Soundarya lahari 2/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN

ஆனந்த லஹரி 2ம் ஸ்லோகம். பாத தூளி மகிமை

तनीयांसं पांसुं तव चरणपङ्केरुहभवं विरिञ्चिस्सञ्चिन्वन् विरचयति लोकानविकलम् ।
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां हरस्संक्षुद्यैनं भजति भसितोद्धूलनविधिम् ॥ २॥

tanīyāṃsaṃ pāṃsuṃ tava charaṇapaṅkēruhabhavaṃ viriñchissañchinvan virachayati lōkānavikalam ।
vahatyēnaṃ śauriḥ kathamapi sahasrēṇa śirasāṃ harassaṅkṣudyainaṃ bhajati bhasitōddhūlanavidhim ॥ 2 ॥

தநீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹ பவம் விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகாநவிகலம் வஹத்யேநம் ஶௌரி கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸா ஹரஸ் ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளனவிதிம்

நமக்கெல்லாம் தெரியும். இந்த உலகத்தை படைத்த ஸ்ரிஷ்டிகர்த்தா ப்ரம்மா என்று. அவர் எப்படி படைத்தார்? பரமேஸ்வரா, உன் திருவடித் தாமரைகளில் இருக்கும் பாத தூளியிலிருந்து ஒரு துகள், பொடியை எடுத்தல்லவோ இந்த ப்ரபஞ்சம் உருவானது. ஆயிரம் சிரங்களை உடைய ஆதிசேஷன் தனது தலைகளால் பரமாத்மாவே, உன் காலடிப் பொடி யால் உருவான பிரபஞ்சத்தை தாங்குகிறார். ருத்ரன் அந்த பாத தூளி பொடிகளை அல்லவோ புனித விபூதியாக தரித்துக் கொள்கிறார் ன்கிறது இந்த ஸ்லோகம்.

ஸுவாஸினி பூஜையின் போது நதி மணலை வஸ்த்ரகாயம் செய்து வழியில் இறைத்து அதன்மேல் அடிவைது வரச்செய்து பூஜை முடிந்தபின் அம்மணலைத் தேவியின் பாத தூளியாகக் கருதி ஒரு சிறிய பெட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு காலை மாலைகளில் பூஜிப்பார்கள். காலைப் பூஜைக்குப் பின் “தநீயாம்ஸம் பாம்ஸும்” என்ற இந்த 2 வது ஸ்லோகத்தை ஆயிரம் முறையும், மாலை பூஜைக்குப்பின் :அவித்யானாம் அந்தஸ்திமிர த்வீப நகரீ” என்ற ஸ்லோகத்தை ஆயிரம் முறையும் ஜபம் செய்வதுண்டு. இவ்விதம் வஸந்தருதுவிலோ சரத்ருதுவிலோ ஒரு மண்டலம் நியமத்துடன் பூஜையும் ஜபமும் செய்து முடிவில் ஒன்பது ஸுவாஸினிகளை அழைத்துப் போஜனம், வஸ்திரம், ஆபரணம், தக்ஷிணை முதலியவை அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தால், அஷ்டைஸ்வர்ய சித்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *