SOUNDARYA LAHARI 19/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 19/103 நங்கநல்லூர் J K SIVAN

19. காமகளா த்யானம்- சிவஞானப்ரதாயினி

मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम् ।
स सद्यः संक्षोभं नयति वनिता इत्यतिलघु त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम् ॥ १९॥

mukhaṃ binduṃ kṛtvā kuchayugamadhastasya tadadhō harārdhaṃ dhyāyēdyō haramahiṣi tē manmathakalām ।
sa sadyaḥ saṅkṣōbhaṃ nayati vanitā ityatilaghu trilōkīmapyāśu bhramayati ravīndustanayugām ॥ 19 ॥

முகம் பிந்தும் க்ருத்வா குசயுக மதஸ் தஸ்யததோ ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு த்ரிலோகீ மப்யாஶு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் 19

‘க்லீம்’ என்ற பீஜத்தில் உயிரெழுத்து ‘ஈ’. அதுவும் மூன்று பிந்துக்களால் ஆகியது. மேலுள்ள பிந்து சந்திரன். கீழுள்ளவை சூரியனும் அக்கினியும்.
இவ்வாறு காமகலா தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான். வேறு எண்ணம் இல்லாமல் ஒருமைப்பட்ட மனத்துடன் மூன்று பிந்துக்களையும் தியானம் செய்பவன் பரமானந்தக் கடலில் மூழ்கி வேறெதுவும் காணமாட்டான்
அம்பாளின் சக்தி ஸ்வரூபம் காமகளா என்ற வனப்புடைய உருவம். அம்பாளை அப்படி அழுகு தெய்வமாக மனதில் நிறுத்தி உபாசிக்கும் பக்தன் அம்பாளின் முகத்தை பிந்துவாக காண்கிறான். அம்பாள் அங்க லாவண்யங்கள் அவளது பாதி உருவம் ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அம்பாள் சிவனுடைய உருவமாயிற்றே. அவள் அர்த்தநாரி அல்லவா? அதில் உபாசகன் லயிக்கிறான். அப்படிப்பட்ட உபாசகனை மூவுலகிலும் நேசிப்பார்கள். பிரபஞ்ச காரணியின் அருள் பெற்றவன் அவன்.

அம்பாளின் காமகளா என்கிற உருவம் ஸூக்ஷ்மமானது . இன்னும் அதி ஸூக்ஷ்மமானது குண்டலினி ஸ்வரூபம். அவளை பெரிய பெரிய சிலாவடிவங்களிலும் உபாசிக்கிறோம். இந்த ஸ்லோகம் அம்பாளின் நுண்ணிய காமகளா உருவ வழிபாட்டை போற்றிச் சொல்கிறது. இந்த உருவில் அம்பாளின் பீஜாக்ஷரம் ईं (īṁ).இம். காமகளா ஸூக்ஷ்ம ஸ்வரூபத்தில் அம்பாள் சிவன் கண்ணுக்கு மட்டுமே தெரிவாள். ரொம்பவும் ஸூக்ஷ்மமான குண்டலினி உருவம் ஸஹாஸ்ராரத்தில் தான் புலப்படும். அதில் அம்பாள் காமேஸ்வரன் சிவனுடன் ஐக்யமாகிறாள். காமம் என்றால் விருப்பம் இச்சை. அம்பாளின் இச்சை பரமேஸ்வரன் மட்டும் தான். மஹேஸ்வரன் அம்பாளின் காம ஈஸ்வரன். சிவனின் சக்தியாக அம்பாள் மஹா த்ரிபுர சுந்தரியாக ஜ்வலிக்கிறாள்.ஆகவே சிவசக்தி ஸ்வரூபத்தை தான் காமகளா என்று வழிபடுகிறோம். சென்னை திருவல்லிக்கேணியில் ராஜா ஹனுமந்தலாலா தெருவில் அற்புதமாக ஸ்ரீ காமகளா காமேஸ்வரன் ஆலயம் புராதனமான ஆலயமாக உள்ளது. சென்று தரிசிக்கலாம்.

காமகளா ஸ்ரீ சக்ரஉபாஸனையில் மூன்று பிந்துக்கள். சூரியன், சந்திரன், அக்னியை குறிப்பவை. முக்கோணங்கள். மேலும் கீழுமாக அவைகள் கூடங்கள் எனப்படும். பஞ்சதசி மந்திரம் அதைப்பற்றிய உபாசனை தான். காமகலா தான் பிரபஞ்ச ஸ்ரிஷ்டி காரணம். த்ரிபுரஸுந்தரி என்ற பெயரில் த்ரிபுரம் முத்தொழில்கள் ஸ்ரிஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் மூன்றையும் குறிப்பது. ஸுந்தரி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லவே தேவையில்லை. விவரிக்க முடியாத அழகை கொண்டவள் அம்பாள். ”மஹா” த்ரிபுர சுந்தரி.
ஒளிர்பவள். சிவனுக்கு அதனால் சிவப்பிரகாசம் என்று பெயர்.

அம்பாள் உபாசனை சரியான குருவின் மூலம் உபதேசிக்கப்படுவது. சோடசி மந்த்ரங்களை அப்படித்தான் அறியவேண்டும்.
த்யானம் ஒன்றே அம்பாளை மனதில் நிலை நிறுத்தும். தந்த்ர சாஸ்திரத்தை சேர்ந்தது ஸ்ரீ சக்ரா உபாசனை. அம்பாள் சிவஞானப்ரதாயினி என்று இருப்பதால் பரமேஸ்வரன் ப்ரபாவ த்தை அவள் மூலமாகவே அறியமுடியும். அவளும் அவனும் ஒன்றே தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *