SOUNDARYA LAHARI 12/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 12/103 நங்கநல்லூர் J K SIVAN

12. சிவஸாயுஜ்யம்

त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चिप्रभृतयः ।
यदालोकौत्सुक्यादमरललना यान्ति मनसा तपोभिर्दुष्प्रापामपि गिरिशसायुज्यपदवीम् ॥ १२॥

tvadīyaṃ saundaryaṃ tuhinagirikanyē tulayituṃ kavīndrāḥ kalpantē kathamapi viriñchiprabhṛtayaḥ ।yadālōkautsukyādamaralalanā yānti manasā tapōbhirduṣprāpāmapi giriśasāyujyapadavīm ॥ 12 ॥

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா தமரலலனா யாந்தி மனஸா தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஶ ஸாய்ஜ்யபதவீம்

பனிமலையரசன் பெண்ணே!,ஹிமவான் எனும் பனி படர்ந்த பர்வத ராஜகுமாரி, பார்வதி தாயே, சகல ஜீவன்களையும் ஸ்ரிஷ்டிக்கும் ப்ரம்மதேவனாலும் உன்னைப்போல் மற்றொரு உருவத்தை சிருஷ்டிக்க முடியாது.
வியாசர் வால்மீகி காளிதாசன் போன்ற ஈடற்ற கவிகளாலும் கூட உன்னழகை முழுமையாக வர்ணிக்க இயலாதே. உனக்கு ஜோடியாக, இணையாக வேறு யாரையும் காட்டவே முடியாதே. தேவ கந்தர்வ கின்னர ஸ்த்ரீகள், ரதி போன்றவர்களும் கூட உன் திவ்ய ஸௌந்தர்ய ரூபத்தை மனதாலும் பெறவோ காணவோ முடியாது. சிவபெருமானோடு ஐக்யமானவளாக தான் நினைத்துப்பார்க்க இயலும். எவ்வளவு காலம் தவம் புரிந்தாலும் உன்னழைகை பெற யாராலும் முடியாத கார்யம். சக்தியை சிவனாக காணவே முடியும் என்பது தான் தத்வம்.
இன்று ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்வோம். பகவத் ப்ரஞை நாலு வகை. அவை ஸாலோக்யம் , (அம்பாளின் விக்ரஹம் , படங்களை வைத்து வழிபடுவது, பூஜை புனஸ்காரம் போன்ற கார்யங்கள்), ரெண்டாவது வகை ஸரூப்யம் , (இதில் சாதகன் பூஜைகளை விட்டுவிட்டு தன்னை அம்பாள் ஸ்வரூபமாக உணர்வது) , சமீப்யம் (சாதகன் அம்பாள் அருகில் செல்வது, அவள் சமீபத்தில் இருப்பது) நாலாவது வகை சாயுஜ்யம் (உபாசகன் அம்பாளோடு இணைவது) எனப்படும். அதைத் தாண்டி கைவல்யம். இதில் உபாசகன் பக்தன் அம்பாளை தன்னுள் கொண்ட சிவனை அடைவது தான் கைவல்யம். படிப்படியாக தான் சாதகன் பக்தியில் முன்னேறவேண்டும். எந்த அளவுக்கு அவன் மனம் பக்தியில், ஆன்மீகத்தில் நிலைத்திருக்கிறது என்பதை பொறுத்து தான் அவன் முன்னேற்றம். குளித்தது விட்டு விபூதி பூசிக்கொண்டால் தான் பக்தி இல்லை. மதம் பேதம் எல்லாம் கடந்த நிலை. மதம், பூஜை தியானம் எல்லாம் ஆதாரம்.
இடைவிடாத தியானம் அம்பாளைத் தவிர வேறெதிலும் மனம் அலையாமல் பிடித்து வைத்துக்கொள்ள உதவும்.
ஸௌந்தர்ய லஹரியில் ஒவ்வொரு ஸ்லோகமும் இதெல்லாம் நமக்கு அற்புதமாக ஸ்லோக ரூபத்தில் கற்பிக்கிறது. ஆதி சங்கரருக்கு நமஸ்காரம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *