆழ்ந்த சக்தி தியானம் முகத்தில் ஒரு வினோத அழகை தரும். அதற்கு தேஜஸ் என்று பெயர். அதைக் காண்பவர்கள் உபாசகர்களிடம் மட்டற்ற அன்பும், பரிவும், மரியாதையும் கொண்டு அவர்களை நெருங்கி தரிசித்துக் கொண்டே இருப்பார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *